அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தலத்தில் வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் நிற்கின்றோம். இன்றைய பதிவிலும் மலை யாத்திரை தான். தற்போது நம் குழு அன்பர்களோடு கோடகநல்லூர் யாத்திரையிலும் மலை யாத்திரையாக நம்பிமலை தரிசனம் பெற்றோம். விரைவில் ஒவ்வொரு தரிசனமும் தனிப்பதிவில் தருகின்றோம். சரி..தோரணமலை யாத்திரைக்கு அனைவரும் தயாரா? ஏற்கனவே முதல் பதிவில் தோரணமலை அடிவார கோயில் தரிசனத்தில் இருக்கின்றோம். அங்கிருந்து மீண்டும் தொடர்வோம்.
திருநெல்வேலி மாவட்டம் கடையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் செக்போஸ்ட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தோரணமலை. ராமநதி, ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கடையே வானளாவ உயர்ந்து நிற்கிறது இந்த மலை. மலை உச்சியில் ஒரு சிறிய குகைக்குள் திருச்செந்தூர் முருகனை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறான் குகன்.
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது இந்த ஆலயம்.
கந்த புராணம் கூறும் முருகப்பெருமானின் 16 வடிவங்களில் முதன்மையான ஞானசக்தி வடிவமாக கையில் வேலுடன் மயில் வாகனத்தில் தோரணமலையில் எழுந்தருளி உள்ளான் கந்தன்.
இத்தனை சிறப்புமிக்க தோரண மலை யாத்திரை நமக்கு அள்ள அள்ள ஆற்றல் தரும் யாத்திரை ஆகும்.
அடிவாரத்தில் உள்ள முருகன் கோயிலில் முதலில் வணங்கினோம்.நமக்கு தோரண மலை தோழனாக வர இருக்கின்றார் என்று உள்மனதில் தோன்றியது. இதனையே அப்படியே தலைப்பாகவும் வைத்து விட்டோம். முருகனின் புகழ் பாட ஒரு நாளும் போதாது, ஒரு பதிவும் போதாது.
இயற்கை அன்னையின் அழகை ரசித்துக் கொண்டே மலை ஏறினோம்.பசுமை நம் கண்களுக்கு இதமாக இருந்தது. நம் மனதும் பசுமையாக இருந்தது.
மலை ஏறிக்கொண்டே எதிரிலே இருந்த மற்றொரு மலையின் அழகை ரசித்தோம்.இதோ மீண்டும் மலையேற்றம் ஆரம்பமாகிவிட்டது.
சில இடங்களில் மலை ஏற்றம் சற்று கடினமாகஇருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
மிகப்பழமையான இந்த தோரணமலையில் தற்போது உள்ள முருகன் சிலையை சுனையில் இருந்து மீட்டெடுத்து சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான் மதுரையை ஆண்ட வெங்கலநாயக்கன் என்னும் மன்னன். சீதையை தேடிவந்த போது ராமபிரான் தோரணமலை வந்து முருகனை வழிபட்டதாக ஐதீகம்.
அடிவாரத்தில் இருந்து சுமார் 926 படிகட்டுகள் கடந்து சென்றால் மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்கலாம்.சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.
திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன்.
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.
மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.
இந்த சுனையில் இந்தப் பதிவை நிறைவு செய்வோம். தொடர்பதிவில் மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக;-
குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html
நம் தலத்தில் வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் நிற்கின்றோம். இன்றைய பதிவிலும் மலை யாத்திரை தான். தற்போது நம் குழு அன்பர்களோடு கோடகநல்லூர் யாத்திரையிலும் மலை யாத்திரையாக நம்பிமலை தரிசனம் பெற்றோம். விரைவில் ஒவ்வொரு தரிசனமும் தனிப்பதிவில் தருகின்றோம். சரி..தோரணமலை யாத்திரைக்கு அனைவரும் தயாரா? ஏற்கனவே முதல் பதிவில் தோரணமலை அடிவார கோயில் தரிசனத்தில் இருக்கின்றோம். அங்கிருந்து மீண்டும் தொடர்வோம்.
திருநெல்வேலி மாவட்டம் கடையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் செக்போஸ்ட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தோரணமலை. ராமநதி, ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கடையே வானளாவ உயர்ந்து நிற்கிறது இந்த மலை. மலை உச்சியில் ஒரு சிறிய குகைக்குள் திருச்செந்தூர் முருகனை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறான் குகன்.
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது இந்த ஆலயம்.
கந்த புராணம் கூறும் முருகப்பெருமானின் 16 வடிவங்களில் முதன்மையான ஞானசக்தி வடிவமாக கையில் வேலுடன் மயில் வாகனத்தில் தோரணமலையில் எழுந்தருளி உள்ளான் கந்தன்.
இத்தனை சிறப்புமிக்க தோரண மலை யாத்திரை நமக்கு அள்ள அள்ள ஆற்றல் தரும் யாத்திரை ஆகும்.
அடிவாரத்தில் உள்ள முருகன் கோயிலில் முதலில் வணங்கினோம்.நமக்கு தோரண மலை தோழனாக வர இருக்கின்றார் என்று உள்மனதில் தோன்றியது. இதனையே அப்படியே தலைப்பாகவும் வைத்து விட்டோம். முருகனின் புகழ் பாட ஒரு நாளும் போதாது, ஒரு பதிவும் போதாது.
இதோ மலையேற்றம் ஆரம்பம். நடப்பதற்கு எளிதாக படிக்கட்டுகள் இருந்தது.
இயற்கை அன்னையின் அழகை ரசித்துக் கொண்டே மலை ஏறினோம்.பசுமை நம் கண்களுக்கு இதமாக இருந்தது. நம் மனதும் பசுமையாக இருந்தது.
அட. ஓரிடத்தில் வளைவாக ..வளைவும் அழகாக இருந்தது. இது போன்ற வளைவு நெளிவும் கொண்ட பாதையில் மலை ஏறினால் கடைசியில் மலைமீது இருப்போம். இது போன்று தான் வாழ்க்கை பாதையும் என்று தோன்றியது.
மலை ஏறிக்கொண்டே எதிரிலே இருந்த மற்றொரு மலையின் அழகை ரசித்தோம்.இதோ மீண்டும் மலையேற்றம் ஆரம்பமாகிவிட்டது.
மலையின் அழகை பார்க்கும் போது ஏதோ காட்டு வழி பயணிப்பது போல் இருந்தது. ஆம்...காட்டில் தானே இருக்கின்றோம்.
அதிக சிரமம் ஏதுமில்லை என்பது போல் தோன்றியது. படிக்கட்டுகள் இருப்பதால் சற்று எளிதாகவும் இருக்கின்றது.
இது போன்ற மலை யாத்திரை செல்லும் போது தயை கூர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லாதீர்கள். வனத்துறை அலுவலர்கள் வந்து நம்மை கண்காணித்து அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சித்த மார்க்க அன்பர்கள் தயை கூர்ந்து இயற்கையை நேசியுங்கள்.
சில இடங்களில் மலை ஏற்றம் சற்று கடினமாகஇருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
அட..இது நம்ம பாதையாச்சே என்று மகிழ்வுற்றோம்.
இதோ கோயிலை நெருங்கியதாக உணர்வு. அப்புறம் தான் இங்கே சுனைகள் இருப்பதை கண்டோம்.மலைப்பாதையின் நடுவில் சுயம்பு லிங்கத்தையும் தரிசிக்கலாம். அகத்தியருக்கு சிவபெருமான் இங்கு காட்சி கொடுத்ததால் இந்த சுயம்பு லிங்கம் தொடங்கியதாக ஐதீகம். சுயம்பு லிங்கத்தின் முன்பு உள்ள சுனையில் இருந்து நீரெடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அவனருள் பெறலாம்.
திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன்.
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.
மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.
இந்த சுனையில் இந்தப் பதிவை நிறைவு செய்வோம். தொடர்பதிவில் மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக;-
குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
No comments:
Post a Comment