"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 10, 2020

சீரான அவர்பதம்அடையும் வரை - TUT அன்பரின் வாழ்த்துச் செய்தி

அன்பர்களே....

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் சென்ற ஆண்டு கொண்டாடிய TUT இரண்டாம் ஆண்டு விழாவின் துளிகளை எண்ணிப் பார்க்கின்றோம்.அதற்கு முன்பாக நாம் நம் குருமார்களின் ஆசியால் சதுரகிரி யாத்திரை சிறப்பாக நடைபெற்றது. சதுரகிரி யாத்திரையின் சில துளிகளை இங்கே சொல்ல விரும்புகின்றோம். சதுரகிரி யாத்திரை செல்லும் முன்னர் ஜீவ நாடி அற்புதங்கள் வழங்கிய மதுரை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் தரிசனம் செய்தோம். மதுரை பரமசிவன் ஐயா அவர்களை அன்று சந்தித்து சிறு சத்சங்கம் செய்வித்தோம். அனைத்தும் குருவருளாலே எனபது திண்ணம். நாமொன்று நினைக்க. தெய்வம் ஒன்று நினைக்கும். சதுரகிரி செல்ல வேண்டும் என்று நினைத்த நமக்கு, மதுரை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்ரா தரிசனம் கிடைத்தது என்றால் இது முருகப் பெருமான் வாரி வழங்கிய அருள்நிலை என்றே நாம் உணர்த்தப் பட்டு வருகின்றோம்.

சதுரகிரி யாத்திரை துளிகள்.

1. TUTயின் முதல் 2020 ஆம் ஆண்டு யாத்திரையாக சதுரகிரி யாத்திரை அமைந்தது 
அதுவும் மலை யாத்திரையும், தைப்பூச தரிசனமாக அமைந்தது.

2. 12 பேர் குழுவில் 5 மகளிர் என்பது கூடுதல் மகிழ்வாக இருந்தது.

3. 12 பேர் குழுவில் 10 பேர் முதல் முறையாக சதுரகிரி தரிசனம் 

4. எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்களுக்கு நெய் தீபமேற்றி வழிபாடு ( வன துர்க்கை, பிலாவடி கருப்பர் என )

5. சுந்தர மகாலிங்கம் தரிசனம். அபிஷேக பொருட்கள் தந்தோம்.

6. கஞ்சி மடத்தில் சுமார் 3 கிலோ அரிசி , 2 கிலோ பருப்பு தானம் கொடுத்தோம். பணமாக கொடுத்ததை விட இங்கே பொருளாக 
சுமந்து சென்று கொடுத்தது சிறப்பு.

7. 18 சித்தர்களுக்கு வஸ்திரம் கொடுத்தோம்.

8. சந்தன மகாலிங்கம் அபிஷேகம் கண்டோம். நம் தளம் சார்பில் அபிஷேக பொருட்கள் தந்தோம்.

9. சந்தன மகாலிங்கம் விளக்கேற்றி, வில்வ மாலை சாற்றி வழிபாடு 

10. பொது பிரார்த்தனையாக பூச நட்சத்திர வழிபாடு வன துர்க்கை தாயிடமும், ஆயில்ய வழிபாடு 18 சித்தர்களிடம், சந்தன மகாலிங்க ஐயாவிடம் சமர்பித்தோம்.

11. நைவேத்திய முந்திரி,திராட்சை, பாதம் அனைத்தும் ஆஞ்சநேயர்களிடம் கொடுத்தோம் 

12. வன துர்க்கை தாய்க்கு 21 எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்தோம்.

அள்ள, அள்ள குறையாத நிலையில் நிறைவாக அருள் பெற்றோம் . 

வழிநடத்தும் குருமார்களுக்கு நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம். அப்பாடா என்று சில இளைப்பாறுதல் தேவை என்றாலும் நம் தேடல் தொடர்ந்த வண்ணமே இருக்கும். அடுத்து மகா சிவராத்திரி வழிபாடு, மாசி மக யாகம், மாசி மக ஆயில்ய பூசை என்று நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கின்றது. சரி.விசயத்திற்கு வருவோம். இரண்டாம் ஆண்டு நிகழ்வின் துளிகளை காண உள்ளோம்.

TUT இரண்டாம் ஆண்டு விழாவில் "அகத்தியர் கீதம் " இசைத்தோம். இந்த அகத்தியர் கீதம் தற்போது சென்ற சதுரகிரி யாத்திரையில் இசைத்த போது , உடன் வந்த அடியார் பெருமக்கள் அகத்தியர் கீதம் பற்றி கேட்டார்கள். நாமும் அவர்களை தொடர்பு கொண்டு தருவதாக சொன்னோம். அத்தகு சிறப்பு உடையது அகத்தியர் கீதம். 

இந்த நிகழ்வின் தருணத்தை அருமையாக கவிதையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவை சார்ந்த அகத்திய அடியவர் தற்போது வடித்துள்ளார்.இதோ தங்கள் அனைவரின் பார்வைக்கும் இதை சமர்ப்பிக்கின்றோம்.

முத்தான முருகனருள் முன்னிற்க 
குறைவின்றி குருவருள் கூடிநிற்க 
சத்குரு சதானந்தர் குடில்தனிலே 
வித்தொன்று வந்துதித்த வேளைதனில் 
அன்புசார் மெய்ஞானம் ஓங்கிடுமே 
தேடல் உள்ளதேனீக்கள் எல்லாம் 
நுழைந்தது அகத்தியர் வனத்தினிலே 
முத்தான முருகனது  நாமம்கொண்டு 
வித்தக செயல்தன்னை செய்துவிட்டார்
சண்முகனாய் சுவாமிநாதனாய் வழிநடத்தி 
வனத்தை வரமாய் தந்தார் தேனீக்களுக்கு 
அன்புடனும் அன்னதானம் அறச்செயலும் 
அற்புதமாய் புரிந்திட ஆசிகோடி 
அபயமும் அளித்திட்டார் நம்ஆசான் 
பல்யுகமும் வாழ்க குருநாமம் 
குருவழி குருவடிபற்றி நிற்போம் 
சீரான அவர்பதம்அடையும் வரை  

வணக்கமும்,
வாழ்த்துக்களும் 
அகத்தியர் அடிமை 




வேறென்ன வேண்டும்? பொதுவாக பார்த்தல் இது ஒரு விழாவாகத் தோன்றும். விழாவினுள் நடைபெற்ற ஆசிகள்..அப்பப்பா ..எல்லாம் அகத்தியரின் அருள் தான். விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு வரும் அகத்தியருடன், ஏனைய அருளாளர்களின் அருள் பெற்று இருப்பார்கள். அதனை சதானந்தர் பார்த்துக் கொள்வார் . எப்போ அழைப்பீரோ? என்று வழி மேல் விழி வைத்து மீண்டும் காத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த தொகுப்பை அனுப்பிய அகத்திய அடியார் வாரம் தோறும் புதன் கிழமை ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு பூசை செய்து நமக்கு அந்த அருட்காட்சியை அனுப்பி வைப்பார்.இதோ.அந்த அருள் நிலைகளை நீங்களும் பெற்று அகத்தியம் பெறுங்கள்.











என்ன ஒரு அற்புத அலங்காரம். நம் அகங்காரம் நீக்கும் அலங்காரத்தில் அகத்தியர் தரிசனம். மேலே ஏற்கனவே சொன்ன பத்தியில் சதானந்தர் பார்த்துக்கொண்டிருப்பார் என்று சொன்னோம். என்ன ஒரு  ஆச்சர்யம். இன்று சதானந்த சுவாமிகளின் குருபூசை பெருங்களத்தூரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய குரு பூசை நிகழ்வில் நம் குழுவில் புதிய நண்பராக இணைந்தவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்துமே குருவருளால் என்பது கண்கூடு. 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு - மகேசுவர பூசை- https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_9.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html


2 comments:

  1. மிகவும் சிறப்பு!

    ReplyDelete
    Replies

    1. வழக்கம் போல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
      குருவின் தாள் பணிந்து

      நன்றி ஐயா

      Delete