"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 26, 2020

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...- 7 ஆம் ஆண்டு வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...

என்னப்பா? ஐயப்பன் வணங்கும் காலம் முடிந்து விட்டது. ஆனால் இன்று ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா என்று பதிவா? என்று யோசிக்கின்றீர்களா? நாமும் முதலில் அப்படித் தான் நினைத்தோம். இறை வழிபாடு எப்படியோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடங்கிவிட்டது. இது சூட்சுமமான கருத்தாக நமக்கு தோன்றுகின்றது. இன்றைய சூழலில் அனைத்து ஆலயங்களும் பொது மக்கள் தரிசனம் இன்றி உள்ளது. இப்பொது புரிகின்றதா? உள்ளம் பெருங்கோயில் என்று? எத்தனை பேர் தினசரி வழிபாடு செய்கின்றீர்கள்? இப்போது தான் இறை நம்பிக்கையும், சரணாகதியும் வேண்டும்.பம்பையில் ஐயப்பன் கோயில் நடை சாத்தி இருந்தாலும் , எங்கள் வீட்டில் 7 ஆம் ஆண்டு வழிபட்ட நிகழ்வுகளை இங்கே தொகுத்து தருகின்றோம்.

முதலிலே உங்கள் அனைவரையும் வழிபாட்டிற்கு அழைக்கின்றோம்.


ஐயன் ஐயப்பன் தரிசனம் கடந்த 5 ஆண்டுகளாக கிடைத்து வருகின்றது. இது எப்படி? எங்கிருந்து ஆரம்பித்தது ..அதற்குள் 5 ஆண்டுகளாக தரிசித்து விட்டோமோ? என்று நாம் நினைத்தது உண்டு.கடந்த நான்கு ஆண்டுகளாக பம்பை (சின்ன பாதை ) முதல் சந்நிதி சென்று வந்தோம். ஆனால் கடந்த ஆண்டு எருமேலியில் இருந்து பெரிய பாதை வழியாக செல்ல வேண்டும் என்று ஆணை கிடைத்தது. வழக்கம் போல் விரதம்,வழிபாடு என தொடர்ந்தோம். நம்மைப் பொறுத்த வரை நாம் பெரிய அளவில் கூட்டமாக செல்வதில்லை. வீட்டில் தந்தை,தாத்தா என சேர்த்தால் மொத்தம் 4 பேர் அளவில் தான் செல்வோம். கடந்த இரண்டு முறை நாமும், என் சகோதரர் மட்டுமே சபரி மலை யாத்திரை சென்று வருகின்றோம். மூன்றாம் ஆண்டு முதலே குருசாமி என்று நம் ஐயப்பன் தான். வேறு யாரும் இல்லை.

ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது, பல செய்திகள் கண்டு வருகின்றோம். அந்த காலத்தில் இருமுடி வீட்டில் கட்டுவார்கள். வீட்டில் இருமுடி கட்டி, பூசை இட்டு, ஐயன் அருள் பெறுவார்கள். ஆனால் இன்று கோயில்களில் மட்டும் தான் இருமுடி கட்டப்படுகிறது. அதே போல் வீட்டில் இருமுடி கட்டி, பேருந்து நிலையம் செல்லும் வரை  ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா  என்று பாடிக் கொண்டே செல்வார்கள். ஆனால் இன்று வாகன வசதி..கோயிலில் இருமுடி கட்டி, அப்படியே வாகனத்தில் ஏறி,எளிதாக பம்பை வரை சென்று விடுகின்றோம். ஆனால் நாம் வீட்டில் கட்டி, அப்படியே சென்று பேருந்து நிலையம் செல்லும் வரை இயல்பாகவே சென்று வருகின்றோம்.

அப்புறம் இருமுடி கட்டி விட்டு சிலர் வேறு சில கோயில்களுக்கு சென்று,அப்புறமாக சபரி மலை செல்கின்றனர்.இது மிகப் பெரும் தவறு. அதே போல் தரிசனம் முடித்து சில பல கோயில்களுக்கு சென்று பின் வீடு திரும்புவதும், பம்பை வந்த உடனே மாலை கழட்டுவதும் போன்ற மாபெரும் தவறான செயல்கள் செய்வதை பார்க்கும்போது கண்ணீர் வருகின்றது. சரி..வாருங்கள் 7 ஆம் ஆண்டு வழிபாட்டிற்கு செல்வோம்.




அன்றைய தினம் காலையில் பூ சந்தைக்கு சென்று பூசைக்கு தேவையான பூக்கள் வாங்கி வந்தோம். அடுத்து நாம் எதிர்பாரா வண்ணம் நம்மை நேரில் சந்தித்து ஆச்சர்யப்படுத்தினார்.


ராம்ஜி பொதுநல அறக்கட்டளையை சேர்ந்த திரு.வெங்கட பூபதி ஐயா அவர்கள் நேரில் வந்து பூசைக்கு மலர் வாங்கி வந்து கொடுத்தார்.மனதிற்கு நிறைவாக இருந்தது. இது போன்ற மனிதர்களை நாம் பெற்றது தான் தேடல் உள்ள தேனீக்களாய் TUT குழுவின் வெற்றி. ராம்ஜி பொதுநல அறக்கட்டளையுடன் நாம் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்பில் இருந்து வருகின்றோம். தனிப்பதிவில் ராம்ஜி பொதுநல அறக்கட்டளை பற்றி பேசுவோம்.



அடுத்து வீட்டில் ஐயப்பன் சுவாமிக்கு படியில் மலர் வைத்தோம்.














இங்கே உள்ள விளக்கை கவனித்தீர்களா?





இதோ பஜனை ஆரம்பம். மூத்தோனை வணங்கி விட்டு, நமக்குத் தெரிந்த பாடல்களை பாட துவங்கினோம்.நாம் முருகப்பெருமான் பாடல் படித்தோம். காலையில் சுமார் 9 மணி அளவில் பூசை ஆரம்பமானது.


நேரம் ஆக ஆக கருப்பசாமி, ஐயப்பன் பாடல்கள் என்று பஜனை சிறப்பாக சென்று கொண்டிருந்தது.



இந்த விளக்கு தெய்வத்திரு.அகத்தியர் திருமகன் ஐயாவிடம் நாம் சென்ற ஆண்டு தீபாவளி அன்று இந்த ஐயப்பன் பூசைக்காக வாங்கினோம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 




எங்கள் தாத்தா திரு.திருவேங்கடம் அவர்களும் பஜனையில் கலந்து கொண்டார். முதல் ஆண்டு சபரிமலை யாத்திரையில் நாம் எம் தாத்தாவையும் அழைத்து சென்றோம். பின்னர் வயோதிகம் காரணமாக தற்போது அழைத்து செல்வதில்லை. 








18 படிகளிலும் மலர் தூவி, படிக்கு ஒன்றாக ஒரு சாம்பிராணி வைத்து பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது.











பூஜையை காண்பதற்கு இரு கண்களும் போதவில்லை. அக்கம்பக்கத்து வீட்டார், சொந்தக்காரர்கள் என ஒவ்வொருவராக பூசையில் இணைந்தார்கள்.


எம் சித்தியும் , அத்தையும் பூஜையில் சேர்ந்து கொண்ட காட்சி

















ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சரணம் சொல்லிக்கொண்டே இருந்தோம்.




இனி ஐயப்பனின் தரிசனம் நன்றாக பெற்றுக் கொள்ளுங்கள்.









ஐயன் அருள் உண்டு 
என்றும் பயம் இல்லை 















18 படி பாட்டு பாடி, ஒளி வெள்ளத்தில் கலியுக தெய்வம் ஐயப்பன் தரிசனம் பெற இருக்கின்றோம்.































அடுத்து எம் சித்தப்பா அவர்கள் வந்து வணங்கிய போது ...






 “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம்

 வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து இருந்து, பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

7 ஆம் ஆண்டு பூசையில் நாம் எதிர்பார்க்கா வண்ணம் மலர் அலங்காரம் செய்து அய்யப்பன் வழிபாடு செய்தோம். இதற்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு இந்தப்பதிவில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்றைய தினம் காலை திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் அன்னதானம் செய்தும் வருகின்றோம். இந்த ஆண்டில் 8 ஆம் ஆண்டு இன்னும் சிறப்புற வழிபாடு செய்திட குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். மேலும் இந்த பதிவின் மூலம் ஒரு சங்கல்பம் வைத்துள்ளோம். அனைத்தும் 18 படி நாயகனுக்கே தெரியும்.

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..

மீள்பதிவாக:-

இருமுடி இறைவா சரணம் சரணம் (ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா) - 7 ஆம் ஆண்டு இருமுடி கட்டும் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/12/7.html

ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_17.html

No comments:

Post a Comment