"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 10, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21]

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. 

காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பற்றிய ஜீவ நாடி அற்புதம் கண்டோம். ஏற்கனவே சொன்னது போல் ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம். சுருக்கமாக இன்னொரு அற்புதம் இங்கே குருவருளால் பகிர்கின்றோம்.

எம் நண்பர் ஒருவருக்கு சுமார் 6 ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. நாம் அந்தியூர் முருக நாடி பற்றி எடுத்துக் கூறி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்று முருகன் அருள் பெற்றோம். முருகப் பெருமான் அவருடைய பிறந்த நட்சத்திரத்தில் வள்ளிமலை சென்று பைரவருக்கு தயிர் சாதம் வைத்து மூன்று முறை சென்று வர சொன்னார். முதல் முறை செல்லும் போதே ஓதியப்பரின் பிறந்த நாள் வந்தது. தனிப்பதிவில் தருகின்றோம். அன்றைய தினம் நண்பரோடு வள்ளிமலை சென்று பைரவருக்கு தயிர் சாதம் தந்து தரிசனம் பெற்றோம். மீதம் இரண்டு முறை நண்பரே சென்று வந்தார். இன்னும் பெண் பார்க்கும் படலம் சென்று கொண்டே இருந்தது. இதோ..இன்று காலை நண்பர் தமக்கு மணப்பெண் கிடைத்து விட்டதாக செய்தி கூறினார். எங்கெங்கோ பெண் தேடியும், இறுதியில் சொந்த ஊரிலே பெண் கிடைத்தது நமக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இது தான் முன்னின்று நடத்தும் முருகன் அருள் ஆகும்.

நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம்  தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவா நாடி அற்புதங்களே ஆகும்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, நம்பி மலை, கோடகநல்லூர் என சென்று வருகின்றோம்.இந்த ஆண்டு அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பை கீழே தருகின்றோம்.




அகத்திய அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2019ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:- 

21/05/2020 - வியாழக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம் - சதுர்தசி திதி.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

30/07/2020 - ஆடி மாதம் - வியாழக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம் 

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

31/07/2020 - ஆடி மாதம் - வெள்ளிக்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

01/08/2020 - ஆடி மாதம் - சனிக்கிழமை  - சுக்லபக்ஷ திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

17/08/2020 -ஆவணி மாதம் - திங்கள் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

29/10/2020 - வியாழக் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - உத்திரட்டாதி நட்சத்திரம். 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2020 முதல் 13/01/2021க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

02/01/2021 - சனிக்கிழமை - மார்கழி மாதம், த்ரிதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

ஓதிமலை தரிசனம்:-



சென்ற ஆண்டில் 28.08.2019 -ஆவணி மாதம் - புதன் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் ஓதியப்பர் பிறந்த நாளை நாம் வள்ளிமலையில் கொண்டாடினோம்.இதோ சில காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.






















நம்பி மலை தரிசனம்:-







பாபநாசம் தரிசனம்:-

அந்த யாத்திரையை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.


தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழகத்தை உருவாக்கியவர் நம்   குருநாதர் எனலாம். தமிழகத்தின் இரண்டு முக்கிய ஆறுகளான காவிரி, தாமிரபரணி இரண்டும் அகத்தியரின் அருளால் கிடைக்கப்பெற்றவை. இந்த ஆற்றின் நதிக்கரையில் வாழ்ந்துள்ளனர்  நம் முன்னோர்கள். இன்று நாம் நதிக்கரை விட்டு நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். இருந்தாலும் நம்மை நம் குருநாதர் பல்வேறு வழிகளில் வழிநடத்தி வருகின்றார். நம் குருவின் பாதம் பட்ட மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பதே பெரும் பேறு. அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரின் வாக்கை மீண்டும் மீண்டும் கேட்டு ,அதன் வழி நடந்திட வேண்டும். இன்றைய பதிவில் நாம் இந்திரகீழ ஷேத்திர இறைவனை காண இருக்கின்றோம். இந்திரகீழ ஷேத்திரம் எங்குள்ளது என்று கேட்கின்றீர்களா?

திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம். இந்த கோயில்  இந்திரகீழ ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாபநாசநாதர் கோயில் கோபுரம் பார்க்கும் போது தோன்றுகின்றது. இன்னும் சற்று தொலைவில் இருந்து தரிசிப்போமா?





அப்படியே கோயிலுக்கு வெளியே பாயும் தாமிரபரணி இருக்கின்ற அழகு நம்மை இன்னும் கட்டிபோடுகின்றது.






பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.





அகத்தியர் மகா ஆயில்யம் குரு பூசை 2020:-







மேலே நீங்கள் காண்பது பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லம் அகத்தியர் ஜெயந்தி விழா காட்சிகள் ஆகும். அடுத்து நம் கூடுவாஞ்சேரி குருநாதருக்கு நடைபெற்ற அகத்தியர் பூசையின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.



வெட்டிவேர் மாலையில் நம் குருநாதர் தரிசனம் காண இருக்கின்றோம்.














                                                 உலக நன்மை வேண்டி 108 தீபம் ஏற்றிய காட்சி




குருநாதரே சரணம்.





சந்தன காப்பில் வெட்டி வேர் மாலை அணிந்து நம் குருநாதரின் அருள் பெற்றோம்.



அன்றைய தினம் வடை பாயசத்தோடு அனைவருக்கும் உணவு வழங்கினோம்.




கூடுவாஞ்சேரி கோயிலில் உள்ள குருக்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் வேட்டி ,துண்டு, சேலை என புத்தாடை வழங்கினோம்.



இது போல் ஒவ்வொரு வழிபாட்டின் நிகழ்விலும் நாம் சில துளிகளை தான் இங்கே சொல்ல முடிகின்றது. நேரில் வந்து அருள் பெற்று செல்பவர்கள் ஏராளம். அனைத்தும் ஜீவநாடி அற்புதத்தாலே தான் இது போன்ற தரிசனம் நாம் பெற முடிகின்றது.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-



ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment