அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அன்பார்ந்த மெய்யன்பர்களே.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி விழா இந்த வாரம் அனைவரும் கொண்டாட உள்ளோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.
இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை நாம் மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். திருக்கோயில் பற்றிய செய்திகள் அறியும் முன்னர் மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 இங்கே பகிர்கின்றோம்.
துளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.
தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால் பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது. அதை சமன் செய்ய ஈசன் குருமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாம் நேரே கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய ஆரம்பித்தோம். கோயில் குருக்களும் வந்து சேர்ந்தார்கள். நம் குருநாதர் சன்னிதியில் 5 விளக்கேற்றி அன்றைய நட்சத்திர கூட்டு வழிபாட்டை மேற்கொண்டோம்.
பைரவர் சன்னிதிக்கும் விளக்கேற்றி வழிபட்டோம்.
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே
பின்னர் நம் தளம் சார்பில் புதிய சேவையாக மாதம் ஒரு திருக்கோயிலுக்கு இலுப்பெண்ணை வாங்கி தருவதாக திட்டமிட்டு, இரண்டாவது கோயிலாக ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கினோம். சிவராத்திரி வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதாக குருக்கள் நம்மிடம் கூறினார்கள்.
அடுத்து ஒவ்வொரு சன்னிதியாக சென்று விநாயகர், கல்யாண துர்க்கை, முருகப்பெருமான், பைரவர், நவ கிரக நாயகர்கள், பைரவர் என போற்றினோம்.
அடுத்து கலந்துரையாடல் ஆரம்பமானது. சென்ற ஆண்டு அனுபவத்தை அப்படியே கூறினார்கள். அதனை இந்த ஆண்டு வழிபாட்டில் நிறைவு செய்வது எப்படி என்றும் ஆலோசனை நடைபெற்றது. அழைப்பிதழ் பத்திரிகை வழங்கினார்கள். அறிவிப்பு பதாகை, அறிவிப்பு அழைப்பிதழ் என அனைத்தும் அங்கே கொடுத்தார்கள்.

அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டுமென்றும், அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால் ஏதோ ஒரு ஈகோவினாலும், வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார். (ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.) ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில், சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது மிகச் சிறப்பாகும்.
ஸ்ரீ திருநாராயணன் பெருமாள் கோவிலும் அருகே உள்ளது.ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனத்தோடு இவரையும் தரிசனம் செய்யுங்களேன்.
ஸ்ரீ துளஸீஸ்வரர்
அன்னாபிஷேகத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர்
ஸ்ரீ வில்வநாயகி
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி பூஜையின் போது ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனம் மேலே கண்டீர்களா? கண்டிப்பாக ஒரு முறை சென்று வாருங்கள். இந்த தலத்தில் உள்ள அகத்தியர் தரிசனம் பெறாமல் விட்டால் எப்படி? இந்த தரிசனம் நிறைவு பெறும் ? அகத்தியர் தரிசனம் கீழே
மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு வழிபாடு இங்கே நடைபெற உள்ளது. அதற்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்து இருந்தார்கள். நாமும் சுமார் 2 ஆண்டுக்கு முன்னர் இங்கே சென்று இருந்தோம். எனவே நேரில் மீண்டும் ஒரு முறை செல்ல எண்ணி அன்றைய தினம் காலையில் இலுப்பெண்ணை வாங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்றோம்.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாம் நேரே கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய ஆரம்பித்தோம். கோயில் குருக்களும் வந்து சேர்ந்தார்கள். நம் குருநாதர் சன்னிதியில் 5 விளக்கேற்றி அன்றைய நட்சத்திர கூட்டு வழிபாட்டை மேற்கொண்டோம்.
உலகில் உள்ள அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி பிராத்தனை செய்தோம்.
குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் பக்கத்தில் இருந்த பைரவர் தனி சந்நிதியில் இருந்தார்.
சூரியன் , சந்திரன் வழிபாடும் தீபமேற்றி நடைபெற்றது.
பைரவர் சன்னிதிக்கும் விளக்கேற்றி வழிபட்டோம்.
பின்னர் குருக்களிடம் மதுரை பசுமலை ஸ்ரீ அகத்தியர் விழாவிற்கான அழைப்பிதழை தந்தோம். சிறிது நேரத்தில் அன்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். நமக்கு அழைப்பு விடுத்த திரு.ரமேஷ் ஐயா அவர்களும் வந்தார்கள். ரமேஷ் ஐயா அவர்கள் நம்மை ஒவ்வொரு சன்னிதியில் சென்று வழிபட சொன்னாரகள். அப்போது நாம் ஏற்கனவே வழிபாடு செய்து விட்டோம் என்று கூறினோம். உடனே அவர் நம்மிடம் தீபமேற்ற அகல், எண்ணெய் .திரி கொடுத்து கல்யாண துர்க்கையிடம் வழிபட்டு வாருங்கள் என்றார். அடடே..நாம் மறந்து விட்டோமே என்று தோன்றியது.
உடனே கல்யாண துர்க்கை சன்னிதி சென்று விளக்கேற்றி அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்.
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே
பின்னர் நம் தளம் சார்பில் புதிய சேவையாக மாதம் ஒரு திருக்கோயிலுக்கு இலுப்பெண்ணை வாங்கி தருவதாக திட்டமிட்டு, இரண்டாவது கோயிலாக ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கினோம். சிவராத்திரி வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதாக குருக்கள் நம்மிடம் கூறினார்கள்.
இரண்டாண்டுக்கு பின்னர் நாம் சென்றதால் இங்கே தனியே அகத்தியர் பெருமானுக்கு இருந்த சன்னிதி நம்மை அன்பில் கட்டியதை கண்டோம். அகத்தியரை மனமுருகி பிரார்த்தித்தோம். இங்கே நம் குருநாதர் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி தருகின்றார். ஏற்கனவே இங்கு நின்ற கோலத்திலும் அகத்தியர் தரிசனம் பெறலாம்.
அன்னையை வழிபட்டோம்.
அடுத்து ஒவ்வொரு சன்னிதியாக சென்று விநாயகர், கல்யாண துர்க்கை, முருகப்பெருமான், பைரவர், நவ கிரக நாயகர்கள், பைரவர் என போற்றினோம்.
நாம் ஏற்கனவே சொன்னது போல் இந்த தலம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியரால் வழிபாடு செய்த தலம் என்பது போன்ற செய்திகள் மேலே காணலாம்.
அடுத்து கலந்துரையாடல் ஆரம்பமானது. சென்ற ஆண்டு அனுபவத்தை அப்படியே கூறினார்கள். அதனை இந்த ஆண்டு வழிபாட்டில் நிறைவு செய்வது எப்படி என்றும் ஆலோசனை நடைபெற்றது. அழைப்பிதழ் பத்திரிகை வழங்கினார்கள். அறிவிப்பு பதாகை, அறிவிப்பு அழைப்பிதழ் என அனைத்தும் அங்கே கொடுத்தார்கள்.
மதிய உணவு அங்கே சாப்பிட்டோம். கண்ணார ஐயனின் தரிசனம், வயிறார உணவும் கொடுத்து நம்மை மகிழ்வித்தார்கள்.
அடடா..என்ன அழகு..எத்தனை அழகு..ஓம் நமச்சிவாய என்று ஓதிக் கொண்டே இருந்தோம். பின்னர் திரு.ரமேஷ் அவர்களிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சிவராத்திரி தரிசனத்திற்கு ,மீண்டும் இங்கே வர விண்ணப்பம் வைத்து கிளம்பினோம்.
வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு, இறையருள் பெற நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம்.
மீண்டும் சந்திப்போம்
மீள்பதிவாக:-
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html
TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html
அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html
No comments:
Post a Comment