"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 1, 2020

வள்ளலார் அருள்மணிமாடத் திருக்கோயில் - கும்ப நீராட்டு விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் வள்ளலார் அருள்மணிமாடத் திருக்கோயில் - கும்ப நீராட்டு விழா அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம். பதிவின் துவக்கத்திலேயே அழைப்பிதழ் தருகின்றோம். 




பதினெண் சித்தர்கள் வரிசை பற்றி நாம் அறிவோம். இது பதினெட்டு சித்தர்கள் என்று இல்லை. சித்தர்கள் வரிசையில் ஒவ்வொருவரும் ஒருவித நிலையில் அடங்குவர். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள். சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். இந்த வரிசை பற்றி பேசும்போது அருட்பெருஞ்சோதி பற்றி பேசிய வள்ளலார் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் அறிய உள்ளோம். வள்ளலார் என்றதும் நமக்கு அன்னதானம் என்று தான் நினைவிற்கு வரும். ஏன்? இந்த உயிர் வாழ உடம்பு வேண்டும். உடல் இயங்க பசி போக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும் போது, பசியோடு பலர் இருந்திருக்க, ஆன்மிகம் பற்றி சொல்ல முடியுமா என்ன? உண்மையான ஆன்மிகம் மற்றவர் துயர் போக்குதலே. அதனால் தான் வள்ளலார் என்றதும் அன்னசேவை நமக்கு தெரிகின்றது. அன்னதானம் மூலம்  எத்துணை எத்துனை விஷயங்களை சொல்லி, செய்து காட்டி இருக்கின்றார்.

அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.


வள்ளலார் தோற்றுவித்த அறநிலையங்கள், அன்பர்கள் ஏற்படுத்தியுள்ள பரந்துபட்ட சன்மார்க்க சங்கங்கள் வழி அணையா அடுப்பும், அருட்பெருஞ்சோதியும் என்றென்றும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றாலும் வள்ளலார் போதித்த வாழ்க்கை நெறியும், சமய வழிநின்று செய்த சமுதாய புரட்சியும், அவர் காலத்திலும் அவருக்குப் பிறகும் நின்று நிலைபெறவில்லை என்ற ஆதங்கள் வள்ளலாருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் உண்டு. அதனால்தான் ‘கடைவிரித்தோம் கொள்வாரில்லை‘ என்று கூறி மறைந்தார்.



இன்று துறைதோறும் தோன்றியுள்ள பல சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் வள்ளலாரே.

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் - வள்ளலாரே.

தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் - வள்ளலாரே.

தமிழகத்தில் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் - வள்ளலாரே.

தமிழ்நட்டில் முதன்முதலில் மொழிப் பாடசாலை (தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்) நிறுவியர் - வள்ளலாரே.

தமது கொள்கைக்கென்ற ஒரு தனி மார்க்கத்தை கண்டவர் - வள்ளலாரே.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியர்- வள்ளலாரே.அது, சமரச சன்மார்க்க சங்கம்.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கட்ணவர் வள்ளலாரே. - சன்மார்க்க கொடி.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் வள்ளலாரே. - அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.

தமது தொண்டுக்கென தர்ம சாலையைக் கட்டியவர் வள்ளலாரே. - சத்திய தருமச்சாலை.

தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையைக் கட்டியவர் வள்ளலாரே. சத்திய ஞானசபை.


சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே.

‘சாகாதவனே சன்மார்க்கி‘ என்பது வள்ளலாரின் உபதேசம்.

‘என் மார்க்கம் இறபொழிக்கும் சன்மார்க்கந்தானே‘.

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டு. அது சொல்லவன்றே‘ என்பவை வள்ளலாரின் வாக்குகள்.

இதோ..திருச்சி செந்தண்ணீர்புரத்தில் வள்ளலார் அருள்மணிமாடத் திருக்கோயில் - கும்ப நீராட்டு விழா நடைபெற உள்ளது. கும்ப நீராட்டு விழா என்பது அந்தக்காலத்தில் அரசர்கள் செய்த ஒன்று. இன்று பல கோயில்களுக்கு கும்ப நீராட்டு விழா நடைபெற்று வருகின்றது. பிரபஞ்ச சக்தியை கும்பத்தில் வார்த்து அதனை கோயில் முழுதும் இருக்க செய்வதே ஆகும். இறை சக்தியும், குரு சகதியுமாக அருட்பெருஞ்சோதி ஆண்டவராக ஈர்க்கும் நம் வள்ளலாரின் அருளை இந்த கும்ப நீராட்டு விழாவில் பெற நாம் அன்போடு அழைக்கின்றோம்.





மீண்டும் சிந்திப்போம்.

வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க !!

மீள்பதிவாக:-

தலை வணங்கி வருக! கேட்டது கிடைக்கும்!! - ஸ்ரீ ல ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள் தரிசிப்போம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_9.html

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html

 சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html




No comments:

Post a Comment