அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று கார்த்திகை மாத மறைமதி வழிபாடு ஆகும். மறைமதி அப்படி என்றால் என்ன என்று கேட்பது நம் காதில் விழுகின்றது. அமாவாசை என்பதை மறைமதி என்று கூறுவது நன்று ஆகும். வழக்கம் போல் இன்று காலை சுமார் 20 நபர்களுக்கு நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழு சார்பில் காலை உணவு அளித்தோம். இன்று மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாட்டிற்கு ஆயத்தப் பணிகள் செய்துவிட்டோம். இன்று மாலை மோட்ச தீப வழிபாட்டில் சந்திப்போம். இன்று மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அதனை இங்கே அறிய உள்ளோம்.
சிவத்தலமாகிய திருவிசைநல்லூர் என்னும் திருவிசலூரில் வாழ்ந்தவர் ஸ்ரீதரவெங்கடேச தீட்சிதர். இவரை 'ஸ்ரீதர அய்யாவாள்' என அன்புடன் அழைத்தனர். இவரது தந்தை மைசூர் மகாராஜாவிடம் திவானாக பணிபுரிந்தார். இவரின் ஒரே மகன் தான் ஸ்ரீதரஅய்யாவாள்.
இளமையில் இருந்தே ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவர் பக்திப்பாடல்கள் பாடி வந்தார். தந்தையார் இறந்த பின்னர், திவான் பதவி கிடைத்தும் ஏற்கவில்லை. தாயின் அனுமதியுடன் தந்தையின் சொத்துக்களை தானம் செய்து விட்டு திருத்தல யாத்திரை புறப்பட்டார்.குறிப்பாக, காவிரி கரையிலுள்ள சிவத்தலங்களை தரிசித்தபடி வந்தார்.
திருவிடைமருதூரிலுள்ள மகாலிங்கசுவாமியை தரிசித்ததும் தன்னை மறந்து பரவசம் கொண்டார். மகாலிங்க சுவாமியின் பிரசாதம் இல்லாமல், அன்றாட உணவு ஏற்பதில்லை என்ற நிலைக்கு உயர்ந்தார். நாள் முழுவதும் புயலுடன் கனமழை பெய்தது. திருவிடைமருதூர் கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள காவிரி நதி பாயும் வாய்க்காலை கடக்க முடியாது என்னும் நிலை உருவானது. நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கத் தீர்மானித்தார்.
அன்றிரவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவே, கதவைத் திறந்தார். வாசலில் நின்றவர் பரிச்சயமான சிவாச்சாரியார். திருவிடைமருதூர் கோயில் அர்ச்சகர்.
மழையில் நனைந்து வந்திருக்கிறாரே என பதறினார். தலை துடைக்க துண்டு கொடுத்தார் ஸ்ரீதர அய்யாவாளின் மனைவி. மாற்று உடையாக வேட்டியும் கொடுத்தனர்.
தேடி வந்த காரணத்தைச் சொன்னார் சிவாச்சாரியார். ''உங்களின் மனஉறுதி எனக்கு தெரியும். மகாலிங்கசுவாமி பிரசாதம் சாப்பிட்ட பிறகு தானே நீங்கள் அன்றாட உணவைக் கூட சாப்பிடுவீர்கள். இன்று கோயிலுக்கு வரமுடியாததால் பட்டினி கிடப்பீர்களே என்று, பிரசாதம் கொடுக்க வந்தேன்'' என்றார்.இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த ஸ்ரீதரஅய்யாவாள், தன் வீட்டில் இரவு தங்கும்படி வேண்டுகோள் விடுத்தார். சிவாச்சாரியாரும் சம்மதித்தார். ஸ்ரீதர அய்யாவாளின் மனைவி உணவு பரிமாறினார். “நானும் பசியுடன் இருந்ததால் நன்றாக சாப்பிட்டேன்'' என்றார் சிவாச்சாரியார். ஆன்மிக விஷயங்களை நெடுநேரம் பேசி விட்டு தூங்கினர்.
அதிகாலை கண்விழித்த ஸ்ரீதர அய்யாவாள் அருகில் தூங்கிய சிவாச்சாரியாரைக் காணாமல் தவித்தார். ''கோயிலில் பூஜைக்கு நேரமாகி விட்டதால் சொல்லாமல் போயிருக்கலாம்'' என்றார் மனைவி.
மழை விட்டாலும் வாய்க்காலில் வெள்ளம் போகுமே! சிவாச்சாரியார் அதை எப்படி தாண்டியிருப்பார் எனக் கவலைப்பட்டார்.அப்போது ஸ்ரீதரஅய்யாவாளின் மனைவி, “நேற்று சிவாச்சாரியார் வரும் போதும் வெள்ளம் ஓடியிருக்குமே? எப்படி கடந்தார் என நீங்கள் யோசிக்கவில்லையே?'' என்றார்.
பிரசாதம் கிடைத்த மகிழ்ச்சியில் எதுவும் தோன்றவில்லை என பதிலளித்தார்.
அவசரமாகக் குளித்து விட்டு, அன்றாட பூஜையை முடித்து, கோயிலுக்கு கிளம்ப தயாரானார். வாய்க்காலில் வெள்ளம் செல்வதால் வேண்டாமே என மனைவி தடுத்தாள்.
''மகாலிங்க சுவாமி என்னை வழி நடத்திச் செல்வாரம்மா.. கவலைப்படாதே'' என்றார்.
வெள்ளத்தில் தட்டுத் தடுமாறி ஒருவாறாக திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலை அடைந்தார். சன்னதியில் இவருக்கு முன்பாக சிவாச்சாரியார் நின்றிருந்தார்.
ஸ்ரீதரஅய்யாவாளின் கண்களுக்கு கருவறையில் சுவாமி சற்று களைத்திருப்பது போல தோன்றியது.
அதை தெரிவித்த போது,''எனக்கு தோன்றிய எண்ணமே உங்களுக்கும் தோன்றுகிறதே'' என்ற சிவாச்சாரியார் மேலும், ''பாவம்....நேற்று கோயிலுக்கு வராததால் நீங்கள் பட்டினி கிடந்திருப்பீர்களே?” என்றும் கேட்டார்.
திடுக்கிட்ட ஸ்ரீதர அய்யாவாள், ''நீங்கள் தானே நேற்று இரவு பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தீர்கள்? நான் கொடுத்த வேட்டியை ஏற்றதோடு, என் வீட்டு உணவையும் சாப்பிட்டு பெருமைப்படுத்தினீர்களே?'' என்றார். மேலும் ''இன்று அதிகாலை எப்போது கிளம்பி கோயிலுக்கு வந்தீர்கள் என்றல்லவா நான் கேட்க வேண்டும்?” என்றார்.
“நானா...! நேற்றிரவு மழை பெய்ததால் கோயிலிலேயே தங்கி விட்டேன். எங்கும் போகவில்லையே.” என்றார் சிவாச்சாரியார். 'மகாலிங்கசுவாமி' என்று கூவிய ஸ்ரீதர அய்யாவாள், அவரது வேட்டி சுவாமி மீது இருப்பது கண்டு அதிசயித்தார்.
இந்த அதிசய நிகழ்வுக்கு பின்னர், ஒருநாள் கார்த்திகை அமாவாசையன்று தன் தந்தையார் ஸ்ரீலிங்கராயரின் திதியை அனுசரித்தார் ஸ்ரீதரஅய்யாவாள். பகல் நேரத்தில் பிச்சைக்காரன் ஒருவன் பசியுடன் வீட்டு வாசலுக்கு வந்தான். அந்தணருக்கு தயாரித்த சிரார்த்த உணவை அவனுக்கு சாப்பிடக் கொடுத்தார்.சிரார்த்த உணவை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது. எஞ்சியிருந்தால் பசுவிற்கு கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதை மீறிய ஸ்ரீதர அய்யாவாள் மீது கோபித்தபடி அந்தணர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
அய்யாவாளின் செய்கையால் தீட்டு ஏற்பட்டதாகவும், காசிக்குச் சென்று கங்கையில் நீராடினால் மட்டுமே திதி கொடுக்க முடியும் என்றும் அந்தணர்கள் தெரிவித்தனர்.
அன்றைய திதி நேரம் முடிவதற்குள் எப்படி காசிக்குச் செல்ல முடியும்? என வருந்திய ஸ்ரீதர அய்யாவாள் மயங்கி விழுந்தார். கனவில் தோன்றிய சிவன், ''உன் வீட்டுக் கிணற்றில் கங்கையை வரவழைக்கிறேன்'' என்று சொல்லி மறைந்தார்.கண் விழித்த ஸ்ரீதரஅய்யாவாள் 'கங்காஷ்டகம்' என்னும் பாடல் பாட, கிணறு பொங்கியது. அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கியது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரை வணங்கி, கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அந்தக் கிணற்றிலேயே நிலைத்தது. பின்னர் அந்தணர்கள் திதி கொடுத்தனர்.
அன்றைய தினம் மாலை வேளையில் திருவிசநல்லூர் ஈசன் கருவறையில், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கடேசன் வீட்டின் திதியில் உணவருந்தியதால் இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.
தாழ்த்தப்பட்டவராக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் வீட்டிற்கு வந்து உணவருந்திச் சென்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த அனைவரும், அவரைப் போற்றிப் பணிந்தனர்.
இந்த அற்புத நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று, ‘கங்கா பூஜை நீராடல்’ எனும் விழாவாக திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர வெங்கடேச திருமடத்தில் நிகழ்கிறது. மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில்,‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம், எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே.

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பின்னர் கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். இது மிகப்பெரும் பாக்கியமாகும்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html
No comments:
Post a Comment