"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 23, 2019

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் மார்கழி  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஓராண்டு மோட்ச தீப குருவருளால்  முழுமை பெற்றுள்ளது. ஏனெனில் தோராயகமாக சுமார்  ரூபாய் பத்தாயிரம் வரை இந்த வழிபாட்டிற்கு தேவைப்படுகின்றது. முழுதும் நம் குழு அன்பர்களின் உபாயத்தினால் இந்த வழிபாடு நடைபெற்று வருகின்றது. மேலும் வழிபாட்டிற்கு புதிதாக வரும் அன்பர்களும் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து வருகின்றார்கள் என்பது கண்கூடு.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.

10 ம் ஆண்டில்  வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம் குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை அப்படியே பகிர்கின்றோம்.


இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது.  துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.





ஐப்பசி மாத மோட்ச தீப பூசையானது நம் குருநாதரின் அருளாசியால் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் துளிகளை இணைத்துள்ளோம்.










நாம் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மூலம் திருச்சி உய்யங்கொண்டான் திருமலையில் உள்ள ஸ்ரீ உஜ்ஜீவநாதர் கோயிலில் நடைபெற்ற மோட்ச தீப பூசையில் கலந்து கொண்டோம். எங்கு பூசை நடந்தால் என்ன? கலந்து கொள்ளுவது தான் முக்கியம். அங்கும் சித்தர்களின் ஆசியில் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.



 இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.






ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் கார்த்திகை  மாதம் 10 ஆம் நாள் (26.11.2019)  
செவ்வாய்க்கிழமை  மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

No comments:

Post a Comment