"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, February 15, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.




இன்றும் ஜீவ நாடி அற்புதங்கள் பதிவை தொடர விரும்புகின்றோம்.இதற்கு முந்தைய பதிவில் மதுரையில் ஆரம்பித்து மதுரை இறையருள் மன்றத்தின் சேவை பற்றி சிறிது கண்டோம். அற்புதம்..அற்புதம்..அனைத்துமே அற்புதம் தான். குருவின் பதத்தையும், பாதத்தையும் பிடித்து விட்டால் நடக்கும் அனைத்தும் அற்புதம் தான். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் சதுரகிரி செல்ல பயணசீட்டு பதிவு செய்தோம். இந்த ஆண்டு தை மாத பௌர்ணமியில் சதுரகிரி யாத்திரைக்கு குருவருளால் தயாரானோம். மதுரை சென்று அங்கிருந்து சதுரகிரி செல்ல திட்டம் தயாரானது. ஆனால் குருவருள் நம்மை வேறு மாதிரி கொண்டு சென்றது. ஆம். ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளால் கிடைத்த அற்புதத்தில் மதுரை பசுமலை அருகே ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் நம் குருநாதருக்கு என்று தனி சன்னிதி நாம் மதுரை  சென்ற நாளுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்தார்கள். நமக்கு மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. எப்போது சென்று அருள் பெறுவது என்று மனதில் புலம்பிய புலம்பல் நம் குருநாதரின் செவிகளுக்கு எட்டாது போய்விடுமா என்ன? ஆம் .சதுரகிரி யாத்திரை முன்னர் நாங்கள் மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் சென்றோம். நம் குருநாதரை வழிபட்டோம். மெய் உருகி நின்றோம். பிரசாதம் பெற்றோம். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? இதுவும் ஜீவ நாடி அற்புதம் தானே. தனி பதிவில் அந்த அனுபவம் காண்போம். அன்றைய தின நிகழ்வின் துளிகளை அனைவருக்கும் இங்கே தருகின்றோம்.


ஈதலே இன்பம் என தொண்டு செய்யும் மதுரை பரமசிவம் ஐயா அவர்களோடு சந்திப்பில் மற்றும் நம் தளம் சார்பில் சிறிய மரியாதை செய்தோம்.




குருநாதா..அம்மையப்பனே..



குருநாதர் வழங்கிய பிரசாதம் 



கலியுகத்தில் இறைவன் ஆயிரமாயிரம் அதிசயங்களை வைத்திருக்கிறான்.மனித உயிர்கள் தனது மன எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு, கண்டதே கோலம், கொண்டதே காட்சி என இன்பம் துய்க்க நினைத்துதுன்பத்தில் விழுந்த விட்டில் பூச்சி கதையாக மாறிவிடுகின்றன. அதை வெற்றிக் கொள்ள இறைவன் கோடிக்கணக்கான வழிகளை, நெறிகளை,கொள்கைகளை, கோள்களின் இயக்கத்தின் சூட்சும இரகசியங்களை,
ஆத்மாவைக் கடைதேற்றும் அற்புத வழிகளை, துன்பங்களைத் துடைக்கும்தூய நெறிகளை வகுத்து வைத்துள்ளான். 

இன்ன நேரத்தில் இன்னது நடக்க வேண்டும் என்ற விதியாசாரத்தின் அடிப்படையில் இயங்கும்வாழ்க்கை இறைவன் விதித்து இரகசியப்படி இயங்கி வருகிறது. அதை
ஜீவநாடி படிக்க ஆரம்பித்த நாள் முதலே உணர்ந்து வருகின்றேன்.

ஜீவ நாடியை, குறி சொல்வது போன்று சொல்லப்படும் என்றும்,மைவித்தை போல் இருக்குமோ என்றும், அந்த நேரத்தில் ஏற்படும் எண்ணத்தின் வெளிப்பாடோ என்றும், நாடி ஜோதிடம் போன்று ஏற்கனவே எழுதி வைத்து படிப்பதோ என்றும், அருள்வாக்கு என்றும், ஜோதிடம சொல்வது போல சொல்லப்படும் என்றும், எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாந்துதான் போவார்கள். 

நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில்,முருகப்பெருமான், அகத்தியர், சுகர் மற்றும் காகபுஜண்டர் ஆகியோரால் உரைக்கப்படும் இரகசியங்கள் ஜோதிடப் பலன் அல்ல. மாறாகப் பரிகாரம் உரைக்கப்படுகிறது. கர்மவினை குறைக்கும் சூட்சுமங்கள் உரைக்கப்படுகின்றன. ஏனெனில் அடுக்கடுக்காய் ஆயிரம் பலன்கள் சொன்னாலும் ஒருவர் பொருளாதார ரீதியில் பலன் அடையவில்லை என்றால் நிறைவு ஏற்படுவதில்லை. இல்லானை எல்லாரும் வேண்டாம் என்கிறார்கள். பணம் இல்லாதவனை பரிசுத்தமானவன் என்று இந்தப் பாரினர் மதிப்பதில்லை.

பணம் இருந்துவிட்டால் அவன் படுபாதகனாக இருந்தாலும்பக்குவமானவன், பரிசுத்தமானவன் என இந்தப் பாரினர் கொண்டாடுகின்றனர். எனவே எம்மை நாடி, தேடி, அலைந்து திரிந்து வந்து ஒரு வழியாக ஜீவ நாடி படித்து விட்டால் அவர் பணக்கார வாழ்வில் ஒரு படி எடுத்து வைத்துவிடுகிறார். அதன் பின்பு எந்த நிலையில் அவர் இருந்தாலும் அதிலிருந்து சிறிது சிறிதாக பல மடங்கு தனது வாழ்வில் உயர்வினை அடைந்து விடுகிறார்.

அதேபோல் தனது கர்மவினையைத் தீர்த்துக் கொள்ளாமல், இருப்பதால்தான் பணக்கார வாழ்வினையோ, பகட்டு நிலையையோ சுகிக்க இயலாமல் சுந்தர வடிவை இழந்து சூழ்ச்சியான வாழ்விற்கு பலியாக நேரிடுகிறது. எனவே முருகப் பெருமானும் சரி, சித்தர்களும் சரி பலன் சொல்ல விரும்புவதில்லை. பரிகாரம் சொல்லி வாழ்க்கையைச் சரி செய்கிறார்கள். ஜாதகத்தையே மாற்றுகிறார்கள். ஜீவ நாடி மூலம் பல இரகசியங்களை உரைத்து, செயல்பாடாத கிரகங்களைச் செயல்பட வைத்து, சீக்கிரத்தில் சீரான வாழ்வை, சிரமமில்லாத வாழ்வை சித்தரிக்கிறார்கள். இதுதான் இரகசியம்.

பொதுவாக ஆலய பரிகாரங்களே பரிந்துரை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சில மாதங்களோ, சில வருடங்களோ ஜீவ நாடி சொல்கின்ற ஆலயங்களை விடாமல் தரிசனம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. அந்த ஆலய தரிசனத்தை முறையாகச் செய்யும் போது அந்த ஆலயத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ வேண்டும். அப்படி நிகழும் வரை அந்த ஆலயத்தைத் தொடர்ந்து வழிபட வேண்டும். என்ன அதிசயம் எனில் நமது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு ஏதேனும் அங்கு நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த இறைவனின் பார்வை நம்மீது விழுந்து விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும். 

அதன் பின்பு ஜீவ நாடியில் அதற்கான சூட்சும இரகசியங்களும், அந்த அதிசயத்தின் முழு செயல்களும் விளக்கமாக வரும். அதன் மூலம் அந்த அதிசயத்தை மனப்பூர்வமாக முழுமையாக அறிந்து கொள்ளலாம்.


நமது ஜீவ நாடியைப் பொறுத்தவரை ஜோதிடம் சொல்வது போன்று 12 வீட்டின் பலன்களை ஒரே முறையில் சொல்லி விடுவதில்லை. ஜீவநாடி என்பதே அப்போதைக்கு அப்போது தோன்றி மறைகின்ற எழுத்துக்களை வைத்து உரைக்கப்படுவது. எனவே முருகப்பெருமான் என்ன உரைக்க நினைக்கிறாரோ, அதை மட்டுமே படிக்க முடியும்.

 நாம் எதிர்பார்த்ததுதான் வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. முருகனது எண்ணம் எதுவோ அதுவே நாடியில் வரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளி கழித்து மீண்டும் கேட்க வேண்டிய தேதியையும் முருகனே நாடியில் உரைத்து விடுவார். அந்த குறிப்பிட்ட காலம் வரை முதல் முறை உரைக்கப்பட்ட பலன்களையும், பரிகாரங்களையும் கடைபிடிக்க வேண்டும். 

அதில் பல மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகிறோம். அடுத்த முறை எந்த குறிப்பிட்ட தேதியில் கேட்கச் சொன்னாரோ அப்போது அடுத்த இரகசியங்களை உரைப்பார். மீண்டும் ஒரு தேதி சொல்லி வரச் சொல்லுவார். இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ தொடர்ந்து ஜீவ நாடியில் வாக்கு ஒரு குறிப்பிட்ட நபருக்கு வந்து கொண்டே இருக்கும். எனவே ஒரே நாளில் ஒரே மூச்சில் முழுவதும் இங்கு உரைக்கப்படுவதில்லை.


அதேபோல் முதல் முறை சொன்ன ஆலயப்பரிகாரங்களை முறையாகக் கடைபிடிக்காமல் இரண்டாம் முறை பலன் வருவதில்லை. எனவே ஜீவ நாடியில் வருவதை முழுமனதுடனும், நம்பிக்கையுடனும் கடைப்பிடித்து வந்தால் முருகப் பெருமானும், சித்தர்களும், நமது வாழ்வில் நடத்தும் அதிசயங்களை அனுபவிக்கலாம். எமது வயது சிறியதானாலும் முருகனது அருள் முழுமையாக இருப்பதால் இத்தனையும் செய்ய முடிகிறது.
ஆலயப் பரிகாரங்கள் மட்டுமில்லாமல் ஒரு சில மூலிகை மர்மங்களும், அதைப் பயன்படுத்தும் விதமும் உரைக்கப்பட்டு அந்த மூலிகையை அணிவதற்குள் ஆயிரம் அதிசயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு யந்திரங்களை வைத்து பூஜை செய்யும் முறைகள் வருகிறது. இன்னும் சிலருக்கு யாகங்கள் செய்யச் சொல்லப்படுகிறது. ஞானத்தில் தெளிந்தநிலை உடையவர்களுக்கு மந்திர உபதேசமே ஜீவ நாடியில் வருகிறது.


.




அதை எப்படி உச்சரிப்பது எப்படி பிரயோகம் செய்வது என்பது கூடஒரு குரு, உடன் இருந்து கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி வருகிறது. உபாசனை செய்யும் இரகசியங்கள், தேவதைகளோடு உரையாடும் உயர்வான மார்க்கங்கள் உறுதியான வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. இது யாருக்கு பிராப்தமோ அவர்களுக்கே உரைக்கப்படுகிறது இன்னும் பாமர மக்களுக்கு மிகச் சுலபமான வழியாக அவர்களது ஏதேனும் மூன்று பிரச்சினைகளை ஒரு தாளில் எழுதி அவர்கள் குலதெய்வத்தின் பெயரோடு கொடுத்துவிட, அதை நான் பூஜித்து அவர்கள் குலதெய்வத்தோடு தொடர்பு கொண்டு ஆசி பெற்று ஜீவ நாடியை இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என சங்கல்பம் செய்து நாடியைப் பிரித்த உடனேயே உறுதியான தீர்வும், அவர்கள் குலதெய்வம் என்ன நினைக்கிறது, ஏதேனும் பூஜைகள் செய்ய வேண்டுமா அல்லது தேவை இல்லையா? என பல விடைகள் கிடைத்து வடிவேல் முருகனின் ஆசியும் கிடைத்து விடுகின்றன. இது தான் எளிமையான வழிமுறையாகும்.




கேட்கின்ற கேள்விகள் தொடர்பான விடைகள் மட்டுமில்லாது, இன்னும் சில கூடுதல் செய்திகளும், சித்தர்கள் மூலமும், முருகப்பெருமான் மூலமும் உணர்த்தப்படும். எனவே ஜீவ நாடி என்பது ஒரு நம்ப முடியாத பேரதிசயம் என்றால் மிகை இல்லை.

இப்படி ஜீவநாடி நாளும்நாளும் பல அதிசயங்களை நிகழ்த்தி வருகின்ற நிலையில் ஒரு மிகப் பெரிய தொழில் அதிபர் என்னைத் தேடி மிகச்
சிரமப்பட்டு வந்து ஜீவ நாடியில் வாக்கு கேட்க அமர்ந்தார். வந்தவர் உடன் அவர் மனைவியையும் அழைத்து வந்தார். பார்த்தாலே பணக்கார கலை அவர்கள் இருவர் முகத்தில் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஒரு சோக ரேகை அவர்கள் முகத்தில் ஓடியது. உங்கள் பிரச்சினையை இந்தத் தாளில் எழுதுங்கள் என வழக்கமாகச் சொல்வதைச் சொன்னேன். 

அவர்களும் பிரச்சினையை எழுதி அவர்கள் குல தெய்வத்தின் பெயரை எழுதி அந்த சீட்டை பிரார்த்தனை செய்து என்னிடம் கொடுத்தார்கள். நான் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்து ஜீவநாடியைபூஜை செய்து பிரச்சினையைப் பிரித்துப் பார்த்தேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டு இருந்தது.

மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்.

மீள்பதிவாக;-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment