"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 22, 2019

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கடந்த 14.09.2019 அன்று தொடங்கிய TUT மகாளய பட்ச சேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் நாள் திருஅண்ணாமலையில் சாதுக்களுக்கு அன்னதானம், அடுத்து மருதேரியில் பைரவருக்கு பிஸ்கட் பாக்கெட், அடுத்து கூடுவாஞ்சேரியில் அன்னதானம், அடுத்து கோமாதாக்களுக்கு 5 டஜன் வாழைப்பழம், அடுத்து கோமாதாக்களுக்கு 20 கட்டு அகத்திக்கீரை, கூடுவாஞ்சேரி மாமரத்து ஈஸ்வரர் கோயிலில் நீர் தானம், உத்திரமேரூர் கோசாலையில் 25 கிலோ பசுக்களுக்கு உணவு, நேற்று ஆரணியில் அன்னதானம், இன்று திருஅண்ணாமலையில் அன்னதானம் என்று சென்று கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்படி நம் தளம் சார்பில் மகாளய பட்ச சேவை செய்ய நமக்கு திருஅண்ணாமலையில் உத்திரவு கிடைத்தது.  இது இந்த ஆண்டில் நம் தளம் செய்துள்ள ஒரு பெரிய சாதனை. நாம் எட்டியுள்ள புது மைல்கல்.

அடுத்து நம் தளம் சார்பில் நாம் நடத்தி வரும் அகத்தியர் ஆயில்ய ஆராதனை பற்றி சொல்ல வேண்டும். அதற்காகத் தான் இந்தப் பதிவும் கூட.. மிகப் பெரும் மகான் நமக்கு குருவாக கிடைத்துள்ளார். ஆம். குருநாதர் அகத்தியர் காட்டும் வழியில் தான் நாம் பயணம் செய்து வருகின்றோம். சித்த மார்க்கத்தை நமக்கு தொட்டுக்காட்டி, நம்மை வழிநடத்தி வரும் நம் ஐயனின் பொற்பாதத்தை நாம் நம் தலையில் சுமக்க வேண்டும். ஒவ்வொரு மாத ஆயில்ய பூசை நம் மனதை பண்படுத்துகின்றது. நம்மை இன்னும் உயிர்ப்பிக்க செய்கின்றது. குருவைப் பற்றிய ஒரு பாடல் கிடைத்தது. கீழே பதிக்கின்றோம்.


மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு
             வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று
கையார மனமாற ஞானஞ் சொல்லு
             காரணமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
            பொய்யாதவுபதேச குருவைப்போற்றி
புகழாக பனிரெண்டு வருஷங்காரே


குரு கிடைப்பதெல்லாம் சும்மா அல்ல. ஏதேனும் நம்மிடம் கொஞ்சம் புண்ணியக்கணக்கு இருந்தால் தான் குருவைப் பற்றி,பேச, எழுத முடியும். குறு கிடைப்பதற்கே இப்படி என்றால் குருஉபதேசம் பெற,12 ஆண்டுகள் குரு பதம் பற்ற வேண்டும். இத்தகு குருவிற்கு நாம் மாதம் தோறும் ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம் என்றால் நாமெல்லாம் குருவைப் பற்றியவர்களே.

இதோ.. சின்னாளப்பட்டி அகத்தியர் ஞான குடிலில் நடைபெற்ற பௌர்ணமி பூசை பற்றி தொடர்கின்றோம். சொல்வதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை. நீங்களே பார்த்து தெளிந்து கொள்ளுங்கள்.













குடில் சார்ந்த அன்பர்கள் ஒவ்வொருவராக அமமையப்பருக்கு அபிஷேகம் செய்கின்ற காட்சி இங்கே.




















அடுத்து அகத்திய முனிவ தம்பதியினர் நமக்கு அருள் கொடுக்கும் காட்சி.




தூப தீபத்தோடு பூசை ஆரம்பம்.



















அடுத்து அனைவரும் அகத்தியர் துதிகளை பாடினோம்.








                                      செல்லப்பன் தம்பதியினர் பூசை செய்த காட்சி.






                                         பூசை முடிந்து அனைவருக்கும் தீப ஆராதனை








          நம் குருநாதர் பாலா ஐயா அவர்கள் குருவின் குருவிற்கு பூசித்த போது .


அகத்தியர் வழிபாடு ஆக்கத்தை தரும், அகம் உயர்த்தும். ஆன்ம விசாரம் தரும். ஆன்ம ஒழுக்கம் தரும், சித்தம் புரிய வைக்கும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

புரட்டாசி ஆயில்யம் ஆராதனை அழைப்பிதழ்:
மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம்  புரட்டாசி   மாதம் 8 ஆம் நாள் 25.09.2019புதன்கிழமை   அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  9 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352

  - அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment