"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 23, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை அருணகிரிநாதரின் வழியில் 5 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டி இன்றைய பதிவில் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் காண உள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 

7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

8.  திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் 

9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் 

சகல சௌபாக்கியங்களையும் அருளும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 



அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

எல்டாம்ஸ் ரோடு (Eldams Road)

தேனாம்பேட்டை 

சென்னை-600018 

இருப்பிடம்: எழும்பூர்/சென்ட்ரல்/கோயம்பேடு-கோவில் 7/9/10 கிமீ, மைலாப்பூர்/தி.நகர்-கோவில் 2/4 கிமீ

மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி 

தேவியர்: வள்ளி, தெய்வானை

இதர முக்கிய தெய்வம்: இராமலிங்ககேஸ்வரர்

தல மகிமை: 

சென்னையின் மையப்பகுதியில் உள்ள அண்ணா சாலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சுமார் 150 அடி தூரத்திலேயே இத்திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மாம்பலம் (தி.நகர்) புகைவண்டி நிலையத்திலிருந்து 4 கி.மீ துரத்தில் உள்ளது. ஆதியில் சிவத்தலமாக இருந்த இத்திருத்தலம் சுமார் 50 ஆண்டுகளாக முருகப்பெருமானுக்குரிய கோவிலாக பெருமைப்பெற்றது. தென் சென்னையில் உள்ள முருகன் திருத்தலங்களில் இது ஒரு முக்கியமான திருத்தலமாகும்.

திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டியில் யாக சாலை பூஜை, வள்ளி, தெய்வயானை திருமண உற்சவம், லட்ச்சார்ச்சனை, சுவாமி வீதி உலா புறப்பாடு, 10 நாட்கள் இன்னிசை கச்சேரிகள் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் அன்று சுப்பிரமணியர் வீதி உலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப்பெருமான் வீதி உலா வருவார்.சித்திரை மாதம் பவுர்ணமியன்று புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சி. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் (ஆருத்ரா தரிசனம்) அன்று முதல் நாள் இரவு மஹா அபிஷேகமும் காலை 6.30 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்மாள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட விமானப்பட்டறையில் வீதி உலா வருவது சிறப்பு. ஆருத்ரா உற்சவத்திற்கு முன்னதாக 10 நாட்கள் மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெறுகின்றது. மார்கழி மாதம் முழுவதும் காலை 6 மணிக்கே கோயில் திறந்து தனூர் மாத பூஜை நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகமும், உள்புறப்பாடும் சிறப்பாக நடைபெறுகின்றது.

திருமணம் ஆகாதவர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றால், விரைவில் திருமணம் நடக்கும், என்பதும், பிரதோஷ சமயங்களில் சிவனை இங்கு வந்து அபிஷேகம் மற்றும் புறப்பாட்டில் கலந்து கொண்டால், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பதும் சிறப்பு அம்சமாகும்.

இத்திருக்கோயில் தற்போது பாலசுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது ஒரு சிவத்தலம் ஆகும். இவ்வாலயத்திற்கு சொந்தமாக உள்ள நிலங்கள் அருள்மிகு இராமலிங்ககேஸ்வரர் திருக்கோயில் என்ற பெயரிலேயே உள்ளன. மேலும் இத்திருக்கோயிலின் விநாயகர் சன்னதிக்கு எதிரே உள்ள தெரு இராமலிங்கேஸ்வரர் தெரு என்று தான் இன்று வரை அழைக்கப்படுகின்றது.

மேலும், இங்கு உள்ள விநாயகர் சன்னதி, ஈஸ்வரன் சன்னதி, அம்பாள் சன்னதி, நடராஜர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி ஆகியவை இது ஒரு சிவன் கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.  இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியர் சன்னதி நிர்மானிக்கப்பட்டு புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்று மக்களால் அழைக்கப்பட்டு தறபோதும் இந்த பெயரிலேயே இருந்து வருகிறது.

நவகிரக சன்னதி, சனீஸ்வரர் சன்னதி, துர்க்கை சன்னதி ஆகியவை உள்ளன. அருள்மிகு சுப்ரமணியர் வள்ளி தெய்வயானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தென் சென்னையில் உள்ள முருகன் திருத்தலங்களில் இது முக்கியமான திருத்தலமாகும்.

நடை திறந்து இருக்கும் நேரம்: திருக்கோயில் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

தல வரலாறு:

இக்கோவில் தற்போது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றழைக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது ஒரு சிவத்தலம் ஆகும். இவ்வாலயத்திற்கு சொந்தமாக உள்ள நிலங்கள் அருள்மிகு இராமலிங்ககேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரிலேயே உள்ளன. மேலும் இத்திருக்கோவிலின் விநாயகர் சன்னதிக்கு எதிரே உள்ள தெரு இராமலிங்கேஸ்வரர் தெரு என்றுதான் இன்று வரை அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணிய சுவாமி சந்நிதி நிர்மாணிக்கப்பட்டு, புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில், மூலவராக 41/2 அடி உயர சுப்ரமணிய சுவாமி இடுப்பில் கை வைத்து வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கின்றார். மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி அதிகார முருகன் என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானுக்கு எதிரே அருணகிரிநாதர் சந்நிதி உள்ளது. மரகததாலான மயில் இங்கிருப்பது சிறப்பு.

மேலும், இங்கு விநாயகர், இராமலிங்ககேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள், துர்க்கை, நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பைரவர் முதலான தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர். நடராஜப்பெருமான் தனது பிரபஞ்ச நடனத்தில் சிவகாமியுடன் தனி சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கின்றார்..

திருவிழா

தைப்பூசம், கந்த சஷ்டி, சித்ரா பவுர்ணமி, ஆடி வெள்ளி, பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், தமிழ் புத்தாண்டு, பிரதி கிருத்திகை, சஷ்டி

பிரார்த்தனை:

சகல சௌபாக்கியங்கள் பெற, திருமணம் பாக்கியம் பெற, நீண்ட ஆயுள் கிடைக்க, வேண்டுவன நிறைவேற  

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், காணிக்கை, அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 5-9

பூஜை காலம்:

இத்திருக்கோயிலில் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது.

1) காலசந்தி பூஜை –  காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை

2) உச்சிகால பூஜை காலை 11.00 மணிக்கு

3) சாயரட்சை பூஜை – மாலை 5.00 முதல் 6.00 மணி வரை

4) அர்த்தசாம பூஜை – இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரை


முக்கிய திருவிழாக்கள்: இத்திருக்கோயிலில் கீழ்க்கண்ட திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன,

1) மாதாந்திர கிருத்திகை: ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் அன்று சுப்பரிமணியர் வீதி உலா நடைபெறும்.

2) விநாயகர் சதுர்த்தி: ஆவணி சுக்ல சதுர்த்தி விநாயகர் வீதி உலா உண்டு.

3) சித்திரா பௌர்ணமி: சித்திரை மாதம் பௌர்னமி திதியன்று புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

4) கந்தசஷ்டி: இத்திருக்கோயிலின் திருவிழாக்களில் கந்த சஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றன. கந்த சஷ்டியில் யாக சாலை பூஜை, வள்ளி தெய்வயானை திருமண உற்சவம், லட்ச்சார்ச்சனை, சுவாமி வீதி உலா புறப்பாடு, 10 நாட்கள் இன்னிசை கச்சேரிகள் என்று சிறப்பாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகின்றன.

5) ஆருத்ரா தரிசனம் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று முதல் நாள் இரவு மஹா அபிஷேகமும் காலை 6.30 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்மாள் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட விமானப்பட்டறையில் வீதிஉலா வருவது சிறப்பாக இருக்கும்.

6) மாணிக்க வாசகர் உற்சவம்: ஆருத்ரா உற்சவத்திற்கு முன்னதாக 10 நாட்கள் மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெறுகின்றது.

7) தனூர் மாதம் பூஜை: மார்கழி மாதம் முழுவதும் காலை 6 மணிக்கே கோயில் திறந்து தானூர் மாத பூஜை நடைபெறுகின்றது.

8) பிரதோஷம்: ஒவ்வொரு மாதமும் பிரதோஷ திதி நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகமும், உள்புறப்பாடும் சிறப்பாக நடைபெறுகின்றது.

பிராத்தனை சிறப்பு: திருமணம் ஆகாதவர்கள் திருக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும், என்பதும், பிரதோஷ சமயங்களில் சிவனை இத்திருத்தலத்தில் வந்து அபிஷேகம் மற்றும் புறப்பாட்டில் கலந்து கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

அமைவிடம்:

சென்னை மாநகரில் வன்னியத் தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.  சென்னை அண்ணா சாலையில் தியாகராய் சாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சுமார் 150 அடி தூரத்திலேயே இத்திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மாம்பலம் புகைவண்டி நிலையத்திலிருந்து 4 கி.மீ துரத்தில் உள்ளது.

வழித்தடம்: இத்திருக்கோயிலுக்கு வருவதற்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 23சி பேருந்தில் ஏறி வானவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சுமார் 150 அடி தூரத்தில் திருக்கோவில் வந்தடையலாம். பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் வானவில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். இந்த வானவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எளிதில் திருக்கோவில் வந்தடையலாம்.




படம் 1 - சகல சௌபாக்கியங்களையும் அருளும் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி



படம் 2 - நீண்ட ஆயுளை தந்தருளும் தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்


நீண்ட ஆயுளை தந்தருளும் தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமியை மனக்கண் மூலம் தரிசித்து பயனடைவோம்!                                                                                                                                                                                
வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html




No comments:

Post a Comment