"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 31, 2019

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள்

தள வாசகர்களே.


TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் அனைவருக்கும் 2020 ஆம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம்,உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல குருவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.



தமிழ் புத்தாண்டா? ஆங்கில புத்தாண்டா? என்று பட்டிமன்றம் நடத்த நாம் விரும்பவில்லை. உலகமே கொண்டாடும் இன்றைய நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால் எப்படி கொண்டாடுகின்றோம் என்பதில் தான் விஷயம் உள்ளது. இன்றைய நாளை,விடுமுறை தினத்தை நாமும் வழக்கமாக தொலைக்காட்சி, சினிமா என்று கொண்டாடாது, குடும்பம், உறவுகள் என சுற்றம் சூழ, மூத்தோர் ஆசி பெற்று, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். 




இதோ திருஅண்ணாமலையில் TUT  குழுவின் அன்னதானம் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்தும்  குருவின் கருணையாலே. குருவருளின்றி திருவருள் கிடைக்குமா? தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று நாம் நம் உறவுகளோடு ஆலய தரிசனம் பெற தீர்மானித்துள்ளோம். எண்ணத்தை விதைத்தாகி விட்டது, பிறகென்ன? எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.




அனைவரும் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் கேட்டிருப்பீர்கள். கந்த குரு கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் மிக மிக ஞானம் போதிப்பவை. 




உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
 அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்







நம் தளமும் அன்பையே துணையாக கொண்டு பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்பின் ஆழம் தான் அனைத்தும், அன்பே கடவுள்.எளிய சித்தாந்தம் தான். சொல்லக்கூடிய வேதாந்தம் தான். எந்த மார்க்கத்தில் சென்றாலும் அன்பைத் தான் நாம் கைவரப் பெற இருக்கின்றோம். இதற்கு மேல் எளிமையாக சொல்ல முடியாது. நம் தளம் துவக்கிய நாளில் இருந்து நமக்கு உதவிய, தற்போது உதவிக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளை முருக சிந்தனையில் திளைக்க செய்ய விரும்புகின்றோம்.

கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் தாண்டி ஒரு அருமையான பாடலை நாம் கேட்டோம். அனைவருக்கும் தெரிந்த பாடலாக இருக்கலாம். எம்மைப் போன்ற சிறியோனுக்கு இந்த பாடல் புதிது தான். இது போன்ற பாடல்களை எப்படியாவது சேர்த்து வையுங்கள்.




பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே

கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம்


புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்

1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.

2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்

3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்

4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.

5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.

6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
          
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கும். நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள். ஆக இதற்கெல்லாம் கவலைப்
படாதீர்கள்.

8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ அல்லது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்   அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள் 

9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.   

10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்
பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள் 

11. சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லப் பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும். 

12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.

13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள். 
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.

14. வாரத்திற்கு ஒரு முறையாவது தாய் தந்தையிடரிடம், மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச நேரம் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.

15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். "ஓலா"எப்படி புக் செய்வது  "யூபர்" (Ola, Uber Taxi) டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி விடுங்கள்.

16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாகவோ அல்லது கதை எழுதுவதாகவோ சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது, வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
      
18  எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள்.சிரித்து வாழுங்கள்..

நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும். அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள் என்று அன்போடு கேட்டு
கொள்கிறேன்.


இவற்றை முயற்சி செய்தால் 2020 மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன்  இருக்கும்..மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.







அட..மேலே உள்ள இணைப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தால் நமக்கு தெரிவியுங்கள் என்று சென்ற ஆண்டில் சொல்லி இருந்தோம். ஆம் சென்ற 2019 ஆண்டில் நாம் வள்ளிமலை சென்று இருந்தோம்.இந்த ஆண்டில் எந்த ஏற்பாடும் இல்லை. கூடுவாஞ்சேரி அறிவுத்திருக்கோயிலுக்கு சென்று வந்தோம். உலகில் உள்ள அனைவரும் சிறப்பாக வாழ வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினோம்.

முருகா சரணம்
குமரா சரணம்
குருவே சரணம்
திருவே சரணம்

முந்தைய பதிவுகளுக்கு :-

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment