"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, December 12, 2019

TUT தளம் கொண்டாடிய பஞ்செட்டி சதய பூசை விழா - 2019

அனைவருக்கும் வணக்கம்.


குருவருள் இன்றி திருவருள் எது? குரு தானே நமக்கு இறையத் தொட்டுக்காண்பிக்கின்றார். வருடம் தோறும் TUT குழுவின் சேவைகளில் முக்கிய ஒன்று பஞ்செட்டி சதய பூசை. இந்த ஆண்டு நாம் கொண்டாடிய பஞ்செட்டி சதய பூசை விழா பற்றி இந்தப் பதிவில் காண இருக்கின்றோம்.
சென்ற ஆண்டில் TUT குழுவின் சார்பில் புரட்டாசி  மாதம் 7 ஆம் நாள் (23.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று சதய பூசை வழிபாடு நடைபெற்றது. இந்த ஆண்டும் விடுமுறை தினத்திற்காக காத்திருந்தோம். ஆனால் குருவின் அருள் நம்மை வேறு மாதிரி வழிநடத்தியது.

இந்த ஆண்டு ஆடி மாதம் 31 ம் நாள் (16.8.2019) வெள்ளிக்கிழமை அன்று பஞ்செட்டி சதய பூசை நமக்கு கொடுக்கப்பட்டது. அன்றைய தினம் காலையிலேயே கோயம்பேடு என்று கொஞ்சம் மலர்கள் வாங்கி வந்தோம்.இருப்பினும் நம் மனத்தில் திருப்தி இல்லை. எனவே மீண்டும் ஒரு முறை கோயம்பேடு சென்று மலர் வாங்க திட்டமிட்டோம்.

அன்றைய தினம் சுமார் 11 மணி அளவில் கூடுவாஞ்சேரியில் இருந்து மகிழுந்து (கார்) மூலம் 
புறப்பட்டோம். செல்லும் வழியில் சில அகத்திய அடியார்களை இணைத்துக் கொண்டோம்.



அன்றைய தினம் காலை 16.08.2019 அன்று ஏக தின லட்சார்ச்சனை நடைபெறுவதாக நமக்கு செய்தி கிடைத்தது. இது நமக்கு மேலும் உற்சாகம் தந்தது. சுமார் 5 நபராக கோயம்பேடு சென்று மீண்டும் மனோரஞ்சிதம், பச்சை, தாமரை என ஒவ்வொரு மலராக பார்த்து பார்த்து வாங்கிவிட்டு கோயிலுக்கு சென்றோம். அப்போது தான் நமக்கு செல்லும் வழியில் காவாங்கரை கண்ணப்பர் தரிசனம் செய்ய அங்கே சென்றோம். நல்ல முறையில் தரிசனம் செய்தோ,. அங்கே முருகப்பெருமானும் அகத்திய பெருமானும் குருவும் குருவின் குருவும் நிலையில் நமக்கு ஆசி தந்தார்கள். 




        அகத்திய பெருமானும் முருகபெருமானும்... கண்ணப்ப சித்தர் ஜீவசமாதி ஆலயத்தில்

அடுத்து கண்ணப்பர் சித்தர் ஆலயத்தில் மதிய உணவு உண்டோம், பின்னர் மதியம் சுமார் 3 மணி அளவில் பஞ்செட்டி சென்றோம். பூசைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கோயிலில் சேர்ப்பித்தோம்.






நம் தளம் சார்பில் தூய நல்லெண்ணெய் வழங்கினோம். அடுத்து மலர்களை தொடுக்க ஆரம்பித்தோம்.


சிறிய அளவில் உழவாரப்பணியும் செய்தோம்.



அன்று உழவாரமும் நடைபெற்றதை மேலே நீங்கள் காணலாம். உழவாரப் பணி என்றால் கூட்டம் சேர்த்து செய்ய வேண்டியது என்று நீங்கள் எண்ண வேண்டாம். கூட்டத்தில் ஒன்றாய் இருப்பினும் நீங்கள் கோயிலில் ஒரு சிறு தூசியைத் துடைத்தாலும் அது உழவாரப் பணியே.




கோயிலை முழுதும் நம்மால் முடிந்த வரை தூய்மை செய்த பிறகு, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் சேவையில் ஈடுபட்டோம்,







கண்ணைக்கவரும் பல வண்ணங்களில் பூக்கள் ஏற்பாடு செய்தோம்.


அடுத்து நம் நண்பர் திரு. நாகராஜன் ஐயா அவர்கள் அன்று காலை முதல் கோயிலில் சேவை செய்தார்கள்.எனவே மாலை விடைபெறுவதாக சொன்னார்கள். இன்றைய கால சூழலில் கோயில் போன்ற இடங்களுக்கு வருவதே பெரிது. அதிலும் காலை முதல் சேவை செய்திருக்கின்றார் என்றால் இதுவே சேவை ஆகும். எனவே அவரை விளக்கேற்ற கூறினோம்.





உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஆனந்தமாக வாழ வேண்டி விளக்கேற்றினோம்.


பூக்களா..பல வகைகளில் ..பல நிறங்களில் என்று .




வாழைப்பழம், உலர் பழங்கள் என்று ஒரு தட்டில் நிறைத்தோம்.







நம் அப்பனுக்கு மூலிகை சாறு அபிஷேகம் செய்ய மூலிகை பொடிகளை கலந்தோம். அன்று நடைபெற்ற திருவிளக்கு பூசை காட்சிகள் இதோ...








ஒருமுறை அனைத்து முன்னேற்பாடுகளும் சரியாக உள்ளதா? என்று சரிபார்த்தோம். நேரம் வேறு 6 மணி அளவில் நெருங்கி கொண்டு இருந்தது.,


இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அபிஷேகம் தொடங்கியாகி விட்டது. இம்முறை சற்று அக வழிபாட்டில் இருந்தமையால் காட்சி பதிவுகள் எடுக்க இயலவில்லை. 

அபிஷேகம் முடித்து,தீபாராதனை காட்டிய உடன், சங்கல்பம் செய்ய கேட்ட போது நாம் லோக க்ஷேமம் என்று கூறினோம்.  அடுத்து அன்னம்பாலிப்பு தான். அன்றைய தினம் அகத்தியரின் தரிசனம் இதோ..அனைவருக்கும் தரப்படுகின்றது. கிரீடம் வைத்து ராஜாவாக தரிசனம் கண்டோம். இந்த தரிசனம் காண இந்த உயிர் எத்தனை நாள் ஏங்கியது? என்று யாருக்கு தெரியும்.












அன்றைய பூசையில் TUT குழுவின் மூலம் தான் பூசை/அபிஷேகப் பொருட்கள் கொண்டு வர சொன்னோம். அனைத்தும் அதிகமாக இருந்தது. பூக்களா? இரண்டு, மூன்று வண்ணங்களில், பஞ்சாமிர்தமா? ஒரு பெரிய தட்டு நிறைய..கடைசியில் கொடுத்த அன்னமா ..சுமார் 10 வித அன்னங்கள்..உயரிய சுவையில்..இவ்வாறு நம் உடல்,பொருள் தாண்டி நாம் கொடுத்தோம். 

அன்றைய அன்னதானத்திற்காக நம் சார்பில் இனிப்பு வரிசையில் கேசரி செய்தோம். ஆனால் கேசரி மீதம் இருந்தது. அடுத்த நாள் காலை கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள ஒரு தொண்டு இல்லத்தில் கொடுத்தோம். இவ்வாறு அன்றைய தினத்தில் நம் குருவின் திருவிளையாடல் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அகத்தியரும் முருகப் பெருமானின் பரிபூரண தத்துவத்தை அங்கே காட்டி, அங்கே வந்த அனைவரையும் கண் திறந்து பார்த்தார். அவரின் கடைக்கண் பார்வை பட்டபின் ... என்ன வேண்டுவது? அன்பே..அகத்தீசா? யாமொன்றும் அறிந்திலோம். 




வாழ வழி காட்டும் அகத்தியருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து சென்றோம். இதே போல் அடுத்த பூசைக்கு நாம் 2020 ஆம் ஆண்டிலும் காத்திருக்கின்றோம்.

விரைவில் பஞ்செட்டி அகத்தியர் பதிவு தரவும், திருக்கல்யாண பதிவு தரவும்  குருவிடம் வேண்டுகின்றோம்.


மீள்பதிவாக:-


TUT தளம் கொண்டாடிய பஞ்செட்டி சதய பூசை திருவிழா - https://tut-temples.blogspot.com/2019/05/tut.html


 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

    அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

No comments:

Post a Comment