"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, January 4, 2020

பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - 13.01.2020

 அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் அகத்தின் ஈசனான அகத்தியரின் பொற்பாதம் போற்ற இருக்கின்றோம். மாதந் தோறும் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அகத்தியருக்கு  செய்து வருகின்றோம். 2017 ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதன் முதலாக இந்த ஆராதனை ஆரம்பம் செய்தோம். 2018 ஆம் ஆண்டு  புரட்டாசியோடு ஓராண்டு முழுமை பெற்றுள்ளோம். குருமார்களின் அருளில் தான் இந்த ஆராதனை இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு பூசைக்கு குறைந்த பட்சம் ரூ.2000 ஆகும். நம் தளத்தில் உள்ள நட்புகள்,உறவுகள் கொடுத்து வரும் பொருளுதவியால் நம்மால் தொடர்ந்து வர முடிகின்றது. இந்த ஓராண்டு பூசை முழுமையில் நாம் இதோ..சித்தர்களின் அருளாலும், குருமார்களின் ஆசியாலும் பஞ்செட்டி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அகத்திய முனிவ தம்பதிகளுக்கு ஆராதனை செய்ய இறையருள் கூட்டி உள்ளது.அதனைப் பற்றி இங்கே தொட்டுக்காட்டவே இங்கு விரும்புகின்றோம்.

பஞ்செட்டி தலத்தை பற்றி சிறு குறிப்புகள்...

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் இது. ஸ்ரீ ஆனந்தவல்லி  சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி


இறைவன் - அருள்மிகு அகத்தீஸ்வரர்

இறைவி - அருள்மிகு ஆனந்தவல்லி

தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்

ஸ்தலம் - பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் )

ஸ்தல விருட்சம்  - வில்வம்

இதர மூர்த்திகள் - சித்தி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் , இஷ்ட லிங்கேஸ்வரர்,பைரவர், அகத்தியர்
இத்திருத்தலம் மிகப் பெரும் ஆன்மிகத் தலம் ஆகும். ஒருமுறை மாமுனிவர்களான வசிஷ்டர்,கௌதமர், கன்வர் ஆகியோர் இந்த புவியில் தவம் செய்ய ஏற்ற இடம் எது பிரம்மாவிடம் முறையிட்டார்கள்.அப்போது பிரம்மா தர்ப்பைப் புல்லில் சக்கரம் செய்து அதை உருட்டினார். அந்த சக்கரம் உருண்டு கடைசியாக நிற்கின்ற இடத்தில் சென்று தவம் செய்க என்றார். அவ்வாறு அந்த சக்கரம் நின்ற இடமே பஞ்சேஷ்டி திருத்தலமாகும்.

இத்தலம் "பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி" என்றும் இன்றளவில் அழைக்கப் பட்டு வருகின்றது.
பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் ) அதாவது அகத்தியர் பெருமானால் இங்கே ஐந்து யாகம் நடந்தமையால் இத்தலம் பஞ்சேஷ்டி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

இந்திரன்- விஸ்வரூபன் சாபம் நீங்கிய தலம் என்று வழங்க பெறுகின்றது. இந்த திருத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும்.  இழந்த சொத்து மீண்டும் கிடைக்க,திருமணத் தடை நீங்க, நவகிரகத் தோஷம் நீங்க, வாஸ்து தோஷம் நீங்க, சத்ரு தோஷம் நீங்க, விரும்பியன கிடைக்க என அனைத்திற்கும் சேர்த்து பரிகார தலமாக இத்திருக்கோயில் விளங்குகின்றது.

 இந்த ஸ்தலம் சென்னையிலிருந்து சுமார் 30 km தூரத்தில் உள்ளது. சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது இந்த இடம். காரனோடை செக் போஸ்ட்  தாண்டி தொடர்ந்து வந்தால் இப்போது கட்டுமானத்தில் உள்ள ஒரு மேம்பாலம் வரும். அங்கே ஒரு U turn எடுத்து விட்டால் தேசிய சாலையின் இந்த பக்கம் (சென்னை செல்லும்) வந்து விடுவீர்கள் . அங்கிருந்து சுமார் 300 டு 400  மீட்டர் தூரத்தில் பஞ்செட்டி arch ஒன்றை காணலாம். அதற்குள் திரும்புங்கள். ஒரு 50 மீட்டர் சென்று இடம் திரும்பினால் கோவிலை காணாலாம்.
இங்கே அகத்தியரை மனதார சதயம் அன்று வேண்டுபவர்கள் எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்று சித்தர் நாடி குறிப்புக்கள் கூறுகின்றன. எல்லா சதயம் நாட்களில் அகத்தியர் பூசை வேண்டுதலும் நடக்கின்றது.

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வென்ஜாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

அகத்தியர் ஏன் இங்கு ஐந்து யாகங்கள் செய்தார் என்று காண்போமா?
ஒருமுறை திருக்கைலாயத்தில் சிவபெருமான் அங்கிருந்தோருக்கு சிவ தத்துவத்தை போதித்துக் கொண்டிருந்தார்.அப்போது சிவன் அருகில் பார்வதி தேவியும் இருந்தார்கள்.இந்த நேரத்தில் அங்கிருந்த சுகேது என்ற பரம்பொருளிடம் "பெருமானே! பார்வதிதேவியை அருகில் வைத்துக் கொண்டு சிவத்தத்துவத்தை எங்களுக்கு விளக்குவது சரி தானா ?" என்று கேட்டார். நம்மவர் சற்று புன்னகைத்தார். அருகிலிருந்த வேலனுக்கு கோபம் வந்துவிட்டது. சிவன் பாதி,சக்தி பாதி..அம்மையப்பர் இருவரும் சரிசமமே என்று தெரிந்தும் இப்படியொரு வினா தொடுத்த சுகேதுவை அசுரனாக பிறக்கும்படி கந்தவேல் சபித்தார்.

சுகேது அசுரனாக பிறந்தான். அசுரப்பெண்ணை மணந்து மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தான். அந்த மூன்று குழந்தைகளும் தந்தையின் சாபம் பற்றி அறிந்து, பராசத்தி நோக்கி  தவம் புரிந்து, அளவற்ற ஆற்றல்களைப் பெற்றனர். இந்த ஆற்றல்களின் துணை கொண்டு தேவர்களை வென்று, அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தனர்.

தேவர்கள் இது பற்றி அகதியப்பெருமானிடம் முறையிட்டனர். அவர் சிவனை வேண்டினார். சிவனார் அவரின் முன்பு குடும்ப சகிதமாக தோன்றி தேவையான ஆற்றலை வழங்கினார். 

இந்நிலையில் அசுரன் சுகேது மகிஷாசுரண்யம் என்ற வனத்தில் இருந்த மத்தன்,உன்மத்தன்,பிரமதத்தன் எனும் ராட்சதர்களுடன் போரிட்டுத் தோற்று கடலுக்கடியில் சென்று மறைந்தான். சுகேதுவின் மூன்று புதல்வர்களும் தங்கள் தந்தையைத் தேடி கடலைக் கலக்கினர்.இதனால் கடல்வாழ் உயிர்கள் அஞ்சி நடுங்கினர். உலகில் பிரளயம் ஏற்பட்டு, உயிர்கள் துன்புற்றன.
இந்த தருணத்தில் அகத்திய முனிவர் தன் ஆற்றலால் கடல்நீர் முழுவதும் பானகம் போல் குடித்துவிட்டார். கடல்நீர் இல்லது நிலம் வறண்டது. மீண்டும் தேவர்கள் கடலை உருவாக்கும்படி அகத்தியரிடம் வேண்டினர். அஃதையர் பஞ்சேஷ்டி தலத்தில் சிறிது நீரை உமிழ்ந்தார். பின் மீதி நீரை கடல் இருந்த இடத்தில உமிழ்ந்தார்.அவர் உமிழ்ந்த நீர் உள்ள இடமே இன்று திருக்குளமாக உள்ளது.இந்த குளம் "அகத்தியர் உமிழ்நீர்த்தீர்த்தம் " என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வு வைகாசி பௌர்ணமி அன்று நடைபெற்றது.எனவே ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பௌர்ணமி நாளில் கங்கை நதியே இங்கு கலப்பதாக ஐதீகம்.
அகத்தியரின் வயிற்றில் அகப்பட்ட சுகேதுவும், அவனது புதல்வர்களும் அகத்தியரிடம் பிழை பொறுத்து அருளும்படி வேண்டினர். அகத்தியர் அந்த நால்வரையும் அந்த திருக்குளத்தில் மூழ்கி எழ செய்தார்.பிறகு இவர்களுக்காக தேவ யாகம், பிரம்ம யாகம், பிதுர் யாகம்,பூத யாகம் மற்றும் மானுட யாகம் என்று ஐந்து யாகங்களை செய்து அருளினார்.இந்த ஐந்து யாகங்களின் பிரசாதத்தை விபூதியாக அவர்களுக்கு பூசி பரமபதம் அருளினார். இவ்வாறாக சுகேது மற்றும் அவரின் மூன்று புதல்வர்களுக்காக அகத்தியர் பெருமான் ஐந்து யாகங்களை செய்த திருத்தலம் தான் பஞ்சேஷ்டி.


இதுமட்டுமா ? இன்னும் பல சிறப்புகள் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் உண்டும். தக்க நேரத்தில் பஞ்செட்டி திருத்தலம் பற்றி குருவருள் இன்னும்  சொல்ல வேண்டுகின்றோம்.





பஞ்ஜேஷ்டி  அருள்மிகு  ஆனந்தவல்லி  சமேத  அகத்தீஸ்வரர் திருக்கோயிலில்
நிகழும்  மங்கலகரமான  விகாரி ஆண்டு   மார்கழி மாதம் 28ம்நாள் (13.01.2020) திங்கள்கிழமை ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு  ஆயில்ய நக்ஷத்திரத்தை (ஜன்ம நக்ஷத்திரம்) முன்னிட்டு  ஶ்ரீஅகஸ்தியர் ஜெயந்திவிழா நடைபெற இருக்கிறது.பூஜைக்கு வரும் அன்பர்கள் தங்களால் இயன்ற அளவில் உதிரிப்பூக்கள்  கொண்டு வர வேண்டுகின்றோம்.

நிகழ்ச்சிகள்:
                           
காலை  9மணி முதல்  ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு


  • சிறப்பு  மஹா அயிஷேகம் 
  • சிறப்பு அலங்காரம்  
  • பலவகையான  வாசனை மலர்களைக் கொண்டு  சிறப்பு மலர்வழிபாடு (புஷ்பாபிஷேகம்) 
  • உலக நண்மையை வேண்டி  கூட்டு ப்ரார்தனை
  • மஹா தீபாராதனை மற்றும் அன்னப்ரசாதம் விநியோகம்            


அனைவரும் வருக   அகத்தீசன் அருள் பெருக!

அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

TUT தளம் கொண்டாடிய பஞ்செட்டி சதய பூசை விழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2019.html

குருமார்களின் பாதம் பணிந்து - TUT சதய பூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/tut_11.html


பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html


TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html


சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html


சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html


வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

No comments:

Post a Comment