அனைவருக்கும் வணக்கம்.
ஒருவரைக் கண்டாலே, நம் இருப்பு கொள்ளாது...இங்கே இருவராக தரிசனம். ஒருவேளை அம்மையை
மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_5.html
இதற்கு முந்தைய பதிவில் கைலாச கோணா மலை பற்றிய சில துளிகளைக் கண்டோம். இதோ அந்த பதிவின் தொடர்ச்சியை இங்கே காண இருக்கின்றோம். கைலாச கோணாவில் இருந்து புறப்பட்டு நாராயணவனம் வந்து காலை சிற்றுண்டி முடித்து விட்டு, சரியாக பத்து மணி அளவில், சதாசிவன் கோணா மலை அடிவாரம் வந்து சேர்ந்தோம், இனி நடை பயணம் ஆரம்பம்.
எடுத்த எடுப்பிலே, எறும்புகளா ? என நினைக்க வேண்டாம். சில கி.மீ. தூரம் கடந்த பின், எறும்புகள் அணிவகுத்துச் சென்றது. நாம் தெரியாமல் மிதித்து விடுவோம். பின்னர் என்ன? என்று சொல்லவா வேண்டும்.
பல நூற்றாண்டுகளாக தன் இருப்பு உணர்த்தி
சாதாரணமான மண் பாதையாக தொடக்கம்
கற்கள் நிரம்பிய பாதை ஆரம்பம்
கண்களில் மட்டுமல்ல, உடல்,உயிர்,மனத்தில் பசுமை நிறைத்துக் கொண்டே சென்றோம்,இயற்கையின்
வண்ணங்களில் பச்சை வண்ணம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பசுமை நமக்கு வளமையைத் தரும். முருகனுக்குரிய உகந்த நிறம், வாழ்வில் வளம் பெற, பசுமையை மனதில் போர்த்துங்கள்
நாம் உங்களை பயமுறுத்துவதற்காக, பாதையைக் காட்டவில்லை. அனைவரும் முன்னேற்பாடுடன் அவசியம் போன்ற தகுந்த வழிகாட்டிகளுடன் செல்ல வேண்டும் என்றுரைக்கவே. நேரம் செல்ல செல்ல பயணத்தின் வலி ஆரம்பமானது. அதாங்க....பாதையில் சில சில சரளைக்கற்கள், கற்கள் தென்பட்டது
மூங்கில் மரம் கண்களுக்கு அகப்பட்டது. இயற்கை நமக்கு அவ்வப்போது பாடம் புகட்டி வருகிறது. நம் கண்களுக்கும், செவிகளுக்கும் இது புரிவதில்லை. மூங்கில் புகட்டும் பாடம் யாதெனில் , வாழ்வில் உயர வேண்டின், நாம் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடாமல், அதன் போக்கிலேயே சென்று, லாவகமாக சரி செய்ய வேண்டும் என்பதே
சுமார் நான்கைந்து கி.மீ தொலைவு நடந்திருப்போம். நீங்களே பாருங்கள்.
இது போல் நாம் மலையேற்றத்திற்கு குழுவாக செல்ல வேண்டும். பொதுவாக மலையேற்றம் என்றாலே தனியாக செல்வதை தவிர்க்கவும். இங்கே குழு உணர்வு முக்கியம். வாழ்விலும் தனியாக நம்மால் இருக்க முடியாது. இன்பம் கொடுக்கும் குடும்பம், குழந்தைகள் என ஒரு கூட்டம் அவசியம். ஆனால் இன்று ஒரு கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
நாகராசப் பிரபுவின் தரிசனம்
ராம் ராம் ராம். என மனதில் சொல்லிக்கொண்டு நடையை தொடர்ந்தோம்.
சரியாக ஆறாவது கி.மீ தொலைவில் நம் அப்பன் தரிசனம். ஶ்ரீ ஆகாய லிங்கேஷ்வரா என மனதில்
தியானித்தோம்
இங்கேயே காட்டுகிறாரோ. இருக்கலாம் .ஈசனின் திருவிளையாடல்கள் யாருக்குத் தெரியும்
இங்கிருந்து மலை இறக்கமாக தொடர்ந்தோம்
கன்னத்தில் போட்டுக் கொண்டோம்
மனப் பாதை தற்போது, மணல் பாதையாக தொடர்ந்தது
ஓரளவு நெருங்கி விட்டோம் என நினைக்க செய்த வழிகாட்டி பதாகை
மலை இறக்கம் தொடர்ந்து கொண்டு வந்தோம் . சதாசிவன் கோணா தரிசனம் அடுத்த பதிவில் தொடர்வோம்.
மீள்பதிவாக:-
சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html










































































No comments:
Post a Comment