"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 31, 2020

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

அனைவருக்கும் வணக்கம்.

பதினெண் சித்தர்கள் வரிசை பற்றி நாம் அறிவோம். இது பதினெட்டு சித்தர்கள் என்று இல்லை. சித்தர்கள் வரிசையில் ஒவ்வொருவரும் ஒருவித நிலையில் அடங்குவர். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள். சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். இந்த வரிசை பற்றி பேசும்போது அருட்பெருஞ்சோதி பற்றி பேசிய வள்ளலார் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் அறிய உள்ளோம். வள்ளலார் என்றதும் நமக்கு அன்னதானம் என்று தான் நினைவிற்கு வரும். ஏன்? இந்த உயிர் வாழ உடம்பு வேண்டும். உடல் இயங்க பசி போக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும் போது, பசியோடு பலர் இருந்திருக்க, ஆன்மிகம் பற்றி சொல்ல முடியுமா என்ன? உண்மையான ஆன்மிகம் மற்றவர் துயர் போக்குதலே. அதனால் தான் வள்ளலார் என்றதும் அன்னசேவை நமக்கு தெரிகின்றது. அன்னசேவை மூலம் இறைவனை காணலாம். ஆன்மிகத்தில் முன்னேற விரும்புபவர்கள் அன்னதானத்தை கையில் எடுத்து பாருங்கள். அன்னதானத்தின் மூலம்  எத்துணை எத்துனை விஷயங்களை சொல்லி, செய்து காட்டி இருக்கின்றார் நம் பெருமானார்.

அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.









பொதுவாக, நாம் பிறப்பு,இறப்பு என்ற எல்லைக்குள் அடங்கிவிடுகின்றோம். ஆனால் மகான்கள் இந்த எல்லையைத் தாண்டி விடுவார்கள். மகான்கள் பொதுவாக அவதாரம் என்று சொல்லுவார்கள். ஆனால் வள்ளலார் அவதாரம் என்ற நிலையையும் தாண்டி, "வருவிக்க உற்றேன்" என்று கூறுகின்றார்.

இது மட்டுமா? நாம் ஏன் பிறந்தோம்? வெறும் கேள்விக்குறி தான். ஆனால் இரண்டே இரண்டு பேர் மட்டுமே தம் பூவுலக வருகையை இங்கே சொல்லி இருக்கின்றார்கள்.அதில் ஒருவர் நம் வள்ளலார்.அவர் கூறுவதை இங்கே அப்படியே சொல்கின்றோம்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.                                         

என்று கூறுகின்றார். இது ஆறாம் திருமுறையில் சொல்லப்படுகின்றது. சரி..இனி வள்ளலாரின் கருத்துக்களை நாம் காண்போம்.


வள்ளலார் கூறும் கருத்துக்கள் வெறும் போதனை அல்ல. நாம் அதனை பின்பற்றி வாழ்வதுவே சால சிறந்தது. எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பர் பின்வருமாறு கூறுகின்றார்.






சன்மார்க்கத்தில் உள்ள அனைவரும் அடைய வேண்டிய நிலைகளாக அன்பு.அருள்,இன்பம் என்ற மூன்றையும் கூறுகின்றார்.




சன்மார்க்கம்..சன்மார்க்கம் என்று சொல்கின்றோமே..சன்மார்க்கம் என்றால் என்ன என்று எளிதாக கூறுகின்றார்.



சைவமா? அசைவமா என்றால் சைவம் தான் தேவை. இதனை வள்ளலார் கூறுவதில் நாம் கேட்க விரும்புகின்றோம். திருவள்ளுவர் போன்ற பெரியோர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டும். இவர்கள் எல்லாம் ஏற்கனவே தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். நாம் மீண்டும் சைவமா? அசைவமா? என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.


வள்ளலாரின் வாக்கு ஒவ்வொன்றும் அன்பின் உயிர்நிலை ஒத்தது. அருளின் ஆழம் பொருந்தியது.







வள்ளலார் அருளிய திருவருட்பா பற்றி பேசும் போது அது ஒரு இறை நூலாகும். இதில் பற்பல சாதனை ரகசியங்களும், சிவ ரகசியங்களும் உள்ளடங்கி உள்ளன. நாம் வெறும் பாடலாக பார்த்தல் அதுவும் வெறும் பாடலாய் தெரியும். ஆழ்ந்து நோக்க, ஆச்சர்யங்கள் வெளிப்படும்.



வள்ளலார் ஒரு பன்முக சிந்தனையாளர் என்பது மேலே உள்ள கருத்துக்களில் இருந்து கண்கூடு.
யாராவது வள்ளலார் பற்றி பேசும் போது, நீங்கள் சொல்லுங்கள்..எங்கள் வள்ளலார் தத்துவ யோகி மட்டுமல்ல. தமிழகத்தில் திருக்குறள் வகுப்பு,முதியோர் கல்வி என சீர்திருத்தம் செய்தவர் என்று.


உலகத்தில் எந்த இடத்திலாவது இப்படி ஒரு மகான் பற்றி கண்டிருப்போமா? கேட்டிருப்போமா? இந்தியாவில் ..அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். நான் உள்ளே 10, 15 தினமிருக்க போகின்றேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தல் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும் படி ஆண்டவர் செய்வார். என்னை காட்டிகொடார் என்று வள்ளலார் கூறி உள்ளார். ஒரு வீட்டின் அறைக்குள் சென்று 10,15 நாள் இருந்து பின்பு தன் உடல்கூட்டை இந்த பரவெளியில் கலக்க விட்டு, இன்றும் அருள் கொடுக்க, யாரால் முடியும்? நம் வள்ளலார் ஒருவரால் மட்டுமே முடியும்.

அவர் வழியிலே பதிவினை முழுமை செய்கின்றோம்.


அருட்பெருஞ்சோதி...அருட்பெருஞ்சோதி...
தனிப்பெருங்கருணை...அருட்பெருஞ்சோதி...

- மீண்டும் சாதனை செய்வோம்.

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

ஸ்ரீலஸ்ரீ அப்பா பைத்திய சாமி திருவடி சரணம் - 20 ஆம் ஆண்டு குரு பூசை அழைப்பிதழ் (01.02.2020)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள், திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள், சுப்புலாபுரம் சற்குரு சுவாமிகள், திருவொற்றியூர் வீரராக சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், மதுரை சோமப்பா சுவாமிகள், பாண்டிச்சேரி தேங்காய் சுவாமிகள், ராம பரதேசி சுவாமிகள், வண்ணார பரதேசி சுவாமிகள் என கண்டு வருகின்றோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். 

சித்தர்களின் தரிசனம் கிடைக்காதா என்று யாரும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இல்லறமாகிய நல்லறத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி வந்து, தங்களின் விருப்பத்தை தங்களின் அருகில் உள்ள உயிர்நிலை கோயிலில்களில் அல்லது தினசரி வழிபாட்டில் வைத்தால் போதும். அனைத்தும் குருமார்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற துவங்கும். சித்தர் மார்க்கம் பார்க்க எளிமையாக தோன்றும்.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது. சித்தன் அருள் பெறுவதும் எளிதன்று. யாரும் பயப்பட வேண்டாம். உங்களை பயமுறுத்துவதும் நம் நோக்கம் அல்ல. சித்தர்கள் விரும்புவது அமைதியைத் தான்.

சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. 


இன்றும் நாம் ஒரு சித்தரின் மகத்துவம் அறிய இருக்கின்றோம்.





சித்தர்கள் வாழ்ந்த பூமியில், புதுவையில் சில காலம் வாழ்ந்தவர் தான் சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள்.அவருடைய குருவான மகான் ஸ்ரீ அழுக்கு சாமியார் ஒருமகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும் தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது

 அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க ஓர் அவதாரம்தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள்.

 சற்குரு ஸ்ரீ அப்பா பைத்திய சுவாமிகளின் இயற்பெயர் முத்து. ஜமீன் பரம்பரையில் பிறந்தவர். செல்வச்செழிப்பில் வளர்ந்தவர். 1859-ம் வருடம் சித்திரைத் திங்கள் 28-ம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில் கரூவூர் ஜமீன் குடும்பத்து வாரிசாக அவதரித்தார்.

 சுவாமிகளுக்கு ஐந்து மாதமிருக்கையில்-பாட்டனார், தன் பேரன் இவ்வுலகை பரிபாலனம் செய்ய வந்துள்ளான் என்று ஜாதகம் கணித்துக் கூறினார். எட்டு மாத குழந்தையான சுவாமிகளை கண்டுணர்ந்த -பசிக்கு ஒதுங்கிய பரதேசி ஒருவர் இது தெய்வக்குழந்தைஎன்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.

 சுவாமிகளின் எட்டாவது மாதத்தில் தன் தாயையும்,பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்தார்.

 தான் என்னதான் சித்தப்பா சித்தி யின் அரவணைப்பில் வளர்ந்திருந்தாலும் -சொந்த பந்தங்கள் அன்பு காட்டினாலும் தன் தந்தையை இழந்தவுடன் தான் தனிமையாகி விட்டதாக உணர்ந்தார். 
இறைவன் மேல் கோபம் கொண்டார்.

 பூஜை அறையில் இருந்த படங்களை போட்டு உடைத்தார். கையில் கிடைத்த சில தங்க நகைகளையும், சிறிது பணத்தையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

எங்கு போவது என்று தெரியவில்லை இருந்தாலும் பழனி செல்லும் வண்டியை பிடித்து பழனி மலையை அடைந்தார்.

 கையில் இருந்த பணத்தைக் கொண்டு தேங்காய் வாங்கி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தார்.



 சற்குரு ஸ்ரீ அப்பா சுவாமிகள் மலையிலிருந்து இறங்கி வெகுதூரம் நடந்து சென்று ஒரு விநாயகர் கோயிலில் வந்து அமர்ந்து கொண்டு அழுதார். அப்போது ஆடையில்லாமல், பிச்சைக்காரர் போன்று அழுக்கான தோற்றமளித்த ஒருவர் வந்து நீ யார் ? ஏன் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய் ? உன் தாய்-தந்தையர் எங்கே ? என்று வினவினார். 

அவர் தான் தவத்திரு ஸ்ரீ அழுக்கு சுவாமிகள். எனக்கு ஊரும் இல்லை, பேரும் இல்லை- தாயும் இல்லை, தந்தையும் இல்லை என்று பயந்து கொண்டே கூறினார் சுவாமிகள். நெஞ்சை தடவி கொடுத்து பயப்படாதே எங்கே போகிறாய் ? என்று கேட்டார் அதற்கு சுவாமிகள் எனது தாய் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி போகிறேன் என்றார்.

 .உனது தாய் தந்தை இருக்கும் இடத்திற்கு, நான் அழைத்து செல்கிறேன் என்னுடன் வா என்று சொல்லி சுவாமிகளை மூன்று நாட்கள் காடு,மலை எனறு எங்கெல்லாமோ அழைத்துச் சென்றார்.

 கடைசியில் ஒரு குகைக்கு வந்தடைந்து -அதனுள்ளிருந்து ஒரு ஏட்டுச் சுவடியை கொண்டு வந்து கொடுத்து சுவாமிகளை படிக்கச் சொன்னார். சுவாமிகள் தனக்கு படிக்கத் தெரியாது என்று சொல்லவே அழுக்கு சுவாமிகள் எப்படி படிக்கவேண்டும் என்று இரண்டு நாள் சொல்லிக் கொடுத்தார். 

மூன்றாம் நாள் சுவாமிகள் கோபம் கொண்டு இதுவெல்லாம் எனக்குத் தேவையில்லை -எனக்கு என் பெற்றோர் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து உண்ணாமல்-உறங்காமல் ஆடையின்றி பாறை மேலேறி படுத்துக் கொண்டார். 

அழுக்கு சுவாமிகள் என்ன உணவு கொண்டு வந்து கொடுத்தாலும் சுவாமிகள் சாப்பிடாமல் இருந்தார்.. ஆனாலும் அழுக்கு சாமிகள் குழந்தையின் பசிக்கு ஆகாரம் கொண்டு வந்து தருவதை நிறுத்தவில்லை.குழந்தை அவரை அடித்தது-கடுஞ்சொல் பேசியது . எதையும் அவர் பொருட்படுத்தவில்லை..நீ ஆண்டவன் குழந்தை -உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் நீ நாட்டுக்கு நல்லது செய்ய வந்து பிறந்துள்ளாய்என்று சொல்லி அவருக்கு உணவும் தந்து உடையும் உடுத்தி விட்டார். 

அவரை வணங்கிய மக்களை குழந்தை தான் தெய்வம்- அதை வணங்குங்கள் என்று சுவாமிகளின் பிறப்பின் இரகசியத்தை அறிவித்து சில நாட்களில் சமாதியானார். தனக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும் மறைந்த பின் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றார்.

 காடு மலைகளை சுற்றி திரிந்தார். பின் பழனி,திருச்சி,விராலி மலை என்று பல இடங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார்.

 சில காலத்திற்கு பிறகு பழனியில் புளிய மரத்தின் அடியில் இருக்கும் பாறையின் மேல் குழந்தை படுத்து இருந்தது . சாது மடத்தில் ஐந்தாயிரம் பேருக்கு சாப்பிட அன்னதானம் செய்து கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் குழந்தையைக் கண்டு இது தன் சகோதரனின் குழந்தைஎன்று உணர்ந்து அப்பா அப்பாஎன்று கதறி அழுதார். 

குழந்தை கிடைக்க வேண்டி ஊரெல்லாம் கோயில் கோயிலாக அன்னதானம் செய்து வந்த அவர், தம் குடும்பத்து வாரிசு-ஒருபைத்தியக்காரனைப் போல காடு மலையெல்லாம் திரிகிறதே என்று வேதனைப்பட்டு கதறினார். 

தன்னுடன் வந்துவிடுமாறு கெஞ்சினார். குழந்தை கேட்கவில்லை. தனக்கு உலகம் முழுதும் தாய்-தந்தையர்கள் உள்ளனர்-அதனால் அவர்களை தேடி தேசாந்திரம் செல்வதாக கூறிக் கிளம்பியது. சுவாமிகள் ஊர் ஊராக சென்றார்.

 மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இன்னருள் புரிந்தார். தன்னை மனதினில் இருத்தி தியானிப்பவர்களுக்கு கஷ்டங்களைப் போக்கி நல்லாசி வழங்கினார். பக்தர்கள் அவரை அப்பா அப்பாஎன்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு பைத்தியம் என்று தான் சொல்லிக் கொள்வார்கள். அதனால் அவர் அப்பா பைத்தியம் சுவாமிகள்என்றே கொள்ளப்பட்டார்.

 சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சேலத்தில் உள்ள சூரமங்கலம் என்ற ஊரில் சற்குரு மாளிகை” (தருகவிலாஸ்) எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள் அசுவினி நட்சத்திரத்தில் சமாதியானார்.

சுவாமிகளின் கோவில் விஷீ ஆண்டு ஐப்பசி திங்கள் 25-ஆம் நாள் 11.01.2001 அன்று தெய்வ தமிழ் முறைப்படி திருமுழுக்கு நீராட்டு விழா இனிதே நடைபெற்றது.  இன்றும் சுவாமிகள்பலர் கனவில் தோன்றி பல நற்செய்திகளையும் நல்லாசிகளையும் வழங்கி பலர் வாழ்வில் மறையாத தெய்வமாக வலம் வநது கொண்டிருக்கிறார்.




இப்பொழுதும் சனிக்கிழமைகளில் மதியம் வரும் அனைவருக்கும் வாழை இலை போட்டு அன்னதானம் சிறப்பாக வழங்கப்படுகிறது.  சுவாமிகளின் 20 ஆம் ஆண்டு குரு பூசை விழா 01.02.2020 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.




ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் போற்றி. போற்றி 

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! - ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசிப்போம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_9.html


ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம்.

நம் குருவின் குருவாக முருகப் பெருமானை நம் தலத்தில் பல பதிவுகளில் கண்டு வருகின்றோம். ஓதிமலை முருகர், வள்ளிமலை முருகன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை முருகர்,தோரண மலை முருகர்,  குராவடி முருகர், செங்கல்பட்டு அருகே செம்மலை முருகன் ,வயலூர் முருகன், மருதமலை முருகன்,சிவன் மலை ஆண்டவர்  என நாம் அருள் பெற்று வருகின்றோம். இந்தப் பதிவையும் ஜீவ நாடி அற்புதங்கள் தொடரில் நாம் எடுத்துக் கொள்ளலாம். 

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாம்  முருகப் பெருமான் பல தலங்களில் அருள் பாலித்து வருகின்றார். முருகப் பெருமான் தமிழ் நாட்டில் பல நாட்டில் அற்புதங்கள் நிகழ்த்தி வருகின்றார். அறுபடை வீடுகள் மட்டுமின்றி பல தலங்களில் நம்மை வழிநடத்தி அருள் பெற அருளாட்சி செய்து வருகின்றார் என்பது கண்கூடு. இது தவிர அவ்வப்போது ஜீவ நாடிகள் வழியாக பல்வேறு தலங்கள் வெளிப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு திருத்தலம் தான் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம். 





ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி திருக்கோயில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை புதுக்காடு கிராமத்தில் அமைத்துள்ளது. இந்த ஆலயத்தில் பின்னே உள்ள மலையை பார்த்தாலே உங்களுக்கு சித்தர்களின் அருள் கிடைக்கும். ஆம். அகத்திய பெருமான் இந்த ஆலயத்தின் பின்னே உள்ள மலையில் சயன கோலத்தில் காட்சி தருகின்றார்.இது முருகப்பெருமான் நாடி மூலமும் அருளாசியாக கிடைத்துள்ளது என்பது அதிசயம் ஆகும்.






இங்கு மூலவர் ஸ்ரீ பாலசுப்ரமண்யர்  மற்றும் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி என்று அருள்பாலிக்கின்றார்.உற்சவராக ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்  என்று காட்சி தருகின்றார்கள்.வள்ளி தெய்வானையுடன் கந்தனின் பாதமும் இங்கே உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.




திருஅண்ணாமலை மீனாட்சி நாடியில் இந்த ஆலயம் 2500 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்பட்டுள்ளது.முருகன் ஜீவநாடியில் தோன்றி அருள்வாக்கு சொல்லும் அற்புத தலம் இது. முருகனின் பாதம் பட்ட தலம் என்றும் ஜீவநாடியில் சொல்லப்பட்டுள்ளது.

அனைத்தும் இங்கே இரண்டாக இருப்பது சிறப்பு.  இரண்டு மூலவர்கள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி மற்றும் பாலசுப்ரமண்யர். இருவருக்கும் முன்பாக இரண்டு வாகனங்கள் மயில் வாகனம் மற்றும் கஜ வாகனம். இரண்டு பலிபீடங்கள் உண்டு. இரண்டு விநாயகர் உண்டு.ஒருவர் வலம்புரி விநாயகர். மற்றொருவர் இடம்புரி விநாயகர். முருகப் பெருமானுக்கு முன்பாக 18 சித்தர்களை குறிக்கும் வண்ணம் 18 அடி வேல் ஒன்றும் உண்டு. இது போகர் தவம் செய்த இடம் ஆகும்.






மாதம் தோறும் அமாவாசை பூசை சிறப்பாக இங்கே நடைபெற்று வருகின்றது. நாம் இன்னும் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள வில்லை. முருகன் அருளுக்காக காத்திருக்கின்றோம். அமாவாசை பூசையில் வராஹி ஹோமம் இங்கே செய்யப்படுகின்றது. இன்னும் ஒரு சிறப்பாக இங்கே வைகாசி விசாகம் அன்று குழந்தைப்பேறுக்கு மருந்து தரப்படுகின்றது. இதுவரை நூற்றுக்கணக்கான அன்பர்கள் இங்கு வந்து வைகாசி விசாக மருந்து பெற்று பெரும் பேறாகிய குழந்தைப்பேறு பெற்று உள்ளார்கள். 

இங்கு முருகப் பெருமான் ஜீவ நாடியில் அனைவருக்கும் வழிகாட்டுவது சிறப்பாகும்.இதன் மூலம் எண்ணற்ற அன்பர்கள் பலன் பெற்று வருகின்றார்கள். உடல் நலம், திருமணம், குழந்தைப்பேறு, ஆன்மிகம் என அனைத்திற்கும் இங்கே தீர்வு உண்டு. ஞான ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் இங்கே வரும் அனைவருக்கும் முருக நாடி மூலம் வழி காட்டி வருகின்றார். 




நாமும் கடந்த மூன்று வருடங்களாக ஞான ஸ்கந்த உபாசகர் மூலம் நம் தல பணிகள்,சேவைகள் மற்றும் நம் இல்வாழ்விற்கு நாடி பார்த்து வருகின்றோம். சென்ற ஆண்டு 2019 ஆண்டில் என் திருமணம் முருகப் பெருமான் ஆசியால் திருச்செந்தூரில் நடைபெற்றது. அனைத்துமே முருகனருள் தான். ஏற்கனவே நம் தலத்தில் ஜீவ நாடி அற்புதங்கள் என்று தொடர் பதிவு அளித்து வருகின்றோம். அனைவரும் படித்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.





இன்றைய சஷ்டி நாளில் முருகப் பெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

உள்ளம் உருகுதையா என்று ஆடிப் பாடி தைப்பூசத்தையும் வரவேற்போம்.

உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
முருகா ஓடி வருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா
பந்த பாசம் அகன்றதய்யா
உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே எந்தன்
ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்
ஆறு திருமுகமும்
அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும் உன்
அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
வீரமிகு தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
உள்ளம் உருகுதய்யா
கண்கண்ட தெய்வமய்யா
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா

இந்தப் பாடல் பற்றி அடுத்த பதிவில் பேசுவோம்.


மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html