அனைவருக்கும் வணக்கம்.
நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். சித்தர்களை நாம் குருவாகவும் சிந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் இங்கு நாம் இந்தப் பதிவைத் தான் இன்று தர இருக்கின்றோம் என்று எதுவும் தீர்மானம் செய்வது இல்லை. அனைத்தும் அவன் தாள் வணங்கி என்று தான் செயல்பட்டு வருகின்றோம். இந்த ஆண்டு மகாளய பட்ச சேவை நாம் தினமும் செய்வோம் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து 14 ஆம் நாள் செய்து வந்துள்ளோம். நம் தலத்தில் தீபாவளி சேவையும் சிறப்பாக நடை பெற்றது. அனைத்தும் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இன்றைய குரு தரிசனம் பதிவாக ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைய உள்ளோம்.வழக்கம் போல் பதிவின் இறுதியில் ஒரு முக்கிய அறிவிப்பு தர உள்ளோம்.
பைரவ பூஜை செய்த பாடகச்சேரி சுவாமிகள்:
கால பைரவர் நாயை வாகனமாகப் பெற்றுள்ளார். நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் ஈசன் அருளால் பெற்றுள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் முன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.
கால பைரவ வழிபாட்டை முறையாக செய்து மக்களுக்கு நல்வாழ்வு அளித்தவர் நமது பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாமல், நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே சுவாமிகள் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், இனிப்பு, அப்பளம், பாயசம் என அனைத்து உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்.
சுவாமிகளின் வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் அவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் சுவாமிகள் கால பைரவரை பிரார்த்தித்து, 'சுந்தரம்களா' என்று அழைப்பார். அதன் பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் வருவது வழக்கம்.
இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் பாடகச்சேரி சுவாமிகள் அன்புடன், உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே அவர் அழைத்த பைரவர்கள் உணவை ஏற்பர். அதன் பின்னர், வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயும் வெளியே சென்று விடும். எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம்.
மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.
இவ்வாறு சுவாமிகள் பைரவரின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்ததிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது புலனாகிறது. இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே காலபைரவர் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளார் என்பதும் தெளிவாகிறது.

இனி அடுத்த நிகழ்வைத் தொடருவோம்.
பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் குருநாதர் ஸ்ரீ எரிதாதா (Yerrithatha) சுவாமிகள் கர்நாடக மாநிலம் பெல்லாரி(Bellary) மாவட்டத்தில், ஆந்திர எல்லையில் உள்ள செல்லகுர்க்கி(Chellagurki) என்ற ஊரில் 25 வருடம் வாசம் செய்து 1922 ல் தன் 100 வது வயதில் ஜீவ சமாதி அடைந்தார்.
குருவின் சமாதிக்கு பாடகச்சேரி சுவாமிகள் அவ்வப்போது செல்வது வழக்கம். ஒருமுறை சென்றபோது திருச்சி அன்பர் சூளியத்தையா குடும்பமும் சென்றுள்ளது. அவ்வாறு சென்றபோது, சூளியத்தையா மனைவிக்கு மலேரியா ஜுரம் வந்துவிட்டது. மேலும் வயிற்றில் கட்டியும் உருவாகியுள்ளது. அதனுடன் 10 மாதம் தொடர்ந்து கஷ்டப்பட்டார். பிழைப்பது கடினம் என்றும் கூறியுள்ளனர்.
10 மாதம் கழித்து இராமலிங்க சுவாமிகள் ஒரு நாள் சூளியத்தையா வீட்டிற்கு வந்தார். அப்போது அவரின் மனைவி சுவாமிகளின் பாதத்தை பிடித்துக் கொண்டு உயிர்ப் பிச்சை கேட்டார். சுவாமிகளோ ஒன்றும் சொல்லாமல் எழுந்து, இன்னொரு அன்பர் வீட்டிற்குப் போய்விட்டார்.
அங்கு ஒரு மேஜையில் படுத்தபடி நண்பரிடம் அரை படி விளக்கெண்ணெய் கொண்டுவரச் சொல்லி, 4 பலமான ஆட்களை தன் வயிற்றில் பலம் கொண்ட மட்டும் எண்ணெய்யை தேய்க்க சொன்னார். பிறகு சுவாமிகள் ரசம் சாதம் கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டார்.
அதேநேரம் சூளியத்தையாவின் மனைவிக்கு சகல துன்பமும் அடங்கிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அதிசயமாக பூரண குணம் பெற்றவராக எழுந்து உட்கார்ந்தார். வயிற்றை தொட்டுப் பார்த்தார். கட்டி கரைந்திருந்தது. மலேரியா காய்ச்சலும் பறந்து விட்டது.
"நன்மை பிறர்க்களித்து
நஷ்டத்தை தான் ஏற்று
இன்பம் அடைவர்
ஈசன் நிலை அறிந்தோர்" என்ற கருத்திற்கேற்ப தனது சீடரின் துன்பத்தைத் குருவே ஏற்று குணப்படுத்தி உள்ளார். என்னே சுவாமிகளின் கருணை!
10 மாதத்திற்கு முன்பே சுவாமிகள் இந்த கட்டியை குணப்படுத்தி இருக்கலாமே? சூளியத்தையா குடும்பத்தின் கர்மவினைகள் சிறிது காலம் கழியட்டும்! என்று காத்திருந்தாரோ?
சென்னை கிண்டி இரயில் நிலையத்தில் உள்ள பாடலீஸ்வரர் தரிசனம் உங்களுக்காக தருகின்றோம். அடுத்த முறை கிண்டி செல்லும் போது, நேரில் சென்று தரிசிக்கவும்.
இன்று ஸ்தபதி கூறிய நிகழ்வு நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
அடியேன் இரா. சிவக்குமார் MBA., MA., Ph.D. சிற்பி, அடியேன்தான் கிண்டி பாடகச்சேரி சுவாமிகளால் நிர்மானிக்கப்பட்ட பாடலீஸ்வரர் கோயிலுக்காக, பாடகச்சேரி சுவாமிகளின் பஞ்சலோக திருமேனியை செய்துவருகிறேன் .
பைரவ சித்தர் மகான் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் இன்று என் அளவில் நடத்திய திருவிளையாடல் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறன்
இன்று காலை மகான் பாடகச்சேரி சுவாமிகளின் பஞ்சலோக சிலையில் பாலிஷ் வேலை செய்வதற்காக மேற்படி சிலையை எனது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன், அப்போது ஒரு நாய் எனக்கு முன்னும் பின்னுமாக சென்றது, முதலில் நான் அதை கவனிக்கவில்லை, அது கும்பகோணம் வரை என்னுடனே தொடர்ந்து வந்தது,அப்பொழுதுதான்
அது என்னை தொடர்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன், அதோடு அல்லாமல் வழியில் நின்ற நாய்களலெல்லாம் என்னை ஒரு மாதிரி கனிவோடு உற்று நோக்கின, இது எனக்குள் ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தியது.
கும்பகோணத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு, கும்பகோணம் அருகில் முத்துபிள்ளை மண்டபம் என்ற இடத்தில் சுவாமிகள் கட்டிய சுவாமிகளின் கோயிலுக்குச் சென்றேன்,. அங்கு ஒரு நாய் என்னை கண்ட வுடன் வாலை ஆட்டிக்கொண்டு என் அருகில் வந்தது, நான் அதனிடம் " உன் சாமி எனது மோட்டார் சைக்கில் உள்ளார்" என்று கூறினேன், உடனே அது எனது வண்டிக்கருகில் சென்று என் வண்டியையே சுற்றி வந்தது, அதுமட்டுமல்லாமல் என்னை தொடர்ந்து வந்த நாயும், வேறு இரண்டு நாய்களும் அந்த வண்டியை சூழ்ந்து நின்று அந்த இடத்தை விட்டி நகராமல் நின்றன, பொதுவாக வேறொரு பகுதியில் இருக்கும் நாயை அந்த பகுதி நாய்க்கு பிடிக்காது, வேறொரு பகுதி நாய்களை இங்குள்ள நாய்கள் துரத்திவிடும், ஆனால் இங்கு 4 நாய்களும் ஒற்றுமையாக நின்றிருந்தன, என்னே! சுவாமிகளின் மீது அவற்றிக்கு அளவற்ற பக்தி,
பின்பு நாச்சியார் கோயில் திரும்பினேன், என் உடன் வந்த நாய், நாச்சியார் கோயில் வரை வந்தது, பின்னர் அதை காணவில்லை.இந்த நிகழ்வு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வரும் 15 தேதி கிண்டி கோயிலில் சுவாமிகளின் அச்சிலையை பிரதிஷ்டை செய்கிறேன், மெய்யன்பர்கள் இந்நிகழ்சியில் கலந்துகொண்டு சுவாமிகளின் அருள் பெற வேண்டுகிறேன்
ஒரு முக்கிய அறிவிப்பு என்று சொல்லி இருந்தோம் அல்லவா? இதோ வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.
பாடகச்சேரி சுவாமிகளின் ஐம்பொன் சிலைக்கு கண் திறப்பு விழா:
மகான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கு ஐம்பொன்னால் ஒரு சிலை செய்யப்பட்டு உள்ளது. இச்சிலை வருகிற 15.12.19 ஞாயிறு அன்று, பாடகச்சேரி சுவாமிகள் நூறு ஆண்டுகள் முன்பு கட்டிய நமது கிண்டி பாடலீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சிக்கு முதுமுனைவர். சத்தியவேல் முருகனார் அவர்களும் பாடகச்சேரி சுவாமிகளின் நேரடி சீடர் சிவத்திரு. பொன்னுச்சாமி வாண்டையார் அவர்களும் தலைமை தாங்குகின்றனர்
அன்று காலை 6.30க்கு சிறப்பு யாகமும், புதிதாக செய்யப்பட்ட விநாயகர் சிலையை அம்மையப்பர் அருகில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து, மகான் ராமலிங்க சுவாமிகளின் ஐம்பொன் சிலையை செய்த நாச்சியார்கோவில் திரு. சிவகுமார் அவர்களால் சிலைக்கு கண் திறப்பு விழா நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.
இறுதியாக 12 மணி அளவில் மகா அன்னதானமும் நடைபெற உள்ளது.
மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு சிவத்திரு. பாஸ்கரன், 8144930628.
குருவடி தொடர்வோம். வாழ்க வளமுடன்.
மீள்பதிவாக:-
ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம். - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_15.html
Very Good. Thanks for your Spiritual informations.
ReplyDeleteதங்களின் கருத்திற்கு நன்றிங்க.
Deleteவழக்கம் போல் தங்களின் கருத்துக்களை நம் தலத்தில் தரவும்.
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDelete
Deleteகுருவருள் பரிபூரணம்.
குருவின் தாள்
பணிந்து
நன்றி