"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, February 27, 2020

மகான் பைரவ சித்தர் 132 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் என்றாலே அருளை வாரி வழங்குபவர்கள். நாம் வேண்டுவதை விடுத்து நமக்கு என்ன வேண்டுமோ அதனை தருபவர்கள். சிவானுபவத்தை சிந்தையில் தருபவர்கள். சித்த மார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தின் பல செய்திகளை நமக்கு அனுபவத்தில் தரும். சித்தர்களின் வழிபாடு நமக்கு நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் அருளாசியால் தான் கிடைத்து வருகின்றது. கூடுவாஞ்சேரி அருகில் என்று பார்த்தால் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் தரிசனம் பெற்று வருகின்றோம். அப்படியே இன்னும் கிடைத்த இந்த ஆன்மிக பயணத்தில் நாம் பல மகான்களை இங்கே தொட்டுக்காட்டியுள்ளோம். நமக்கு சித்தர்களின் குரு பூசை கிடைத்தாலும் இங்கே நம் தலத்தில் சிலரது குரு பூசை தகவல்களை மட்டுமே பதிவேற்றம் செய்கின்றோம்.இதனை நாம் தீர்மானிப்பது கிடையாது. அனைத்தும் குருவருளால் என்பது நம் தளத்தில்  தொடர்ந்து பயணித்து வரும் அன்பர்களுக்கும் புரியும்.

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் என்ற பதிவில் சுவாமிகளின் குருபூசை தகவல் அளித்தோம். ஆனால் இந்த பதிவு அளிக்கும் முன்னர் சென்ற ஆண்டில் சிவராத்திரி வழிபாட்டில் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் தரிசனம் பெற்றோம். இது போல் தான் நம் தரிசனம் அமைகின்றது. அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் தரிசனம் இன்னும் பெறவில்லை. ஆனால் அவரைப் பற்றி நம் தலத்தில் காண முடிகின்றது. 
ஏன் ? எதற்கு? எப்படி ? என்று நாம் பல கேள்விக்கணைகளை தொடுத்தாலும் நம் சிற்றறிவுக்கு இவை எட்டுவதில்லை.

அது போல் தான். பூந்தமல்லி அருகில் மகான் பைரவ சித்தர் கோயில் இருக்கின்றது என்று பலமுறை நாம் கேள்விப்பட்டும் நமக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய இயலவில்லை . ஆனால் மகான் பைரவ சித்தர் குரு பூசை தகவல் தருவதற்கு நம்மை சுவாமிகள் அழைத்தார் போலும் என்று நமக்கு இப்போது புரிகின்றது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லி சென்ற போது சிவானுபம் தரும் மகான் பைரவ சித்தர் அருள் பெற்றோம்.

பொதுவாக பைரவ சித்தர் என்ற பெயரில் பல சித்தர்கள் இருப்பார்கள் என்று தோன்றுகின்றது.  பைரவ சித்தர் என்று பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் அழைக்கப்பட்டு வருகின்றார்கள். சித்தர் கோயில்களுக்கும் பைரவர்களுக்கும் சம்பந்தம் உண்டு. கிண்டியில் உள்ள பாடலீஸ்வரர் தரிசனம் கோயில் தரிசனம் பெற்ற போது இதனை உணர்ந்துள்ளோம். அதே போல் இந்தப் பதிவில் பூந்தமல்லி  மகான் பைரவ சித்தர் அருள் பெற இருக்கின்றோம்.



சென்னை பூவிருந்தவல்லியில்   உள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் அருகே  ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இரு தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு  அமைந்துள்ளது இந்த ஆலயம். ஆஞ்சநேயர் ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள். 

வல்லப சக்தியோடு கூடியதான விநாயகர் திருக்கோலம் முதலில் அமைந்துள்ளது.அதனை அடுத்து அமைந்துள்ள அறையில் ஸ்ரீ பைரவ சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மிகவும் சக்தி படைத்ததாக அமைந்துள்ளது. பைரவ உபாசனை செய்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம் ஆகும். 


ஏற்கனவே கூறியது போல், இங்குள்ள விநாயகரை  முதலில் தரிசனம் செய்தோம். பின்னர் உள்ளே சென்றோம்.


அடடா..வெளியே இருந்து பார்க்கும் போதே அன்பின் அதிர்வலைகளை இங்கே உணர முடிகின்றது.



இன்னும் ஆழ  சன்னிதி உள்ளே செல்வோம்.





உள்ளே சென்று அன்பின் ஆழத்தை மெல்லிய அலைகளாக உணர்ந்தோம். ஐயா அவர்களை ஒரு சுற்று சுற்றி வந்தோம். கண்ணார கண்டோம். செவியால் உண்டோம்.



ஓம் பைரவாய நம என்று மனதுள் நாமம் சொல்லிக்கொண்டே  இருந்தோம். ஐயாவின் திருக்காட்சி பின்னே கண்டோம்.


சரணம். சரணம்.. மகான் பைரவ சித்தர் சரணம் என்று மனதுள் போற்றினோம். 


     குரு பாதம் பற்றினோம்.  குரு பாதம் பற்ற, பற்ற நம் பற்றுக்கள் நீங்கும்.



இதோ..நீங்களும் குருவின் பாதம் பற்றுங்கள். பற்றிய குருவைப் போற்றுங்கள். போற்றினால் தான் நம் வினை அகலுமப்பா. குரு பாதம் பற்றுவோம். குருவை போற்றுவோம். இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகான் பைரவ சித்தர் 132 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் தருகின்றோம்.






ஞானியர்களின் ஓட்டம் தொடரும். மீண்டும் சிந்திப்போம் 

மீளபதிவாக:-

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html


சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html


அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment