"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, February 4, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

இன்றும் ஜீவ நாடி அற்புதங்கள் பதிவை தொடர விரும்புகின்றோம். மீண்டும் மதுரையிலிருந்து தான் தொடங்க இருக்கின்றோம்.

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். இது நமக்கு தெரிந்த செய்திதான். முருகனின் ஆறு  படை வீடுகளில் இரண்டு மதுரையில் தான் உள்ளது. ஒன்று திருப்பரங்குன்றம் மற்றொன்று பழமுதிர்ச்சோலை. அட..இப்போது இதனை சொல்லும் போது எம் மனத்தில் தோன்றிய மற்றொரு செய்தி . இரண்டு படை வீட்டிலும் சித்தர்களின் அருளாசி தான்.திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தரும், பழமுதிர்ச்சோலை தாண்டி நூபுர கங்கை மேலே நாம் ராமதேவரின் அருளும் பெறலாம். இது போன்ற அறுபடை வீட்டில் சித்தர்களின் அருளில் சில இடங்களில் தான் உள்ளது. இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையிலே உள்ளது. இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார். மதுரையில் பஞ்ச பூதத் தலங்கள் உள்ளது.

1) நீர் ஸ்தலம் - மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில்
2) ஆகாய ஸ்தலம் - சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்
3) நில ஸ்தலம் -இம்மையில் நன்மை தருவார் கோயில்
4) நெருப்பு ஸ்தலம் - தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில்
5) காற்று ஸ்தலம் - தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் ஆகியவை மதுரையிலேயே உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகும்.

இது மட்டுமா? நம் சொக்கநாதர் 64 திருவிளையாடல்களை மதுரையிலே தான் நடத்தி உள்ளார்.இதில் இருந்து மதுரையின் பெருமை நமக்கு புரிகின்றது.இத்தகு மதுரையிலே நம் குருநாதரின் தரிசனம் இந்த வாரம் முதல் பெற இருக்கின்றோம். இதற்கு நம் முருகப்பெருமான் அருளாசி கொடுத்துள்ளார் என்றால் இது ஜீவ நாடி அற்புதங்கள் என்று தானே நாம் சொல்ல முடியும்.இத்துடன் மதுரை பரமசிவன் ஐயா அவர்களைப் பற்றியும், மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பற்றியும் இங்கே நாம் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்,


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை பரமசிவன் ஐயா அவர்களோடு அன்பில் இருந்து வருகின்றோம். ஒவ்வொரு முறை ஐயா விடம் பேசும் போதும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒவ்வொரு அனுபவமும் நம்மை அன்பின் ஆழத்தை உணர்த்தும். அகத்தியத்தின் அன்பை ஊற்றெடுக்க செய்யும். வேதாத்திரி மகரிஷி பற்றியும் ஐயா அவர்கள் நம்மிடம் பேசி உள்ளார். இதெல்லாம் ஒரு சிறிய முன்மாதிரியே ஆகும். அவ்வப்போது நாம் நம்மால் முடிந்த சிறு தொகையை ஐயா அவர்களின் தொண்டில் இணைக்க சொல்லி சேர்ப்போம். 

இந்த ஆன்மிக பயணத்தில் நாம் ஐயாவை எப்படி நேரில் சந்திப்பது என்று பலமுறை சிந்தித்ததுண்டு. குருவிடம் நம் விண்ணப்பத்தை சொல்லி விட்டு ஏனைய பணிகளை வழக்கம் போல் செய்து வந்தோம். இடையில் என் திருமணத்திற்கு அழைப்பு தந்து பார்த்தோம். ஆனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது என்னப்பா அதிசயம் என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. ஒவ்வொரு முறை தேனிக்கு செல்லும் போதும் பக்கத்தில் உள்ள மதுரை சென்று வரலாம் என்று தான் நாம் நினைப்போம்.ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

அகத்தியரிடம் பல முறை இது பற்றி வேண்டி உள்ளோம். காலமும் கனிந்தது. அந்த நாளும் வந்தது. 2019 ஆம் ஆண்டில் தீபாவளி கொண்டாட நாம் தேனி சென்ற போது அப்படியே மதுரை வருவதாக கூறினோம். திரு.பரமசிவன் ஐயாவும் நமக்காக இறையருள் மன்றத்தின் சேவைகளை எங்கள் மூலமாக செய்ய பல ஏற்பாடுகளை செய்தார். அட.நினைத்துப் பார்க்கும் போது இதுவும் எமக்கு ஜீவ நாடி அற்புதமே ஆகும்.

அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி மதுரை சென்றோம். எம் தம்பி மாதவனும் எங்களுடன் இணைந்து கொண்டார். நேராக உணவு ஏற்பாடு செய்யும் உணவு விடுதிக்கு சென்றோம்.சிறிது நேரத்தில் நாம் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அன்பரை நேரில் சந்திக்க இருக்கின்றோம் என்ற ஆவல் ஒரு பக்கம். அகத்திய அடியார் ஒருவரை சந்திக்க இருக்கின்றோம் என்ற அவா மறு பக்கம். அந்த நிமிடம் வாய்த்தது. ஆமாம், மதுரை பரமசிவன் ஐயா அவர்களை சந்தித்தோம். கருணை விழி, அன்பின் சொல், அறவழியில் செயல் என மொத்தமும் அகத்தியம் பேசிக்கொண்டே இருந்தார். காலை உணவை முடித்து விட்டு சேவைக்கு கிளம்பினோம்.



சற்று நேரத்தில் உணவை ஏற்றிச் செல்ல வண்டி ஒன்று வந்தது. அதில் உணவு பதார்த்தங்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். நாமும் அவர்களை பின் தொடர்ந்து சென்றோம்.


காலை உணவு பொருட்கள் அனைத்தும் வண்டியில் ஏற்றப்பட்ட காட்சி மேலே நீங்கள் காணலாம்.




நேராக நாங்கள் மதுரை ஆஸ்டின் பட்டி அரசு மருத்துவ மனைக்கு சென்றோம். அங்கே பல பிரிவுகளை நோயாளிகள் இருந்தார்கள். நாங்கள் சென்ற உடன், எங்களுக்காக அவர்கள் காத்திருப்பதை நாம் புரிந்து கொண்டோம். புற நோயாளிகள் பிரிவு, காச நோயாளிகள் பிரிவு என வார்டுகள் இருந்தது.அனைவரும் வரிசையின் நின்றாரகள்.தீபாவளி பண்டிகையொட்டிய சேவை என்பதால் இனிப்பும் சேர்த்து வழங்கப்பட்டது.



இதோ..இனி காலை உணவு தரும் சேவை ஆரம்பம்.




இட்லி, இனிப்பு,வேக வைத்த பயறு, சாதம் என குறைவின்றி வழங்கிக் கொண்டு இருந்தோம். ஒவ்வொருவருக்கும் அன்னமிட்ட போது மனதில் அன்பு நிறைந்தது. நம் கூடுவாஞ்சேரில் சுமார் 15 பேருக்கு அன்னதானம் செய்வோம். இங்கே சுமார் 100 பேருக்கு மேல் செய்த போது மனதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி பிறந்தது. தானமும் தவமும் நம்மை காக்கும் என்பதை இங்கே உணர்வுப் பூர்வமாக உணர்ந்தோம். 

கொஞ்ச நேரம் சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அன்னசேவை நடைபெற்ற இடத்திற்கு வந்தோம். அங்கே என் மனைவி, என் தம்பி என இருவரும் இல்லாதது கண்டு திகைத்தோம். அங்கிருந்த அன்பர்கள் அந்த இடத்தின் பின்புறம் சென்று பாருங்கள் என்று கூறினார்கள். உடனே பின்னே சென்று பார்த்தோம். அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போய்விட்டோம்.

அங்கே பைரவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். 



பைரவர்களும் திருப்தியாக உணவு ஏற்றுக் கொண்டார்கள். இங்கே மஞ்சள் நிற உடையில் இருப்பவர் தான் மதுரை திரு.பரமசிவன் ஐயா ஆவார்.


பைரவர்களுக்கு மட்டும் தான் உணவா என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அடுத்து காகங்களுக்கு உண்வு கொடுக்க ஆயத்தமானோம்.




அடடா..உணவைத் தேடும் பைரவரும், காகங்களும் 











கா ,,,கா என்று சிறிது நேரம் அழைத்ததுதான் தாமதம். உடனே காகங்கள் உணவை நோக்கி பறந்து வந்தது.


இப்போது பதிவின் தலைப்பை படித்து பாருங்கள். ஈதலே இன்பம் தான் என்பது புரிகின்றது அல்லவா?





உணவூட்டும் அன்னையே! உமையே ! பேருண்மையே 
நஞ்சுண்டான் உள்ளத்துயிரே!
பிச்சையாய்  ஞானமும், பற்றற்ற மனமும் தா !
இனியவளே... இமவான் மகளே ! சரணம் தாயே !!

இந்த வரிகளை வாழ்வு முழுதும் கடைப்பிடிக்க அன்னையிடம் வேண்டுவோம். இந்த நிகழ்வு என்ன சாதரண நிகழ்வா? இல்லை..இதுவும் சித்தர்களின் அருளால் தான் அதுவும் நம் குருநாதர் அகத்தியரின் அன்பால் நமக்கு கிடைத்துள்ளது. மதுரை பரமசிவன் ஐயா அவர்களை நேரில் சந்திக்க நாம் விரும்பினோம். ஆனால் வெறும் சந்திப்பாக இல்லாமல் தித்திப்பாக ஒரு தொண்டில் நாம் இணைந்தோம் என்றால் இது ஜீவ நாடி அற்புதம் தான். 

மீண்டும் தொடர்வோம்.

மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment