"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 12, 2020

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

எந்த நாட்டிலும் நாம் காண இயலாத பல அதிசயங்கள் நம் நாட்டில் உண்டு. பொத்தாம் பொதுவாக நாம் பார்த்தால் இதில் என்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தான் நம் மொழியின், நாட்டின், கலாச்சாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தும் புரியும். இதில் நாம் சித்தர்கள், ஜீவ நாடி என எடுத்துக் கொள்ளலாம், இதில் மேலும் நமக்கு இன்பமூட்டுவது திருமுறைகள் ஆகும். ஆம். நமக்கு கிடைத்துள்ள திருமுறைகள் போன்று வேறெங்கும் உள்ளனவா என்று பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். பாரத பூமி பழம்பெரும் பூமி மட்டும் அன்று. இது ஞான பூமி. ஆடல்வல்லான் 64 திருவிளையாடல்களை வேறெந்த நாட்டிலாவது நடத்தி இருக்கலாமே? ஏன் நம் தமிழ் நாட்டில் நடத்தினார். சைவம் ம் மட்டுமல்ல. இதில் வைணவமும் அடங்கும். இதே போல் கௌமாரம், சாக்தம், காணாபத்யம் என அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் மொழி ஒன்றே போதும், இது பக்தி மொழி மட்டும் அல்ல, வாழ்வியல் மொழி, முக்தி மொழியும் ஆகும்.எனவே தமிழ் மறைகள் படிப்பது,கேட்பது இன்பம் ஆகும். ஒரு தட்டில் தமிழ் மொழியில் உள்ள பக்தி நூல்களையும், மற்றோரு எடைத் தட்டில் பிற மொழி பக்தி நூல்களையும் வைத்தால் கூட தமிழ் மொழிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.



பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:


  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.




பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

பன்னிரு திருமுறை தினமும் ஓதுவதற்கு ஏற்ப, 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை என்று இன்று முதல் தொடர்கின்றோம். இன்று முதல் நாள் பன்னிரு திருமுறை கீழே தருகின்றோம்.

1 ஆம் திருமுறை

 தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

 காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன் 

 ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த

 பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

2 ஆம் திருமுறை 

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;

சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;

தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;

செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே.


3 ஆம் திருமுறை 

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது


வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது


நாதன் நாமம் நமச்சிவாயவே.


4 ஆம் திருமுறை 

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனதருளால்

திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே.

5 ஆம் திருமுறை 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை  இணை அடி நீழலே.

6 ஆம் திருமுறை 


ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே;

      உலகுக்கு  ஒருவனாய் நின்றாய், நீயே;

வாசமலர் எலாம் ஆனாய், நீயே;

     மலையான் மருகனாய் நின்றாய், நீயே;

பேசப் பெரிதும் இனியாய், நீயே;

     பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;

தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே

      திருவையாறு  அகலாத செம்பொன் சோதி!

7 ஆம் திருமுறை 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா

எத்தான்  மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.

8 ஆம் திருமுறை 

வேண்டத் தக்கது அறிவோய் நீ,

            வேண்ட முழுதும் தருவோய் நீ,

வேண்டும் அயன்,மாற்கு அரியோய் நீ,

           வேண்டி என்னைப் பணிகொண்டாய்,

வேண்டி நீ யாது, அருள்செய்தாய்,

          யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசுஒன்று உண்டு என்னில்



          அதுவும் உன்றன் விருப்பன்றே.

9 ஆம் திருமுறை 

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !

            உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

            சித்தத்துள் தித்திக்கும் தேனே !

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !

           அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத்

           தொண்டனேன் விளம்புமா விளம்பே. 

திருப்பல்லாண்டு 

தாதையைத் தாள் அற வீசிய 

            சண்டிக்கு இவ் அண்டத்தொடு உடனே

பூதலத்தோரும் வணங்கப் பொற்

            கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் 

            நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத்துக்கே பரிசு 

            வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே ! 


10 ஆம் திருமுறை 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே


11ஆம் திருமுறை 

மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே

கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்

ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்

சோராமல் எப்பொழுதும் சொல்.

12 ஆம் திருமுறை 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.

மீண்டும் சந்திப்போம் 


மீள்பதிவாக:-


பன்னிரு திருமுறை இசை விழா - திருமுறை வெள்ளத்தில் மூழ்க வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_9.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

No comments:

Post a Comment