"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, February 20, 2020

மகா சிவராத்திரியில் மகேசனை நினைப்போம் - 2020 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அழைப்பிதழ்

அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி நாளை அனைவரும் கொண்டாட உள்ளோம். சகல சிவாலயங்களிலும் சிறப்பு பூஜை தான் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் நமக்கு கிடைத்த அழைப்பிதழ்களை இங்கே ஒரு சேர பகிர்கின்றோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். மேலும் தற்போது மிக மிக அதிக அளவில் எதிர்பார்க்காத சம்பவங்கள் அதிகளவில் கேட்டு மனம் அவதியுற்றோம். இந்த நிகழ்வுகளுக்கு முன்பாக சித்தன் அருளில் மாமகரிஷி அகத்தியர் பெருமான் அஷ்ட திக்குகளிலும் விளக்கு போடுங்கள் என்று வாக்கு உரைத்தார். அதனை நாம் திரு அண்ணாமலையிலும், கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்தில் பைரவர் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட்டோம். இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை தொடரவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது  கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.

இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை நாளை நாம் மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். நமக்கு முதன் முதலாக சிவராத்திரி அழைப்பு அருள்மிகு கந்தழீஸ்வரர் வழங்கி உள்ளார். இணைப்பைப் பார்த்து அருள் பெறவும்.

1. குன்றத்தூர் மலை அடிவாரம் - அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் 




வழக்கம் போல் வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.

அடுத்த படியாக நமக்கு ஸ்ரீ துளஸீஸ்வரர் கோயிலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நான்கு கால பூஜை பற்றி அழைப்பிதழில் காணவும்.

2. சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ள குளத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய அழைப்பிதழ் 





துளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.






அடுத்து நாம் உலக நன்மைக்காக நாளை நடக்க உள்ள வேள்விக்கான அழைப்பிதழ் பகிர்கின்றோம்.

3. உலக நன்மை வேண்டி மஹா வேள்வி - சென்னை மற்றும் மதுரை 



சிவய வசி
அனைவருக்கும் வணக்கம்

அகத்தியரின் வாக்கில் உலக நன்மைக்காக 5 இடங்களில் மஹா வேள்வி நடத்த உத்தரவிட்டிருந்தார். இதுபற்றி ஏற்கனவே குழுவில் பதிவிட்டிருந்தோம்.

அதன்படி வரும் 21.2.2020 வெள்ளிக்கிழமை மஹா சிவராத்திரியன்று இரு இடங்களில் இரவு முழுவதும் உலக நன்மைக்காக மஹா வேள்வி செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த வேள்வியில் அனைவரும் கலந்து கொண்டு சிவ பெருமானின் அருளும் ஆசியும்,  பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

சென்னை
கமல விநாயகர் சத் சங்க மடம்
ICF

மதுரை
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில், அவனியாபுரம், மதுரை 12.

4. கிளார் ஊரில் உள்ள அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில்


கிளார் ஊரில் உள்ள அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில் சிவ ராத்திரி அழைப்பிதழ் தருகின்றோம்.


அடுத்து நாம் காண இருப்பது பிரளயம்பாக்கம் சிவன் கோயில் அழைப்பிதழ்.

5. அருள்மிகு ஸ்ரீ பிரசன்னாம்பிகை தாயார் உடனுறை ஸ்ரீ காளத்தீஸ்வரர் ஆலயம் 



இங்கே நாளை நடைபெறும் வழிபாட்டில் சுமார் 1000 பேருக்கு அன்னசேவை செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

6. அரியதுறை மரகதவல்லி சமேத ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்  கோயில் சிவராத்திரி அழைப்பிதழ் 


       ஆலய கோபுரத்தில் மீசை வைத்த சிவன், பார்வதி மற்றும் விநாயகருடன் காட்சியளிக்கிறார். உள்ளே, விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சந்நிதிகள் உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் தனிச்சந்நிதியில் காட்சியளிக்கிறார். (எண்ணெய் சாத்திச் சாத்தி கருங்கல் சிலை போல் உள்ளது.) மரகதவல்லி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் சதுர பீடத்தில் வரமூர்த்தீஸ்வரர் காட்சி தருகிறார். சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் தனியே காட்சியளிக்கிறார். 

     இந்த கோயிலில் நவக்கிரஹங்கள் இல்லை. ஆனால் சூரியனும், சந்திரனும் கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளனர். கோயிலின் மேல் கூரையில் பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. இது இக்கோயிலில் வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்திலிருந்து நிவர்த்தியாவார்கள் என்பதைக் குறிக்கிறது.

     இங்கே வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷண அரச மரத்தை சுற்றி வந்து, பின்னர் வரமூர்த்தீஸ்வரரை உள்ளன்புடன் வணங்கினால், வாழ்வில் வளம் பெறுவர், பித்ரு தோஷம் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும். 


       சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இவ்வூர். கோயம்பேட்டிலிருந்து நெல்லூர், சூலூர், காளஹஸ்தி, திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறி கவரப்பேட்டையில் இறங்க வேண்டும். அல்லது RMK பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலயம். ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். 

7. அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில் திருவைகாவூர் தஞ்சாவூர் மாவட்டம்





அடுத்து நாம் காண இருப்பது திருநின்றவூர் அருகில் உள்ள பாக்கம் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய அழைப்பிதழ் 

8. திருநின்றவூர் அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவராத்திரி அழைப்பிதழ் 



அடுத்து திருஅண்ணாமலை ஸ்ரீ கமலா பீடம் 108 யாக பூஜை அழைப்பிதழ் தருகின்றோம்.

9. திருஅண்ணாமலை ஸ்ரீ கமலா பீடம் 108 யாக பூஜை அழைப்பிதழ்


9. விருதுநகர் ஓம் ஸ்ரீ சிவகுரு மேடம் சிவராத்திரி பெருவிழா அழைப்பிதழ் 



10. மகான் சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார் திருக்கோவில் பூஜை

வருகிற 21.02.2020 விகாரி வருடம் மாசி மாதம் வெள்ளி கிழமை மகாசிவராத்திரியை முன்னிட்டு நமது மகான் சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார் திருக்கோவிலில் 5 கால சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு குரு அருளை பெற அழைக்கிறோம்.

1முதல் காலஅபிசேகம் மாலை6 மணி.

2வதுகால அபிசேகம் இரவு9 மணி.

3வது காலஅபிசேகம் இரவு12 மணி.

4வதுகால அபிசேகம் அதிகாலை3 மணி.

5வது காலஅபிசேகம் காலை 6 மணிக்கு நடைபெறும்.

அபிசேகம்  மற்றும் பூசைக்கு தேவையான பால், பன்னீர், இளநீர்,தேன்,விபூதிமற்றும் பொருள்கள் வரவேற்கப்படுகிறது.

11. அருள்மிகு பெரியநாயகி சமேத அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ் 


12. திருக்கழுக்குன்றம் அருள்மிகு அபிராமி நாயகி உடனுறை அருள்மிகு உருத்திரகோட்டீஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ் 



இன்னும் அழைப்பிதழ்கள் உள்ளது. மீண்டும் ஒரு முறை பதிவை முதலில் இருந்து படித்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தங்கள் ஊருக்கு அருகில் உள்ள திருக்கோயில் சென்று தீபமேற்றி இந்த  ஜீவனை அந்த சிவனுடன் இணைக்க முயற்சி செய்யுங்கள். 

13. திருஅண்ணாமலை கீழ்நேத்தப்பாக்கம் அருள்மிகு ஆத்மநாயகி உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ் 



14. திருஅண்ணாமலை ஸ்ரீ பரிகார நந்தீஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 


அட. திருஅண்ணாமலை,மதுரை, சென்னை என அனைத்து கோயில்களின் அழைப்பிதழ் இங்கே காண முடிகின்றது அல்லவா? அடுத்து சித்தர் கோயில்களின் சில அழைப்பிதழை இங்கே தொடர்ந்து தருகின்றோம். அதற்கு முன்பாக நம் அனைவருக்கும் தாயாய் இருந்து தயை புரியும் மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் திருக்கோயில் விபரம் தருகின்றோம்.


16. தவத்திரு. பிரம்மானந்தசாமி மற்றும் கோவிந்தசாமி சித்தர் பீடம் அழைப்பிதழ் 


17. அருள்மிகு ஸ்ரீ ஜோதி மௌன  நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 


ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ

பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய்முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய்சடாமுடியோகம்பீரமான தோற்றமோ இல்லாமல்ருத்திராட்சம் அணியாமல்காவி உடுத்தாமல்கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமேஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு அண்மைக்காலத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோமலையோ, குகையோ அன்றுகங்கைநர்மதைகாவிரி போன்ற நதித்தீரமும் அன்றுதமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்)மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும்மௌனமாகவும்பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.



சுவாமிகள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து அறிந்து வந்துள்ளோம். எப்போ நம்மை அழைப்பார் என்று வெகு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றோம். இதோ ஆடி அமாவாசை இங்கு சிறப்பாக கொண்டாட இருக்கின்றார்கள்.

திண்டுக்கல் பழனி நெடும் சாலையில் உள்ளதே கசவனம்பட்டி என்ற கிராமம். திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள அந்த ஊர் அமைதியானது. ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர் . அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது.
அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம். எந்த உடையுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தார். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப் போல பிரும்மனின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம். பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார். பாம்புகளுடன் விளையாடுவாராம். திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம். அவர் அப்படி செய்தால் எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப் போகிறார்கள் என்பதைக் காணலாமாம். அவர் எவருடனும் பேசியது இல்லை. ஆகவே அவரை மௌன ஸ்வாமிகள் என அழைத்தனர். சுமார் அறுபது வயதுவரை வாழ்ந்து இருந்தவரை பற்றி நன்கு தெரிந்திருந்த மக்கள் அவரிடம் சென்று ஆசி பெற்று வணங்கினார்கள். பல ஞானிகள் மற்றும் மகான்கள் கூட தம்மை வந்து பார்த்தவர்களை அவரைச் சென்று பார்க்குமாறு கூறுவார்களாம். அவரை தெருப் பொறுக்கிகள் சீண்டுவது உண்டு. ஆனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம். புன்முறுவல் மட்டுமே அவர்களுக்கு அவர் தந்த பதிலாம். ஆனால் நாளடைவில் அவர் மெளனமாக செய்து வந்த மகிமைகளை கேட்டும் பார்த்தும் வந்த ஊர் பெரியவர்கள் அவர் பைத்தியம் அல்ல, மாபெரும் மகானே என்பதை உணர்ந்து கொண்டனர். ஆகவே அவர் எந்த இடத்திலாவது தங்க வேண்டும் என்பதை உணர்ந்து கசவனம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.



ஊரில் அவர் எந்த வீட்டிலாவது திடீர் என நுழைவாராம் . சமையல் அறைவரை சென்றுவிட்டுத் திரும்பி வருவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை. காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் நல்லது நடக்கும். அவருக்கு எதிலும் பற்று இருந்தது இல்லை . மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவார். எப்போதாவது எவராவது வந்து சிகரட்டைத் தந்தால் புகை பிடிப்பார். அதற்குக் காரணம் ஒரு சிகரட்டை புகைக்கும்போதே அந்த சிகரெட்டை கொண்டு தந்தவர்களது துயரங்கள் அவரிடம் சென்று விடும் . அவர் மொழி மௌனம். அவர் செயல்கள் மௌனத்தில், அவர் மற்றவர்களுடன் பேசியது மௌன மொழியிலேயே. அவரிடம் சென்றவர்களுக்கு அவர் மருந்து தந்தது இல்லை, பிரசாதம் தந்தது இல்லை, மந்திரம் செய்தது இல்லை, போதனைகளையும் செய்தது இல்லை. ஆனால் அவர் முன் சென்று தம் துயரைக் கூறி நின்றால், அவர் அவர்களை ஒரு முறை பார்ப்பார். அவ்வளவுதான். அல்லது திடீரென வந்தவர்களை எட்டி உதைப்பார், கையில் உள்ளதைக் கொண்டு அடிப்பார் அல்லது ஒரு அறை விடுவார். அடுத்தகணம் அவர்களின் வியாதியின் தன்மை குறைந்துள்ளது போல உணருவார்கள். வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். சில நாட்களிலேயே அவர்கள் துயரமும் அதன் காரணமும் விலகுவதை உணர்ந்தனர்.

எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல் அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும்.இப்படியாக மௌனப் புரட்சியினாலேயே பல மக்களுக்கு அருளி வந்த கருணைக்கடல் 1982 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார். 

ஆலயத்தில் அவர் சிவலிங்கமாக இருந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களைக் கத்து அருளுகின்றாராம். அவரை அடக்கம் செய்த இடத்தின் மீது மழைக் காலமே அற்ற அன்று பெரும் மழை கொட்டியது. வானத்தில் கருடன் ஒன்று அவர் சமாதி மீது மூன்றுமுறை சுற்றிப் பறந்து விட்டுச் சென்றது என்பதே அவருடைய தெய்வீகத்தை பறை சாற்றுவதாக உள்ளது.

அடுத்து நாம் காண இருப்பது அருள்மிகு குருசாமி சமாதி மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 

18. ராஜபாளையம் அருள்மிகு குருசாமி சமாதி மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 



19. கரூர் கண் சிமிட்டா மகான் ஸ்ரீலஸ்ரீ ஒதைவேட்டி சுவாமிகள் ஜீவசமாதிஜி ஆலயம் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ் 








20. மகான் யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர் ஜீவசமாதி மஹாசிவராத்திர  விழா
திருப்புறம்பயம் கிராமம், கும்பகோணம்
மஹாசிவராத்திரி அனைவரும் சித்தரின் அருள் கிட்ட வருக! 
அபிஷேக பொருள்கள் வழங்க வேண்டுகிறோம்

அனைவரும் அவசியம் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

அடுத்து நாம் காண இருப்பது நல்லம்பாக்கம் சிவன் கோயில் அழைப்பிதழ் 

21. அருள்மிகு திருநலமங்கை சமேத அருள்மிகு சொர்ணலிங்கேஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ் 



இது தவிர கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில், கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம், நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில், ஆதனுர் ஸ்ரீ கைலாச நாதர் கோயில், ஊர்ப்பக்கம் ஊரணீஸ்வரர் கோயில் என உலகெங்கிலும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு நான்கு கால பூசைகள் நடைபெறும்.

அடுத்து இன்று காலை நாம் திருக்கச்சூர் சென்றோம். அப்போது வரும் வழியில் ஒரு ஆலயத்தின் சிவராத்திரி விழா அழைப்பிதழ் கண்டோம். இதோ. உங்கள் பார்வைக்கு பகிர்கின்றோம்.


22. அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் ஆலய மகா சிவா ராத்திரி விழா அழைப்பிதழ் 



கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்று சொல்வார்கள். அது போல் தான் இந்த ஆலயமும். சிறிய கோயில் என்றாலும் அருள் அலைகளின் திணிவை நாம் நன்கு உணர்ந்தோம். கோயில் முழுதும் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் மந்திரங்களை தந்து இருந்தார்கள். விரைவில் தனிப்பதிவில் இந்த கோயில் பற்றி காண்போம்.

அடுத்து நாம் அங்கிருந்து புறப்பட்ட போது தூரத்தில் இருந்த மகானின் பார்வை நம் கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தோம். குருநாதர்களின் வரிசையில் இவருக்கென்று தனி இடம் உண்டு.  ஆம். ஓம் கிரியா பாபாஜி நம ஓம்! என்று மனதில் கூறி அங்கிருந்து கிளம்பினோம்.



குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி,. இத்தனை அழைப்பிதழ்களையும் நமக்கு பகிர்ந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.


மீள்பதிவாக:-


சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html


குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html




TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html


No comments:

Post a Comment