அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அன்னை வள்ளி அவதரித்த இடம் வள்ளிமலை. மலையடிவாரத்திலும் மலை மீதும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது திருப்புகழ் பாடப்பெற்ற தலம். முருகன் பாதம் தோய்ந்த இடம். அந்த ஒரு சிறப்பே போதுமே இந்த மலையின் புனிதத்துவத்தை சொல்ல…!
வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இதற்கு முந்தைய பதிவுகளில் வள்ளிமலை கிரிவலம் முடித்து மலை ஏறிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மண்டபத்தில் இருக்கும்போது பதிவை முழுமை செய்தோம். இதோ மீண்டும் அங்கிருந்து தொடர்வோம்.
வள்ளிமலை தரிசனம் பெற நீங்கள் மலை ஏறும் போது நாம் இளைப்பாற ஒரு மண்டபம் வரும். இது சாதாரண மண்டபம் அல்ல. இங்கே சித்தர்களின் சூட்சும தரிசனத்தை உணரலாம்.இதை யாம் சொல்லவில்லை. தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் தான் இதை கூறினார்.வள்ளிமலை கோயிலின் திருப்பணியின் போது நேரில் உணர்ந்து சுவாமிகள் நமக்கு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடம் தான் சித்தர்களின் அருளை உணரும் இடம். கூட்டத்தோடு கூட்டமாக சென்றால் நமக்கு ஒன்றும் புரியாது. காலை சுமார் 7 மணி அளவில் தனிமையில் இங்கே சென்று விளக்கேற்றி சித்தர்களை மனதில் நினைத்து தியானியுங்கள். ஆற்றலை நீங்கள் உணர்வீர்கள். நாமும் இங்கே விளக்கேற்றி வழிபாடு செய்தோம்,
சிறிது நேரம் கழித்து , மேலே மலை ஏறினோம். இங்கே படிக்கட்டுகள் இருப்பதால் மலை ஏற வசதியாக உள்ளது.
இன்னும் சற்று தூரம் தான் போலிருந்தது. இதோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் நுழைவாயில் தெரிகின்றது.
நாம் சென்ற போது கொடிமரம் இல்லை. இதோ வள்ளியம்மை சன்னிதி உள்ளே சென்றோம்.
அடுத்து நம் முருகப் பெருமான் தரிசனம் தான்.
ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்
என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம்.
இதோ .வள்ளிமலை ஆண்டவர் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து விட்டோம். இங்கே படியின் மூலம் மீண்டும் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம்.
அடுத்து மலையில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினோம். வள்ளிமலையில் திருப்புகழ் ஆஸ்ரமம் இருப்பதாக கேள்விப்பட்டோம் .எங்கே ? எப்படி செல்வது என்று தெரியவில்லை.
அப்போது தான் அங்கே கீழே இறங்கிய பாதையில் ஒரு கிளைப் பாதை பிரிந்தது, மேலும் அங்கே விசாரித்தோம்.இந்த பாதை வழியே செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அட..காட்டுக்குள்ளே திருவிழா என்பது போல் இருந்தது. கற்கள்,மண் கொண்ட பாதை வழியே நடக்க தொடங்கினோம்.
இந்த பாதை வழியே நடக்கும் போது மனம் ஆனந்தக் கூத்தாடியது. இந்த பசுமை நமக்கு எங்கே கிடைக்கும்? நகர வாழ்க்கையில் இருந்து சற்று மனதுள் பசுமை தருவது இது போன்ற மலை யாத்திரைகளே.
நீங்கள் எந்த கடவுளை வழிபட்டாலும் நீங்கள் இது போன்ற பாதையில் செல்லும் போது கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்றோ, உங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் ஓதியோ நடக்க, வலி தெரியாது. நடக்க நடக்க இன்பமாகும்.
சற்று தூரத்தில் கற்கள் கொண்ட பாதை வந்தது. இது போன்ற யாத்திரை நம் உடல்நலம் பற்றி நம்மிடம் பேச வைக்கும். நம் மன நலம் பற்றியும் பேசும்.
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

இந்த நுழைவாயில் கடந்ததும் திருக்கோயில் தான். முருகா என்று வேண்டினோம்.

அப்படி என்ன தான் இருக்கின்றது வள்ளிமலையில் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை மிக மிக பிரசித்தி பெற்றது. மலை என்றால் வலம் செல்வது நன்றாம். இங்கு கிரிவலம் செல்வது நம் வளங்களை தரும் என்பது திண்ணம். திருஅண்ணாமலை போன்று வணிக கடைகள் கிரிவலப் பாதையில் இல்லை. எனவே நாம் நம் விருப்பப்படி கிரிவலம் செல்லலாம். சுமார் 1 மணி நேரம் போதுமானது. இயற்கை காற்று, பசுமை காட்சிகள், வள்ளி பிறந்த இடம் என அனைத்தும் ஒருங்கே சேரும் போது வள்ளிமலை ...வளங்களை அள்ளித்தரும் மலை தான்.
வள்ளிமலை பற்றி அருணகிரிநாதரும், வாரியாருக்கு சொன்னதை படித்தீர்களா? திகட்டாத இன்பம் தருவது வள்ளிமலை. யாரெல்லாம் பெண்களுக்கு தோஷம் செய்து இருப்பதாய் உணர்கின்றீர்களோ, அவர்கள் அனைவரும் வள்ளிமலை முருகனிடம் சரண் அடையுங்கள்.
தொடர்பதிவில் மீண்டும் சந்திக்கின்றோம். வள்ளிமலை தொடர்பதிவில் இனிமேல் தான் சிறப்பான தரிசனங்கள் உண்டு.
ஓதியப்பர் பிறந்த நாளை வள்ளி மலையில் “தேடல் உள்ள தேனீக்களாய்” குழுவின் சார்பில் அன்னதானம், அபிசேகம், தீபமேற்றல் என கொண்டாடினோம். வழி நடத்தும் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு ஓதிமலையும்,வள்ளிமலையும் என்ற தொகுப்பையம் மீள்பதிவில் கீழே தருகின்றோம்.
மீள்பதிவாக:-
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html
No comments:
Post a Comment