"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, February 18, 2020

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தாயாராகிக் கொண்டு இருப்பீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். சென்ற ஆண்டு சிவராத்திரி  காரி நாயனார் ஆசியுடன் நம் தளம் சார்பில் தொடங்கியது. அன்றைய தினம் நாம் பெற்ற தரிசன கோயில்களை தனிப் பதிவில் தொகுத்து தர விரும்புகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் 
2.கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம் 
3. காட்டாங்குளத்தூர் சிவன் கோயில் 
4. ஈசான்ய தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் 
5. மறுதேரி பிருகு மகரிஷி அருள் குடில் 
6. திருவடிசூலம் சிவன் கோயில் 
7. செம்பாக்கம் சிவன் கோயில் 
8. பாலா அம்மன் கோயில்

மேலும் சென்ற ஆண்டு சிவராத்திரி வழிபாட்டிற்காக நாம்  அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி செய்தோம். இந்த ஆண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சதுரகிரி யாத்திரை ஏற்பாடானது. எனவே குருவிடம் விண்ணப்பம் வைத்து விட்டு ஏனைய தொண்டினை தொடர்ந்து வருகின்றோம். அப்போது தான் நேற்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நமக்கு உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதோ அழைப்பிதழோடு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



சரி. சென்ற ஆண்டு சிவராத்திரி வழிபாட்டிற்காக நமக்கு கிடைத்த உழவாரப் பணி  அனுபவத்தை கீழே தருகின்றோம். ஏற்கனவே சொன்னது போல் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயதிற்கு நாம் காலை 10 மணி அளவில் சென்றோம்.


தாம்பரத்தில் இருந்து திருமதி.விஜய சுந்தரி அம்மா வந்திருந்தார்கள். மேலும் சில மகளிரும் தொண்டில் சேர்ந்தார்கள்.



நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். தம்பி வினோத்குமார் வந்த உடன் தன் பணியை செவ்வனே ஆரம்பித்தார்.








நந்தியம்பெருமானை சுற்றியும் தூய்மை செய்ய ஆரம்பித்தோம்.




அட..நம்ம  தம்பி சிவசங்கர். தம்பி சிவசங்கருக்கு தற்போது தான் திருமணம் இனிதே நடைபெற்றது. இங்கே திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.






கோயில் சன்னதி ஒவ்வொன்றாக வினோத் குமார் சுத்தம் செய்த காட்சி









நம் உழவாரப்பணி ஒவ்வொன்றிலும் சிறப்பாக தன் பணியை நல்கி வரும் பாலாவின் தொண்டு இங்கே காணலாம்.



அடுத்து நீங்கள் நால்வர் பெருமக்கள் தரிசனம் பெறலாம்.நாம் எங்குமே நால்வர் பெருமக்களை இது போல் கண்டதில்லை 









அட..நம்ம யாத்திரை தோழனின் அறிவிப்பு கண்டோம்.










                                                         நம் நண்பர் சத்யராஜின் சேவை



ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு உழவாரப் பணியை செய்து கொண்டிருந்தார்கள் 

இந்தக் கோயில் முழுதும் வண்ணங்களால் சிறப்பாக இருந்தது. இந்த வண்ணங்கள் நம் எண்ணங்களை சிறப்பாக மாற்றியது. நால்வர் பெருமக்கள் தரிசனம் வித்தியாசமாக இருந்தது.
இதோ நம் மஹா பெரியவா தரிசனமும் தான். நீங்களே கண்டு களியுங்கள்.




















குழந்தையும் தெய்வமும் ஒண்ணு என்று சொல்வார்கள். இங்கே இந்த குழந்தை தெய்வத்திற்கு தன் பணியை செய்கின்றது. தெய்வம் இங்கே இந்த குழந்தையிடம் கடன் பெறுமோ? என்று நமக்கு தோன்றுகின்றது.



உழவாரப்பணி களைப்பு நீங்க இடையே தர்பூசணி பழம் சாப்பிட்டோம். உழவாரப்பணிக்கு வந்த அன்பரே தர்பூசணி பழமும் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










அட..சென்ற ஆண்டு பொதிகையடியில் நடைபெற்ற யாக பிரசாதம் அன்று வழங்கப்பட்டது.







கோமுக தீர்த்த பகுதி சுத்தம் செய்த காட்சி. அன்றைய தினம் முதன் முதலாக கோமுக வழிபாடும் செய்தோம்.




















கோயிலை பராமரிக்கும் அன்பரை மரியாதை செய்த காட்சி. காலை 10 மணி அளவில் ஆரம்பித்த சேவை சுமார் 3 மணி அளவில் நிறைவு பெற்றது. கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் ஆத்ம கமலம் நூலும், பொதிகையடி கும்ப ஹோம பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் நடைபெற்ற உழவாரப் பணி நம் நினைவில் என்றும் நிலைக்கும் வண்ணம் உள்ளது. ஏனெனில் எம் இல்லற வாழ்விற்கான அஸ்திவாரம் இந்த கோயில் உழவார்ப்பணியில் தான் போடப்பட்டது. அதே போல் சென்ற ஆண்டில் பொதிகையடியில் நடைபெற்ற கும்ப ஹோம திருவிழாவில் தான் நம் குருநாதர் எம் இல்வாழ்விற்கு எம்மை நகர்த்தினார் என்பது கண்கூடு. இந்த ஆண்டின் அழைப்பிதழை விரைவில் பகிர்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் பொதிகையடி பாபநாச யாகத்தில் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.

சுமார் 8 பேர் அளவில் தான் கலந்து கொண்டோம். ஆனால் பணி நிறைவாகவே இருந்தது. உழவாரப்பணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நம் தளம் சார்பில் இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த உழவாரப்பணி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நம் ஆன்மிக வழிகாட்டி திரு.ஹரிமணிகண்டன் ஐயா விற்கும் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்திற்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

TUT தளத்தின் உழவாரப்பணி வருகின்ற சிவராத்திரி வழிபாட்டிற்காக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நாளை 19.02.2020 அன்று மாலை 5 மணி முதல் நடைபெறும். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருள் பெறும்படி வேண்டுகின்றோம். தொடர்புக்கு - 7904612352

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html


ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html

தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா (08.01.2020 ) - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்! - https://tut-temples.blogspot.com/2019/12/08012020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment