அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நவராத்திரி என்றால் கொலுவும் அம்மனின் திருவும் நமக்கு நினைவிற்கு வருகின்றது. அது போல் கந்த சஷ்டி என்றாலே திருச்சீரலைவாய் என்று தான் நமக்குத் தோன்ற வேண்டும். திருச்சீரலைவாய் என்றால் திருச்செந்தூர் தான். ஏற்கனவே முருகனின் அருள் மழையில் திளைத்துக் கொண்டு வருகின்றோம். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். இது காலத்திற்கும் ஏற்ற வரிகள். திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த பதிவில் மாசித் திருவிழா அழைப்பிதழ் இணைக்கின்றோம். சிவப்பு சாத்திய முருகப் பெருமான் அலங்காரம் தருகின்றோம்.
இப்போது தான் தை மாதம் பிறந்தது போல் இருந்தது. தை அமாவாசை அன்னதானம், தை மோட்ச தீப வழிபாடு, தை ஆயில்யம் கூடுவாஞ்சேரி அகத்தியர் வழிபாடு என அனைத்தும் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. இதோ. மாசி மாதத்தில் அடியெடுத்து வைக்கின்றோம்.ஏற்கனவே மாசி மகத்தின் அற்புதங்களை பதிவில் தந்துள்ளோம்.
திருச்செந்தூர் மாசித் திருவிழா மகிமை தரக்கூடியது. நமக்கு கிடைத்த அழைப்பிதழை இந்தப் பதிவில் தருகின்றோம். பொதுவாக முருகன் என்றாலே அழகு. அதிலும் திருச்செந்தூர் முருகன் பேரழகு தான். கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வண்ணம் திருச்செந்தூர் முருகன் கோயிலின் அழைப்பிதழ் இருக்கும். நீங்களும் ஒற்றிக் கொள்ளுங்கள்.
கன்னியாகுமரியிலிருந்து 88 கி.மீ வடக்கிலும், கடற்கரையில் அமைந்திருக்கும் இத்தலம் , திருமுருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இது இரண்டாவது படை வீடாகும். மற்ற ஐந்து படை வீடுகளான திருப்பரங்குன்றம் , பழனி என்னும் திருவாவினன் குடி , சுவாமி மலை என்னும் திருவேரகம் , திருத்தணி என்னும் குன்று தோறாடல் , அழகர் மலை மேலிருக்கும் பழமுதிர்ச்சோலை ஆகியவை மலைக்குன்று மேல் அமைந்திருந்தாலும், இத்தலம் மட்டும் , அலைவீசும் கடலருகே , கடல் மட்டத்திற்கும் கீழே அமைந்துள்ளது. இத்தலமும் கந்தமாதன பர்வதம் என்னும் குன்றின் மேலுள்ளதாகக் கந்தபுராணம் கூறுகிறது.
இத்தலத்திற்கு திருச்சீரலைவாய் திருச்செந்தில் , திருச்செந்தியூர், ஜெயந்திபுரம், சிந்திபுரம் திரிபுவனமாதேவி, சதுர்வேதிமங்கலம் எனப் பல பெயர்கள் இலக்கியங்களிலும் , கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமது திருப்புகழ் பாடல்களில் திருச்செந்தூர் எனப் பாடிய பின்னரே , இத்தலம் திருச்செந்தூர் என அழைக்கப்படலாயிற்று. இராவணனை வதம் செய்த பின்னர் இராமர், சிவனை கடற்கரை ஸ்தலமான இராமேஸ்வரத்தில் வழிபடுவது போல , முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த பின்னர்,சிவனை வழிபடும் கடற்கரை ஸ்தலம் திருச்செந்தூர் ஆகும்.
புராண வரலாறு
திருச்செந்தூர் கடலைத் தாண்டி அமைந்திருந்த வீர மகேந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு , சூரபத்மன் என்னும் அசுரன் ஆட்சி செய்து வந்தான். சிவனை நோக்கித் தவங்கள் பல புரிந்து அநேக வரங்கள் பெற்ற அசுரன் ஆணவங் கொண்டு மூவுலகையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகள் தாங்காது தேவர்கள் சிவனிடம் முறையிட , சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை , கங்கை ஏற்று சரவணப் பொய்கையில் இட அவை ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் , பார்வதி தேவி ஒன்றாக அணைக்க , அக்குழந்தைகள் ஒன்றாக இனைந்து ஆறுமுகங்களும் , பன்னிருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான் தோன்றினார். சிவபெருமான் தனது ஞான சக்தியை வேலாயுதமாக்கி வழங்க, முருகனும் அவ்வேலாயுதத்துடன் இலச்சத்தொன்பது படை வீரர்களுடன் தென்திசை நோக்கி பயணித்து , திருச்செந்தூர் வந்து தங்கினார்.
தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப் பெற்று அவர் மூலம் அசுரர்களின் வரலாற்றைக் கேட்டறிந்தார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டமையால் இத்தலம் வியாழ ஷேத்திரம் என்பர். முருகனும் பின்னர் தமது படைத்தளபதி வீரபாகுவை அசுரனிடம் தூது அனுப்ப , அத்தூது பயனற்றுப் போகவும் போர் தொடங்கியது. போரில் சூரபத்மனின் தம்பி மற்றும் பிள்ளைகள் இறந்து பட , முருகனுக்கும் , சூரபத்மனுக்கும் கடைசியாக நடந்த போரில் சூரபத்மன் மாமரமாக மாறி நிற்க , முருகனின் வேல் அம்மரத்தை இரெண்டாகப் பிளந்தது. ஒரு பாகம் சேவலாகவும் , மறு பாகம் மயிலாகவும் மாறின. சேவலைத் தனது வெற்றிக் கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். சூரசம்காரம் முடிந்ததும், முருகப் பெருமான் தனது தந்தையாகிய சிவனை பூஜை செய்ய விரும்பிய போது , தேவதச்சன் என்னும் மயன் என்பவரால் உருவாக்கப்பட்டதே இக்கோவில். மூலவர் பால சுப்பிரமணியர் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யும் கோலத்திலேயே காட்சி தருகிறார்.
மூலவர் சுப்பிரமணியர்
இவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். தலையில் ஜடாமுடியுடன் , வலக்கை மேற்கையில் சக்தி ஹஸ்தமும், கீழ்க்கையில் பூஜைக்குரிய மலருடனும் , இடக்கை மேற்கையில் ஜெப மாலையும் , கீழ்க்கையை இடுப்பில் வைத்தும் காட்சி தருகிறார். சூரனை வென்று வந்தவுடன் சிவனை வழிபடும் கோலத்தில் உள்ளார். தெய்வானையை மணப்பதற்கு முன்னுள்ள பிரம்மச்சரிய கோலமாகும்.இவர் கடலை நோக்கி ஆண்டி வேடத்தில் காட்சி தருவதால் இருபுறமும் வள்ளி, தெய்வானை கிடையாது. இவரது பாதத்தருகில் வலப்புறம் வெள்ளியால் ஆன ஸ்ரீபெலியும் , இடப்புறம் தங்கத்தாலான ஸ்ரீபெலியும் உள்ளன. கருங்கல்லிலாலான இவருடைய அற்புதக் காட்சியை வேறு எங்கும் காண இயலாது. இச்சிலை மன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதி வடமலையப்பிள்ளை என்பவரால் திருநெல்வேலி குறுக்குத்துறையிலிருந்து கல் எடுத்துச் செய்யப்பட்டதாகும். மூலவருக்கு நேர் எதிரில் ஜெகந்நாதரின் வாகனம் நந்தியும், முருகனின் வாகனமாக சூரபத்மனும், இந்திரனும் இருமயில்களாகவும் உள்ளனர்.
பஞ்சலிங்கங்கள்
மூலவரின் கருவறைக்கு இடது பக்கத்தில் உள்ள சிறிய வாசல் வழியாக குனிந்து சென்றால் மூலவரின் பின்பக்கமாக அவருடைய வலது பக்கம் வந்து விடலாம். அங்கு ஐந்து லிங்கங்களைத் தரிசிக்கலாம். இவர்களைத் தரிசித்தாலே பாவங்கள் அனைத்தும் அகலும் என்பர். இவர்களுக்கு சற்று முன் பக்கம் மேற்கூரையில் ஒரு சிறு துவாரம் உள்ளது. அதன் வழியாக தேவர்கள் பூஜை செய்வதற்கு வந்து செல்வதாக கூறுவர்.
ஸ்ரீ ஜெயந்திநாதர்
மூலவர் மற்றும் பஞ்சலிங்கங்களைத் தரிசித்து விட்டு, இடது பக்கமாக வந்தால் முதலில் ஜெயந்தி நாதரைத் தரிசிக்கிறோம். இவரே மூலவர் பாலசுப்ரமணியரின் உற்சவ மூர்த்தியாவார். இருபக்கமும் வள்ளி தெய்வானை உள்ளனர். வீதி உலா வருதல் , யாக சாலைக்கு எழுந்தருளல் , சூரபத்மனை வதம் செய்வது , தங்கத் தேரில் பவனி வருவது அனைத்தும் இவரே ஆவார். மூலவர் தவக்கோலத்தில் உள்ளதால் , உற்சவரான இவரைத் திரிசுதந்திரர்கள் எனப்படும் முக்காணிப் பிராமணர்கள் மட்டுமே இவரது பாதம் சுமக்க இயலும். இவரது சந்நிதியில் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அது சந்திரலிங்கம் எனப்படும்.
சண்முகர்(ஆறுமுகப் பெருமான்)
இவர் ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடனும், வலக்கைகளில் ஒன்று ஆசிர்வதித்து , இடக்கைகளில் ஒன்று தன்னுடைய பாதத்தைக் காட்டியும் அருள்புரிகிறார். இவருடைய இடது பக்கமுள்ள தெய்வானை குமுத மலரையும் , வலது பக்கமுள்ள வள்ளி தாமரை மலரையும் கைகளில் ஏந்தியுள்ளார். இவரது முகத்தில் அம்மைத் தழும்புகள் போன்று புள்ளிகள் உள்ளன. டச்சு நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் இவரைக் கவர்ந்து சென்று தப்பி ஓடிய காலத்தில் கடலில் இவரை வீசியதால் , மீன்களால் கொத்தப்பட்ட புள்ளிகள் என்பர் ஒரு சிலர். இவரது வலது புறமுள்ள மாடக்குழியில் ஒரு லிங்கம் உள்ளது. அது ஆத்ம லிங்கம் எனப்படும்.
பஞ்சபூதங்கள் போன்று விளங்கும் பஞ்சலிங்கங்களுடன் சேர்த்து சூரியன் போன்று விளங்கும் ஜெகந்நாதலிங்கம், சந்திரன் போன்று விளங்கும் சந்திரலிங்கம் மற்றும் ஆத்மா போன்று விளங்கும் ஆத்மலிங்கம் ஆக மொத்தம் 8 வகை பொருளாய் இறைவன் விளங்குகிறார் என்பதை இவை நமக்குப் பறை சாற்றுகின்றன.
ஆலய அமைப்பு
இக்கோவிலின் இராஜ கோபுரம் கோவிலின் மேற்கு வாசலில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு வாசல் அருகில் கடல் நீர் ஆரவாரித்துக் கொண்டிருப்பதாலும் , கோபுரத்திற்குரிய அஸ்திவாரம் கடல் மண்ணில் தொண்ட இயலாது என்பதாலும் , கடல் அரிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலும் , மேற்கு வாசலில் இராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம் சுமார் 300 ஆண்டுகளுக்குள் தான் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி ஸ்வாமிகள் ஆவார். திருச்செந்தூர் முருகன் இவர் கனவில் தோன்றி அறிவுறுத்தியவாறு , கூலியாட்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலையிலும் , இப்பணியைச் செய்து முடித்துள்ளார். கூலியாட்களுக்கு அன்றாடம் சம்பளத்திற்குப் பதில் வீபூதி பொட்டலமே அளித்துள்ளார். அவர்களும் அதை பெற்றுக் கொண்டு தூண்டுகை விநாயகர் முன்னிலையில் அவற்றை பிரித்த போது, அவரவர்களுக்கு உரிய சம்பளமாக மாறியிருப்பதைக் கண்டனர். மேலும் முருகப் பெருமான் காயல் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு முகம்மதியர் கனவில் தோன்றி, ஸ்வாமிகளுக்கு ஒரு மூடை உப்பு கொடுக்கப் பணித்துள்ளார். மறுநாள் காலை அம்மூடை முழுவதும் தங்கக்காசுகளாக நிரம்பியிருந்தது என்றும் , இதுவே கோபுரம் கட்டி முடிக்கப் போதுமானதாக இருந்தது என்றும் கூறுவர். இக்கோபுரம் 9 நிலைகளுடன் 137 அடி உயரத்தில் 9 செப்பு கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
வழிபடும் முறை
இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் நாழிக்கிணறு சென்று நீராட வேண்டும். கோவில்லிருந்து சுமார் 200 அடி தூரத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 24 அடி ஆழமுள்ள இக்கிணற்றுக்குள் படிகள் மூலம் இறங்கினால் ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றிலிருந்து நீரை அள்ள அள்ள குறையாமல் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றின் ஆழம் 7 அடியாகும். தன் படை வீரர்களின் தாகம் தணிக்க முருகப்பெருமான் தனது வேலாயுததால் இங்கு குத்தியதால், இக்கிணறு தோன்றியதாகக் கூறுவர். இத்தலத்தில் 24 தீர்த்தக்கட்டங்கள் இருப்பினும் மிகவும் கீர்த்தி பெற்றது நாழிக்கிணறு ஆகும்.
நாழிக்கிணற்றில் நீராடிய பின்னர் , பக்தர்கள் ஈரத்துணியுடனேயே கடலில் சென்று குளிக்க வேண்டும். பின்னர் தூண்டுகை விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும் . தன் தம்பி கோவில் கொண்டுள்ள இடத்தைக் காண பக்தர்களைத் தூண்டிக் கொண்டேயிருப்பதால், இப்பெயர் என்பர். இவர் முன்பு சிதறு தேங்காயை உடைத்து , தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட வழிபட்ட பின்னரே , முருகனின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு கிரி வீதி வழியாக வளம் வர வேண்டும். இவ்வீதியில் தான் தங்கரத உலா நடைபெறுகிறது. இவ்வீதியின் மேற்குப் பகுதியில் தேவஸ்தான அலுவலகமும் , வடக்குப் புறத்தில் வசந்த மண்டபம், வேலவன் விடுதி தங்கும் குடில்கள் , வள்ளி ஒளிந்த குகை முதலியன உள்ளன. கிழக்கில் கடலும், தெற்குப் பகுதியில் அழகான நீராடுவதற்குத் தகுந்த கடற்கரையும் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு விசாக நட்சத்திரம்,சஷ்டி, கார்த்திகை நாட்களிலும் , மாதப் பிறப்பு நாள், கடைசி வெள்ளி, சித்திரை முதல் நாள் , புரட்டாசி மாதம் நவராத்திரி நாட்களிலும் , சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத முதல் நாளில் அன்னாபிஷேகமும், பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மீண்டும் சிந்திப்போம்.
ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html
மாசித் திருவிழா அழைப்பிதழ் இங்கே பகிர்கின்றோம்.
திருமுருகாற்றுப்படை 2 - திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்]
" வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் - - - - - - 78
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை - - - - - - 80
கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப - - - - - - 85
நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்
மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே ..." - - - - - - 90
பச்சை சாத்தி முருகப்பெருமான் அலங்காரம் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம். கிடைத்த உடன் இங்கே பகிர்கின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html
ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html
ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html
முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment