"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 30, 2023

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 30.09.2023 முதல் 14.10.2023 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

திரும்பி பார்க்கும் இடமெல்லாம் மகாளய  பட்சம் என்பதே பேச்சாக உள்ளது. நாமும் நம் தளம் சார்பில் மகாளய  பட்சம் பற்றி இந்தப் பதிவில் பேச விரும்புகின்றோம். நம்முடைய ஆதி வழிபாடாக முழுமதி வழிபாடும், மறைமதி வழிபாடும் நிறைந்து இருக்கின்றது.  அதான் பௌர்ணமி வழிபாடும், அமாவாசை வழிபாடும் ஆகும். நம் தளத்தில் வழக்கமாக மகாளய பட்சம் பற்றி பதிவு செய்வது வழக்கம். சென்ற ஆண்டில் நாம் மகாளய பட்சம் பற்றி பதிவு செய்யவில்லை. ஆனால் குருவருளால் வழக்கமாக மகாளய பட்சம் சேவை நடைபெற்றது. இந்த ஆண்டில் இன்று முதல் மகாளய பட்சம் ஆரம்பமாகின்றது. இதனையொட்டி வழக்கம் போல் சேவைகள் இந்த காலத்தில் நடத்தி தர குருவிடம் வேண்டி பணிகின்றோம்.

தர்மம்

குருவருளால் இன்றைய பிரதமை திதியில்  இரவு திருச்சி அகிலாண்டேஸ்வரி கோயிலில் அன்னம்பாலிப்பு செய்ய உள்ளோம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.

நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம் சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ அடுத்து புரட்டாசி   அமாவாசை வரப் போகின்றது. மறந்தவர்களுக்கு மகாளய  பட்சம் என்று பொதுவாக சொல்வார்கள். 

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள்,பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையை மகாளயம், மஹாளயம், மாவுளி அமாவாசை எனக்கூறுவர். 

அமாவாசைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான்.  மா என்றால் மிகப்பெரியது என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன் போல பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும். 

எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.  

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும். எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் 
சேர்கின்றன. 

மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

மகாளய பக்ஷ்த்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல் நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

மகாளயபட்ச சேவை குருவருளால் இன்று முதல் சிறப்பாக நடைபெற குருவிடம் வேண்டி பணிகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் இந்த தொண்டில் இணைய வேண்டுகின்றோம்.



திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/09/blog-post_7.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

Thursday, September 28, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை அருணகிரிநாதரின் வழியில் 5 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டி இன்றைய பதிவில் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் காண உள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 

7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

8.  திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் 

9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் 

10. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் தரிசனம் காண இருக்கின்றோம்.


அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில்

கொடைக்கானல்-624101

திண்டுக்கல் மாவட்டம் 

இருப்பிடம்: கொடைக்கானல் நகரிலிருந்து 3 கிமீ

மூலவர்: குறிஞ்சி ஆண்டவர் 

தலமகிமை:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தக் கோவிலில் இருந்து பார்த்தால் வைகை அணையையும் பழநி மலைத்தொடரையும் பார்க்க முடியும். தற்போதும் கோவிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோவிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மே மாத கோடை விழாவில் மலர் வழிபாடு விமரிசையாக நடைபெறும். இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோவில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இச்செடிகள் பூக்கும். கடந்த 2018-ல் குறிஞ்சிப் பூக்கள் நீல நிறத்தில் கொடைக்கானலில் பூத்து குலுங்கின. குறிஞ்சி மலர் பூக்கும் காலங்களில், இக்கோவிலில் உள்ள முருகனுக்கு பெரும்பாலும் குறிஞ்சிப் பூக்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

தல வரலாறு:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அரிய வகை குறிஞ்சி மலர்கள் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் அழகை ரசித்த ஆஸ்திரேலிய பெண்மணி ஆர்.எல்.ஹாரிசன் என்பவர், இப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என மாற்றிக் கொண்டார். கொடைக்கானலில் தங்கிய அவர், அங்கிருந்தே முருகன், தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும் பழநி மலையை தினமும் பார்த்து பரவசமடைந்துள்ளார். 

மழைக்காலங்களில் மேகக் கூட்டங்கள் பழநி மலை மற்றும் கோவிலை மறைத்ததால், கொடைக்கானலில் ஒரு பகுதியிலேயே கடந்த 1936-ல் ஒரு முருகன் கோவிலைக் கட்டி வழிபட்டுள்ளார். பின்னர் ராமநாதனின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் இந்தக் கோவிலை பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோவில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தல அமைப்பு:

பிரதான கருவறையில் மூலவராக குறிஞ்சி ஆண்டவர் இரு கரங்களுடன் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். குறிஞ்சி ஆண்டவர் பழநியில் உள்ளதைப் போலவே தண்டபாணி வடிவில் முருகப்பெருமான் இருப்பது தனிச்சிறப்பு. இங்கு ஆண்டுதோறும் மலர் வழிபாட்டு விழா நடைபெறுவது வழக்கம். தனி சந்நிதிகளில் விநாயகர், பெருமாள், கருடன் முதலானோர் அருளுகின்றனர்.

குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். பழம் நீ என்று அழைக்கப்படும் பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை என பிரசித்தி அனைத்து கோயில்களிலும் முருகனின் சாம்ராஜ்யம் தான். இது மட்டுமின்றி வள்ளிமலை, ஓதிமலை, தோரணமலை, செங்கல்பட்டு அருகே செம்மலை, பெருங்களத்தூரில் உள்ள பச்சை மலை என எடுத்துக் கொண்டாலும் முருகனின் அருள் முன்னின்று கிடைக்கின்றது. இதில் முருகனின் திருநாமம் பல பெயர்களில் இருந்தாலும் குறிஞ்சி ஆண்டவர் என்று போற்றப் படுவது கொடைக்கானலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் குறிஞ்சி ஆண்டவர் தன. இதோ குறைகளை நீக்கும் குறிஞ்சி ஆண்டவரின் நிறைவான தரிசனம் நாம் கண்டோம். அந்த அனுபவத்தின் சில துளிகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.





மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிஞ்சி ஆண்டவர் கோயில். பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் மலை நிலத்திற்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை குறிக்கும் சொல்.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் இந்த அரிய வகை குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் அழகை ரசித்த ஆஸ்திரேலிய பெண்மணி ஆர்.எல்.ஹாரிசன் என்பவர், இப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என மாற்றிக் கொண்டார். கொடைக்கானலில் தங்கிய அவர், அங்கிருந்தே முருகன், தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும் பழநி மலையை தினமும் பார்த்து பரவசமடைந்துள்ளார்.

மழைக்காலங்களில் மேகக் கூட்டங்கள் பழநி மலை மற்றும் கோயிலை மறைத்ததால், கொடைக்கானலில் ஒரு பகுதியிலேயே கடந்த 1936ல் ஒரு முருகன் கோயிலைக் கட்டி வழிபட்டுள்ளார். பின்னர் ராமநாதனின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் இந்தக் கோயிலை பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோயில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போதும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோயிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மலர் வழிபாடு


கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மே மாதத்தில் மலர் வழிபாடு நடைபெறும். இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

குறிஞ்சி செடி

குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடையில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இச்செடிகள் பூக்கும். கடந்த 2006ல் குறிஞ்சிப் பூக்கள் நீல நிறத்தில் கொடைக்கானலில் பூத்து குலுங்கின. பச்சைப் புடவையை மாற்றி, நீலக்கலரில் புடவை கட்டி பவனி வருகிறாள் கொடைக்கானல் மலை இளவரசி என இந்த அழகை இப்பகுதி மக்கள் சிலாகிக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி மலர் பூக்கும் காலங்களில், இக்கோயிலில் உள்ள முருகனுக்கு பெரும்பாலும் குறிஞ்சிப் பூக்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.



இத்தகு அழகு கொண்ட கொடைக்கானலில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக நம் முருகப்பெருமான் குறிஞ்சி ஆண்டவர் என்ற பெயரில் இங்கே அழைக்கப்படுகின்றார்.இக்கோவிலை ஐரோப்பாவை சேர்ந்த ஒரு கிறிஸ்துவ பெண்மணி கட்டினார். கொடைக்கானலுக்கு வந்த இவர் இந்து மதத்திற்கு மாறி ராமநாதன் என்ற தமிழரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என்று மாற்றிக்கொண்டார்.





இவர் வசித்த பகுதியில் இருந்து பார்க்கும் போது பழனி முருகன் கோவில் தெரியும். அங்கிருந்தபடியே பழனி முருகனை தரிசித்து வந்தார்.மழை காலங்களில் மேகங்கள் மறைப்பதால் பழனி முருகனை தரிசிக்க முடியாமல் போனது. இதனால் அவர் 1936–ம் ஆண்டு கொடைக்கானலில் இந்த முருகன்கோவில் கட்டி வழிபாடு செய்தார்.



அலைபேசி சரியாக இயங்காத காரணத்தினால் அதிக காட்சி படங்கள் எடுக்க இயலவில்லை. சிறிதளவே எடுத்தோம்.

இந்தக் கோயில் தற்போது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்டுள்ளது.


எந்த கோயிலுக்கு சென்றாலும் மெதுவாக தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் அன்று இருந்த மன நிலை நம்மை வேறுமாதிரி ஆக்கியது. குறிஞ்சி ஆண்டவர் தரிசனம் செய்ய பலவிதமான நிறத்தில் பூக்கள் கோயிலுக்கு வெளியே விற்கிறார்கள். அவற்றில் ஒரு சிறிய கூடை வாங்கி தரிசனம் செய்து அமர்ந்தோம்.


சும்மா விடுவாரா நம் முருகப்பெருமான்? அங்கேயே சிறிது நேரத்தில் அபிஷேகம் காண நமக்கு ஆணை இட்டார். பிறகென்ன ஆனந்த கூத்தாடி அபிஷேகம் கண்டோம்.



சிறிய கோயிலாக இருந்தாலும் பராமரிப்பு சிறப்பாக உள்ளது.








திருவிழா:

மே மாத கோடை விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, வைகாசி விசாகம் 

பிரார்த்தனை:

மன அமைதி வேண்டி, ஆனந்தம் வேண்டி, கேட்டவை கிடைக்க

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்

திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மாலை 7 வரை


 தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர்


 மன அமைதியையும், மனமகிழ்ச்சியையும் கொடுத்து அருளும் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் மலர் அலங்காரம்


குறிஞ்சி மலை ஆண்டவருக்கு அரோகரா...

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் வேண்டி வணங்கினால் மன அமைதியையும், மனமகிழ்ச்சியையும் கொடுத்து அருளுவார்!  

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

தீப மங்கள சோதி நமோ நம - 108 தீப வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் தீப வழிபாடு பற்றி காண இருக்கின்றோம். நம் தளத்திற்கும் , தீப வழிபாட்டிற்கும் பல வழிகளில் தொடர்பு உண்டு. நம் குருநாதர் குருபூஜை அன்று 2017 ஆம் ஆண்டில் 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். அதன் தொடர்ச்சியாக சுமார் 3 ஆண்டுகளாக மோட்ச தீப வழிபாடு செய்தோம். இந்த தீப வழிபாட்டில் ஆண்டுதோறும் 108 தீப வழிபாடு செய்து வருகின்றோம். தற்போதைய தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் தற்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக தீப எண்ணெய் ஆலயங்களுக்கு கொடுத்து வருகின்றோம். சென்ற ஆண்டில் 108 தீப வழிபாடு மிக சிறப்பாக ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் சின்னாளபட்டியில் நடைபெற்றது.  இந்த ஆண்டில் 108 தீப வழிபாடு செய்வதற்கு குருவிடம்  பணிந்து  வேண்டுகின்றோம். 

சில தீப வழிபாட்டு அருள்நிலைகளை இங்கே தருகின்றோம்.



கூடுவாஞ்சேரியில் குருநாதர் வழிபாட்டில் 


சின்னாளபட்டி விநாயகர் முன்பு ( முருகன் கோயிலில் )


முதன் முதலாக 108 தீபம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் 


பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 108 தீப வழிபாடு 


 108 தீபம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் 






 கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் தீப வழிபாடு 

இந்த தீப வழிபாடு கடந்த 6 ஆண்டுகளாக நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது. இது இந்த வழிபாடு அகத்தியர் வனம் மலேஷியா குழுவினரால் நமக்கு கிடைத்து, குருவருளால் ஆண்டுதோறும் தொடர்ந்து வருகின்றோம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் 4 முறையும், பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 1 முறையும், சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் 1 முறையும் என தொடர்ந்து வருகின்றோம். TUT குழு தொடங்கி இந்த ஆண்டில் 7 ஆம் ஆண்டில் பயணித்து வருகின்றோம். இந்த ஆண்டிலும் 108 தீப வழிபாடு தொடர வேண்டி பணிகின்றோம்.

சென்ற ஆண்டில் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்த போது, தமிழ்ப் புத்தாண்டு வழிபாட்டில் 108 தீப வழிபாடு சேர்க்க எண்ணம் பிறந்தது. குருவிடம் வேண்டியபோது, நமக்கு சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் உணர்த்தப்பட்டது. பின்னர் வழக்கம் போல் தீப வழிபாட்டிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றது. தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.



அன்றைய தினம் அகல் விளக்குகள் வாங்கி, சுத்தம் செய்த நிலையில்.



பின்னர் சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலிக்கு சென்று இம்முறை வெற்றலைகளை நட்சத்திர வடிவில் அடுக்கி, அதன் மேலே அகல் விளக்குகளை வைத்தோம்.




பின்னர் தீபத்திற்கு எண்ணெய், திரி போட்டு தயார் செய்த போது 


அனைத்தும் தயாரானதும், மகா மந்திரம் கூறி, முதல் தீபம் ஏற்றிய நிலையில் 




பின்னர் ஆதி ஜோதியான மைய ஜோதியில் இருந்து அருகே இருந்த விளக்குகளுக்கு ஒளியை ஏற்ற ஒவ்வொருவரும் பணிக்கப்பட்டோம்.



சற்று நேரத்தில் இருள் நீங்கி, ஒளி பெருகியது. மனதுள் மகாமந்திரம் உச்சரித்துக் கொண்டே இருந்தோம்.



இதோ ..108 தீபமும் சுடர்விட்டுப் பிரகாசிக்க, நம் அகத்தில் உள்ள இருளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதை கண்டோம்.





மாசற்ற ஜோதி..மலர்ந்த மலர்ச்சுடரே என்று மனதில் போற்றிக் கொண்டே இருந்தோம்.


பின்னர் கொஞ்ச நேரத்தில் குருநாதர் தரிசனம் பெற்றோம்.






ஜோதி வழிபாடு நம் அக இருளை நீக்கும் வழிபாடு ஆகும். இது பஞ்ச பூத வழிபாட்டின் தத்துவமும் ஆகும். எப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்கின்றீர்களோ, அப்பொழுது தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள். ஒரு தீபம் ஏற்றினாலும் தூய பசு நெய் கொண்டு உள்ளன்போடு ஏற்றி மகிழுங்கள். இதற்கு வாய்ப்பு இல்லையென்றால் குறைந்த பட்சம் உள்ளத்திலாவது தீப மேற்றி வழிபாடு செய்யுங்கள்.





குருநாதர் தரிசனம் பெற்று,  தீப தரிசனம் கண்டு, பின்னர் பாராயணம் செய்தோம். குழு அன்பர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வழிபட்டோம்.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
அப்பர் தேவாரம் 4-11-8

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை
உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்டகுறியைக் குலைத்ததுதானே
–திருமூலரின் திருமந்திரம் 1975

நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்

    ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
    ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
    ஜோதி ஜோதி ஜோதி யருட்
    ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

    வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
    மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
    ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
    ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

    ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
    வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 

என்று பாடி, உணர்ந்து வருகின்றோம். இந்த ஆண்டில் 108 தீப வழிபாட்டிற்கு நம் குருவிடம் வேண்டி பணிந்து உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகவும் பிரார்த்தனை செய்வோம்!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ வாக்கு - தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 108 தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/11/108.html

காரணமின்றி காரியமில்லை- ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_19.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html