அனைவருக்கும் வணக்கம்.
நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில் அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.
இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம் ஆண்டு ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த தை மாதம் மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை,மார்கழி,தை என ஏழு மோட்ச தீப வழிபாடு குருவருளால் முழுமை பெற்றுள்ளது.எண்ணைக்கையில் என்ன உள்ளது? எண்ணங்களில் தான் அனைத்தும் உள்ளது.
மாசி மாத மோட்ச தீப வழிபாட்டு அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம். விடுமுறை தினத்தில் தான் இம்முறை வழிபாடு நடைபெற உள்ளது. எனவே அன்பர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகின்றோம்.
அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.
இனி சென்ற தை மாத அமாவாசை வழிபாடு பற்றி காண்போம்.
சுமார் 20 நபர்களுக்கு நம் தளம் சார்பில் அன்று காலை உணவு வழங்கினோம். பின்னர் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம். அங்கே மாலை மோட்ச தீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
அன்றைய தினம் தை அமாவாசை என்பதால் அபிராமி அந்தாதி பாராயணமும், ஸ்ரீ லலிதாம்பிகை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் அருளை அனைவரும் பெற்றுக் கொள்ளுங்கள்.
அனைவரும் பிரார்த்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்.
108 முறை இரண்டு மந்திரங்கள் உச்சரித்தோம்.
இந்த முறை தீபங்களை கவனித்தீர்களா? செந்தழலை நாம் உணர்ந்தோம். மேலும் ஒவ்வொரு தீபத்தை சுற்றியும் பூக்களால் அலங்காரம் செய்தோம்.பார்க்கவே பரவசமாக இருந்தது.

அன்றைய தினம் காலையில் மோட்ச தீப வழிபாட்டிற்கான முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டது. விளக்கேற்ற பெரிய அகல், நெய் அனைத்தும் தயார் செய்து கோயிலில் வழங்கினோம். அடுத்து வழக்கம் போல் நம் தளம் சார்பில் அமாவாசை அன்னதானம் செய்தோம்.
சுமார் 20 நபர்களுக்கு நம் தளம் சார்பில் அன்று காலை உணவு வழங்கினோம். பின்னர் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம். அங்கே மாலை மோட்ச தீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
அன்றைய தினம் தை அமாவாசை என்பதால் அபிராமி அந்தாதி பாராயணமும், ஸ்ரீ லலிதாம்பிகை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. அன்னையின் அருளை அனைவரும் பெற்றுக் கொள்ளுங்கள்.
நாம் சென்ற போது , மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதோ. அந்த நிகழ்வினை தருகின்றோம்.
அனைவரும் பிரார்த்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்.
108 முறை இரண்டு மந்திரங்கள் உச்சரித்தோம்.
இந்த முறை தீபங்களை கவனித்தீர்களா? செந்தழலை நாம் உணர்ந்தோம். மேலும் ஒவ்வொரு தீபத்தை சுற்றியும் பூக்களால் அலங்காரம் செய்தோம்.பார்க்கவே பரவசமாக இருந்தது.
நம் குழுவின் திரு. அனந்த கிருஷ்ணன் தம்பதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏனெனில் நாம் அகல்,நெய் ஏற்பாடு செய்வதோடு .சரி தீப திரி தயார் செய்வது இவர்களே ஆகும். ஒவ்வொரு மாதமு சிரமேற்கொண்டு இந்த தொண்டை செய்து வருகின்றார்கள். தை மாத வழிபாட்டில் அவர்கள் கோவை செல்வதாகவும் இருந்தது. ஆனால் வழக்கமான தொண்டை அவர்கள் செய்து விட்டே ஊருக்கு சென்றனர். நாம் இந்த நற்பண்பை அவர்களிடம் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம்.
அடுத்து பிரசாதம் விநியோகம் தொடங்கியது., தை அமாவாசை என்பதால் சுமார் 100 அடியார் பெருமக்களுக்கு அன்னதானம் செய்தோம்.
இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.
மாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விகாரி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் (23.02.2020)
மாலை 5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html
கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm
No comments:
Post a Comment