"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, February 25, 2020

TUT சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் சிவராத்திரி வழிபாடு முழுமை செய்து இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். நம் தளம் சார்பில் சிவராத்திரி தரிசனம் அருமையாக நடைபெற்றது. அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று குருவருளால் மோட்ச தீப வழிபாடு சிறப்புற நடைபெற்றது.சென்ற ஆண்டில் காரி நாயனார் ஆசியுடன் சிவராத்திரி வழிபாடு செய்தோம். இந்த ஆண்டில் நம் TUT சிவராத்திரி வழிபாடு எப்படி இருந்தது என சில குறிப்புகளால் இங்கே காண  உள்ளோம். தேடல் உள்ள தேனீக்களாய்  குழுவின் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக குருவருளால் நடைபெற்றது. இதோ சில நிகழ்வின் துளிகளை  தருகின்றோம்.

1. இரவு 7 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம். சரியான கூட்டம் கண்டோம். சுமார் 100 கிலோ அரிசி போட்டு  அன்னம்பாலிப்பு அன்று நடந்தது.





இங்கே தரிசனம் முடித்து நாம் செல்லும் போது இரண்டு கோயில்களுக்கு வழங்க இலுப்பெண்ணை வாங்கி கொண்டோம்.



2. ஆவடி செல்லும் வழியில் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயிலில் தரிசனம்.கூட்டமே இல்லை. நம்மைக் கண்டு கோயில் குருக்கள் வந்து தீபாராதனை காட்டி தல வரலாறு கூறினார். நன்கு தரிசனம் செய்தோம்







3. அடுத்து ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் பெற்றோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் அருள் பெற்றோம். திருமூலர் தரிசனமும் பெற்றோம்




ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் மலரடிகள் போற்றி! போற்றி!!



நம் தளம் சார்பில் சிவபுராணம் வழங்கப்பட்டது.



4. நம் குழு அன்பர் திரு.சதீஷ்குமார் ஐயா அவர்களின் வீட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நம் கைகளால் பால்,தயிர்,பன்னீர்,திரவிய பொடி அபிஷேகம் செய்தோம். மற்ற நாட்கள் என்றால் கூட பரவாயில்லை. அதுவும் சிவ ராத்திரி அன்று நம் குருநாதருக்கு நம் கைகளால் அபிஷேகம் செய்யும் பாக்கியம் நமக்கு கிடைத்தது என்றால் இது குருவருளால் அன்றி சாத்தியமாகா. குருவின் மந்திரங்கள், பாடல் என அங்கே சிவராத்திரியின் சக்தியை பெற்றோம்.

5. அடுத்து பஞ்சேஷ்டி நோக்கி சென்று, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம் சென்று அம்மையப்பனை தரிசித்து, பதிகங்கள் பாடி பக்தி பரவசம் பெற்றோம்.இங்கே நம் தளம் சார்பில் இலுப்பெண்ணை கொடுத்தோம்.இந்த ஆலயத்தை நாம் தரிசிக்க பெரும்பாடு பட்டோம் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே குருக்களிடம் பேசி இருந்தாலும் நம்மால் சரியாக கோயிலின் இருப்பிடம் கண்டுபிடிக்க இயலவில்லை. இணையத்திலும் எந்த வழித்தட தகவல் இல்லை. நாம் செல்லும் நேரம் இரவு 11 மணி என்பதால் குருக்களுக்கு அழைத்து நாம் அவரை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. கோயில் சரியாக பஞ்சேஷ்டி அகத்தியர் கோயிலுக்கு எதிரே உள்ள வழியில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. நாம் அந்த பாதை தாண்டி சென்று விட்டோம். மீண்டும் இதே பாதைக்கு திரும்பி வந்து, கோயிலை நோக்கி சென்றோம். நாம் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. அருளை அள்ளினோம். சிவ புராணம் படித்தோம், மேலும் சில பதிகங்கள் பாடினோம்.








6. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற்று, பிரசாதம் பெற்றது இன்னும் அன்பின் ஆழமாக உள்ளது.

7. திருநின்றவூர் பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனம் பெற்று, வில்வம் சமர்ப்பித்து ஸ்ரீ அகத்தீஸ்வரரின் அன்பில் திளைத்தோம் எத்தனை பேருக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்று நமக்கு தெரியவில்லை .இங்கே நம் தளம் சார்பில் இலுப்பெண்ணை கொடுத்தோம்.



8. உலக நன்மை வேண்டி ICF கமல விநாயகர் அரங்கில் நடைபெற்ற யாத்தில் நிறைவாக பங்கு  பெற்றோம்.






9. அடுத்து சித்தாலப்பாக்கம் ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனம் பெற்று, 4 ஆம் கால பூசை பிரசாதம் பெற்றோம்.





10. மீண்டும் காலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் தரிசனமும், பிரசாதமும் பெற்று சிவராத்திரி வழிபாடு முழுமை செய்தோம்.





நாம் இம்முறை தரிசித்த கோயில்கல் அனைத்தும் நம் குருநாதரின் நாமம் பெற்ற கோயில்கள். இதுவே நமக்கு  இன்னும் மகிழ்வை தருகின்றது.நம்மோடு வழிபாட்டில் இணைந்த அனைவருக்கும் நன்றி கூறுவதுடன்  இவை அனைத்தும் தங்களின் பொருளாதார உதவி மற்றும் தங்களின் அருளுதவியாலே சாத்தியம். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி கூறி  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html


அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html

No comments:

Post a Comment