"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 1, 2019

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - சஷ்டி பதிவு (8)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முதலில் நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு இணைந்துள்ள அனைத்து பண்பாளர்களுக்கும் கந்த ஷஷ்டி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தினமும் முருகன் தரிசனம் நமக்கு தித்திப்பாக இருக்கின்றது. கூடுவாஞ்சேரி முருகன், திருப்போரூர் கந்தன், வல்லக்கோட்டை முருகன், வயலூர் முருகன் என்று தரிசனம் பெற்று வருகின்றோம். இந்தப் பதிவில் தரிசனம் தொடர உள்ளோம்.







திருப்பருங்குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத்துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே

வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ

பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலிமலையுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ

இப்படி அழைத்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகின்றது. இந்த ஒரு பதிவு போதுமா என்று தெரியவில்லை.

நந்தன் மருகா நாரணி சேயே
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமிநாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்

தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு


இனி வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகப்பெருமான் தரிசனம் காண்போம்.

உற்சவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வாசனைநிறைந்த மஞ்சள் நிற (சாமந்தி)மலர்களால்(தினம் ஒரு மலர்) முருகர் அலங்கரிக்கப்பட்டு அருள்பாளிக்கிறார்.






உற்சவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வாசனைநிறைந்த திருநீற்றுப்பச்சிலை (தினம் ஒரு மலர்) முருகர் அலங்கரிக்கப்பட்டு அருள்பாளிக்கிறார்



கந்தசஷ்டி மூன்றாம் நாள் முருகப்பெருமான் ரோஜா நிற ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தரிசனம்



கந்தசஷ்டி இரண்டாம் நாள் முருகப்பெருமான் சிகப்பு நிற ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனம்


கந்தசஷ்டி முதல் நாள் முருகப் பெருமான் சம்பங்கி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தரிசனம்



இதோ.. கந்த  6 நாள் அலங்காரமும் ஒரே படத்தில்.



அடுத்து, திருப்போரூர் கந்தனின் பாதம் பிடிக்கலாம்.










அடுத்து வயலூர் குமாரனிடம் வரங்கள் கேட்போம்.

நான்காம் நாள் தரிசனம்



அடுத்து மூன்றாம் நாள் தரிசனம் 




முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் தரிசனம் இதோ.





அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment