"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 14, 2019

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி. மாயமின்றி நம்மை வாழ்க்கைக்கடலில் நீந்த குரு அவசியம். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர நம்மை ஆயத்தப்படுத்துபவர் குரு. இன்றைய சூழலில் குரு கிடைப்பது அரிது. கிடைத்த குருவை தொடர்வது அரிதினும் அரிது. குரு தொட்டுக்காட்டிய வித்தையை பழகுவது அரிதினும் அரிது. ஆம். குரு இல்லா வித்தை பாழ்! இன்று குருமார்கள் பலர் கேள்விக்குரிய செய்திகளாக வலம் வந்து விடுகின்றார்கள். அதனால் தான் சொன்னோம் குரு கிடைப்பது அரிது என்று. நமக்கெல்லாம் உலகிலேயே உன்னதமான குருவாக ஸ்ரீ அகத்தியர் பெருமான் கிடைத்துள்ளார். அண்மையில் நம் குருநாதரின் ஜீவ வாக்கு ஒன்று கிடைத்தது. அதனை அப்படியே பகிர்கின்றோம்.



ஒரு அன்பர்‌: எனக்கு ஏன்‌ சித்தர்களோடு தொடர்பு ஏற்பட்டது?

இறைவனின்‌ கருணையைக்‌ கொண்டு இஃதொப்ப இன்னவன்‌ ஒத்து பலரும்‌ அறிய முயல்வது.
” இத்தனை மனிதர்கள்‌ இருக்க,எனக்கு இவ்வாறு சித்தர்களோடு தொடர்பு ஏன்‌
ஏற்பட்டது?அதிலும்‌ குறிப்பிட்ட சித்தர்களோடு என்ன வகையான நிலையில்‌ எனக்கு தொடர்பு
ஏற்பட்டிருக்கிறது. யாம்‌ யாது செய்ய வேண்டும்‌?” என்றெல்லாம்‌ கேட்கிறார்கள்‌. நன்றாக
புரிந்து கொள்ள வேண்டும்‌.குறிப்பிட்ட ஒரு சித்தனோடு ஒரு பிறவியில்‌ தொடர்பு
ஏற்பட்டால்‌,அதே சித்தன்தான்‌ மறுபடியும்‌ வழிகாட்டப்‌ போகிறார்‌ என்று பொருள்‌ அல்ல.எந்த
சித்தர்களும்‌, பெயர்தான்‌ மாறுமே தவிர.உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும்‌ ஒரே
சமநிலையில்தான்‌ இருக்கிறார்கள்‌.எனவே,இஃதொப்ப எமது திருவடியைத்‌ தொட்டு எம்மோடு
தொடர்புடைய சில மாணாக்கர்கள்‌ பின்னால்‌ ப்ருகுவிடமோ வசிஷ்டரிடமோ,காக புஜண்டரிடமோ கூட செல்வதுண்டு, அஃதொப்ப காகபுஜண்டரிடம்‌ தொடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள்‌ மூலமும்‌,மானசீகமாகவும்‌ அறிந்து கொண்டவர்கள்‌.எம்மிடம்‌ வருவதும்‌ உண்டு.

பொதுவாக சித்தர்களோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுவது என்றால்‌ ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள்‌,ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே அஃதொப்ப சித்தர்களுக்குப்‌ பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம்‌.அடுத்தது,வழிபாட்டோடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம்‌.இவ்வாறு செய்வதால்‌ தொடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள்‌ வழிகாட்டுதல்‌ மூலம்‌ கடைத்தேற்ற வேண்டும்‌ என்று, இறைவன்‌ முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள்‌ கடந்து பிறவி எடுத்தாலும்‌,எஃதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார்‌.

இஃதொப்ப கூறும்‌ பொழுது நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்‌ சித்தர்கள்‌.ரிஷிகள்‌.முனிவர்கள்‌ ஆகிய இவர்களின்‌ வழிகாட்டுதல்‌ இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள்‌ அல்லது ஆத்மாக்கள்‌ இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள்‌ என்பது வேறு நிலை. அஃதொப்ப எல்லோருக்கும்‌ நாங்கள்‌
வழிகாட்டுவதில்லை. இறைவன்‌ எந்தெந்த ஆத்மாக்களைத்‌ தேர்ந்தெடுத்து எங்களிடம்‌.
ஒப்படைக்கிறாரோ, அஃதொப்ப ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள்‌ வழிகாட்ட
ஆணையிடப்படுகிறோம்‌. அ:ஃதொப்பவே நாங்கள்‌ வழிகாட்டிக்‌ கொண்டிருக்கிறோம்‌.
இஃதொப்ப நிலையிலே எவனொருவன்‌ ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை
செய்திருக்கிறானோ,அதிக அளவு பசுக்களை காக்கும்‌ முயற்சியில்‌ இருந்திருக்கிறானோ.”
உயிர்க்‌ கொலை புரிய மாட்டேன்‌” என்று இருந்திருக்கிறானோ அவர்களுக்கெல்லாம்‌
சித்தர்களின்‌ கருணையும்‌,கடாக்ஷமும்‌,இறை அருளாலோ அல்லது யாமே விரும்பியோ
செய்திடுவோம்‌.

மீண்டும் மீண்டும் ஐயனின் வாக்கைப் படியுங்கள். சென்ற ஐப்பசி மாத ஆயில்ய வழிபாட்டை காணவே இந்தப் பதிவை ஆரம்பித்தோம்.


                              வழக்கம் போல் அபிஷேக பொருட்கள் அணிவகுக்கப்பட்டது.



இம்முறை நம் குருநாதரை தாமரைப் பூ மாலை கொண்டு தரிசனம் செய்ய விரும்பினோம்.










தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் என ஒவ்வொரு அபிஷேகமும் கண்டோம். விபூதி தரிசனம் பெற்றோம்.




இம்முறை ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.கந்தசாமி ஐயா பூசைக்கு வந்தார்கள்.சித்தர்கள் போற்றித் தொகுப்பு. பதிகங்கள் என பாடினார்கள். பூசைக்கு சரியாக செல்வி. பூர்ணிமா வந்து சேர்ந்தார்கள். அடுத்த மாதத்திற்கு பூசை பொருட்களும் கொடுத்தார்கள். அபிஷேகம் முடிந்து தீபாராதனைக்கு காத்திருந்தோம்.




மலர்க்குவியலில் மன்னனைக் கண்டோம். ஒவ்வொரு பூசையும் நமக்கு ஒரு வித அருளை கொடுக்கின்றது என்பதே உண்மை. ஓராண்டுக்கு மேலான பூசையில் இம்முறை தான் மலர்க்குவியல் அதிகமாக இருந்தது. பச்சை, தாமரை, மரிக்கொழுந்து, ரோசா என மலர்களை பார்க்கும் போது குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றே தொழுதோம். 


குருவும் , குருவின் ,குருவும் அருகருகில் அப்படியென்றால் பதிவின் தலைப்பு சரி தானே.



மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம்.

அடுத்து ஐப்பசி மாதம் என்பதால் தீபாவளி பண்டிகை யொட்டி. குருக்களுக்கு சிறிய மரியாதை செய்துவிட்டு, பிரசாதம் சாப்பிட்டோம்.





இவர்கள் தான் கோயிலில் பாத்திரம் தேய்க்கும் பணி செய்து வருகின்றார்கள். நம் தளம் சார்பில் தீபாவளி இனிப்போடு, ஒரு சேலை வாங்கி கொடுத்தோம். சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு தீபாவளி சேவை நம் குருநாதரின் அருளால் சிறப்பான முறையில் நடைபெற்றது. இனிவரும் பதிவுகளில் அறிய தருகின்றோம்.

இதோ..காணொளி வடிவில் தரிசனம் 


                                       
- அடுத்த பதிவில் சந்திப்போம்.



மீள்பதிவாக :-

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment