அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சென்ற வாரம் கோடகநல்லூர் யாத்திரை சிறப்பாக நம் குழு அன்பர்களோடு சென்று வந்தோம். இரண்டு நாட்கள் யாத்திரையில் மலை தரிசனமாக நம்பி மலை யாத்திரை, சைவ, வைணவ கோயில்கள் என கண்டு வந்தோம். நம்பி மலை மற்றும் பாபநாசத்தில் தீர்த்த மாடினோம். ஒவ்வொரு கோயிலின் தரிசனமும் நம்மை திகட்ட,திகட்ட செய்கின்றது. நவ கைலாய தரிசன கோயில் தரிசனமாக கோடகநல்லூர் ஸ்ரீ கைலாசநாதரை தரிசித்தோம் என்றால் ஆதி நவ கைலாய தரிசன கோயில் என்ற வரிசையில் பிரம்மதேச சிவனார் தரிசனம் கண்டோம். விரைவில் நம் தளத்தில் நம்பி மலை யாத்திரை தரிசனம் பதிவுகள் தர குருவிடம் வேண்டுகின்றோம்.
அடுத்து, அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றோம்.
சென்ற ஆண்டில் நாம் கூடுவாஞ்சேரி நூலகத்தில் உழவாரப்பணி செய்தோம். அப்போது "உலக பக்தர்கள் தினம்" அன்பர் திரு.கண்ணன் ஐயா அவர்கள் நமக்கு அறிமுகம் ஆனார்கள். அன்றைய தினம் அவரே உழவாரப்பணியும் செய்தார். பணியின் நிறைவில் உலக பக்தர்கள் தினம்! என்ற பொக்கிஷத்தை நம்மிடம் கொடுத்தார்கள். இந்த இதழ் வருடம் ஒருமுறை மலரும் மலர். நறுமணம் வீசும் மலர். இதனை ஒரு பூங்கொத்து என்றும் சொல்லலாம். பற்பல செய்திகள் தாங்கி வரும் மலர்க்கொத்து இந்த இதழ். இந்த இதழ் நமக்கு தேனை மட்டுமே கொடுக்கும். ஒரே ஒரு முறை பூத்தாலும் இந்த நூல் பரப்பும் வாசம், நேசம்,இன்பம் அனைத்தும் அளப்பரியது. ஒவ்வோராண்டும் கார்த்திகை முதல் நாள் மட்டுமே இந்த மலர் வெளிவருகின்றது.இந்த மலர் பற்றி நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.
சென்ற வாரம் கோடகநல்லூர் யாத்திரை சிறப்பாக நம் குழு அன்பர்களோடு சென்று வந்தோம். இரண்டு நாட்கள் யாத்திரையில் மலை தரிசனமாக நம்பி மலை யாத்திரை, சைவ, வைணவ கோயில்கள் என கண்டு வந்தோம். நம்பி மலை மற்றும் பாபநாசத்தில் தீர்த்த மாடினோம். ஒவ்வொரு கோயிலின் தரிசனமும் நம்மை திகட்ட,திகட்ட செய்கின்றது. நவ கைலாய தரிசன கோயில் தரிசனமாக கோடகநல்லூர் ஸ்ரீ கைலாசநாதரை தரிசித்தோம் என்றால் ஆதி நவ கைலாய தரிசன கோயில் என்ற வரிசையில் பிரம்மதேச சிவனார் தரிசனம் கண்டோம். விரைவில் நம் தளத்தில் நம்பி மலை யாத்திரை தரிசனம் பதிவுகள் தர குருவிடம் வேண்டுகின்றோம்.
அடுத்து, அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றோம்.
சென்ற ஆண்டில் நாம் கூடுவாஞ்சேரி நூலகத்தில் உழவாரப்பணி செய்தோம். அப்போது "உலக பக்தர்கள் தினம்" அன்பர் திரு.கண்ணன் ஐயா அவர்கள் நமக்கு அறிமுகம் ஆனார்கள். அன்றைய தினம் அவரே உழவாரப்பணியும் செய்தார். பணியின் நிறைவில் உலக பக்தர்கள் தினம்! என்ற பொக்கிஷத்தை நம்மிடம் கொடுத்தார்கள். இந்த இதழ் வருடம் ஒருமுறை மலரும் மலர். நறுமணம் வீசும் மலர். இதனை ஒரு பூங்கொத்து என்றும் சொல்லலாம். பற்பல செய்திகள் தாங்கி வரும் மலர்க்கொத்து இந்த இதழ். இந்த இதழ் நமக்கு தேனை மட்டுமே கொடுக்கும். ஒரே ஒரு முறை பூத்தாலும் இந்த நூல் பரப்பும் வாசம், நேசம்,இன்பம் அனைத்தும் அளப்பரியது. ஒவ்வோராண்டும் கார்த்திகை முதல் நாள் மட்டுமே இந்த மலர் வெளிவருகின்றது.இந்த மலர் பற்றி நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.
அன்றிலிருந்து இன்று வரை கண்ணன் ஐயா அவர்களின் அன்பு தொடர்ந்து வருகின்றது.
சரி..உலக பக்தர்கள் தினம் மலர் திறந்து நறுமணம் நுகர்வோமா?
இயல்பை அப்படியே சொல்ல விழைகின்றோம். அட்டைப்படம் நம்மை வெகுவாக ஈர்க்கின்றது. 2014 ஆண்டு மலர் முகப்பில் பிரதோஷ நாயகனின் ஆட்டம் வெகு சிறப்பாக தந்துள்ளார்கள்.இது போன்று அட்டைப்படத்தில் சிரமேற்கொண்டு தருவது இவர்களின் சிறப்பு. இந்த ஆண்டு மலர் எப்படி இருக்குமோ என்று இப்பவே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்கள்.
முகப்பு மட்டும் சிறப்பு அல்ல. மலர் முழுதும் சிறப்பு ஆகும். தொட்டது துலங்க, மூத்தோனின் ஆசி அவசியம். இதழை திறந்ததும் விநாயகரின் தரிசனம் இருக்கின்றது. அசத்தலான ஆரம்பத்தோடு மலர் நறுமணம் வீச தொடங்குகின்றது. நாமும் விநாயகரை வழிபாடலாமா?
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
நன்றி மடலோடு இதழ் தொடங்குகின்றது. நன்றியுணர்வு மிக மிக முக்கியம். ஆசிரியர் & வழிகாட்டி திரு. கண்ணன் அவர்களின் நன்றியுரை காண முடிகின்றது. எந்த இதழாக இருந்தாலும் வாழ்த்துரை,ஆசியுரை இருக்கும். முடிவிலே தான் நன்றியுரை இருக்கும். ஆனால் நன்றி கூறி இதழ் தொடங்குவதை இங்கே தான் நாம் கண்டோம். இங்கே வாழ்வின் புரிதலை சொல்கின்றார்கள். ஒவ்வொரு நாளையும் நாம் நன்றி சொல்லி நிறைவு செய்ய வேண்டும். ஆனால் அவசர கதியில் மறந்து விடுகின்றோம். இந்த பக்கத்தைப் பார்க்கும் போது நாமும் நன்றி சொல்லிப் பழக வேண்டும் என்று தோன்றுகின்றது.
அடுத்து அன்னையின் மகிமைமிக்க பாடல் தருகின்றார்கள்.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
சக்தி இல்லையேல் சிவம் இல்லை. நாம் அனுதினமும் சக்தி வழிபாட்டை மேற்கொள்ள தூண்டுகின்றது இந்த பக்கம். இது போன்ற பாடல்களை வெளிக்கொணர்வது மிக சிறப்பு. தமிழால் பக்தி வளரும் என்பது கண்கூடு.
அடுத்து இதழ் முழுதும் சுவாரஸ்யமான செய்திகள் , கட்டுரைகள் ,ஆன்மிக துணுக்குகள் என காண முடிகின்றது.மனைவியும் ஒரு தாய் தான் என்ற கட்டுரை நம்மை நெகிழ செய்தது. இன்றைய காலகட்டத்திற்கேற்ற வண்ணம் செய்திகளை தந்திருப்பது இவர்களின் உழைப்பும், மலரின் மேல் உள்ள உன்னதத்தையும் காட்டுகின்றது.
இரண்டு பக்கம் மட்டுமே வண்ணப்படம் கொண்ட இதழ் இது. மலரின் உள்ளே கருப்பு வெள்ளை இருந்தாலும் மலர் முழுதும் வண்ணக்கலவையாகவே உள்ளது. நம் எண்ணங்களை வண்ணம் தீட்டும் பணியை உலக பக்தர்கள் தினம் மலர் செவ்வனே செய்து வருகின்றது.
இது மட்டுமல்ல. இதழின் உள்ளே பக்கத்திற்கு பக்கம் ஒரு வரி வைர வாசகம் பதிவு செய்து உள்ளார்கள். அவற்றுக்கு சிலவற்றை நாம் தருகின்றோம்.
- நேரம் கடத்தாதே, செயல்படு
- நடைப்பயிற்சி செய்வது சிறந்த விஷயம்
- ஆராயக்கூடாது, அனுபவிக்கனும்
- உங்கள் பார்வை மற்றவர்கள் மீது நல்ல கண்ணோட்டத்தில் இருக்கட்டும்.
- உங்கள் வாழ்வின் நிலைக்கு மற்றவை குற்றம் சொல்லாதே
- கனிவு,பணிவு,துணிவு பின்பற்றப்பட வேண்டியவை
- கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு பேணப்படவேண்டியவை
- உண்மை,உழைப்பு,உயர்வு போற்றப்படவேண்டியவை
- முயற்சி மட்டுமே சாதனை
- தியானம் பயிலுங்கள்.
- இறைவனை காண, அன்பு செலுத்துங்கள்.
- சுயமுன்னேற்றத்திற்கான வழியை தேடுங்கள்.
- ஆதிமூலம் தான் விதி.
- மனிதப் பிறவி எடுத்ததே மகிழ்ச்சிக்காகத் தான்.
- இழந்த நேரத்தையும், பெற்றோரையும் மீண்டும் பெற இயலாது.
- பேசுவது குறைவாக இருக்க வேண்டும்.
- கேட்பது அதிகமாக இருக்க வேண்டும்.
- திட்டமிடுங்கள். செயல்படுத்துங்கள்
- தைரியம் என்பது உயிரோடு இருக்கும் வரை தான்.
- அமைதி தான் சக்தியை .கொடுக்கும்.
- அமைதி வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
- செலவழிக்கும் முன் ஈட்டுங்கள் பணத்தை
- ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்.
- இறக்கும் முன் கொடுங்கள்.
- உதவி செய்யுங்கள், உபத்திரவம் செய்யாதீர்கள்
- ஓய்வின் போது நல்ல நூல்கள் படியுங்கள்
இது போன்று நம்மை ஊக்கப்படுத்தும் செய்திகள் பக்கத்திற்கு பக்கம் இருக்கின்றது. இதென்னப்பா ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. சின்ன தூசு தான் கண்ணில் விழுந்து நம்மை பாடாய்படுத்தும், அது போல் இது போன்ற சின்ன சின்ன செய்திகள் தான் நம் வாழ்விற்கு ஆதாரம். இந்த சிறிய விஷயங்களை கடைபிடிக்காது தான் சேதாரமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.
உலக பக்தர்கள் தினம் மலர் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். வாசிப்பின் தன்மை குறைந்து வருகின்ற இந்த காலத்தில் இது போன்ற ஒரு மலரை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உலக பக்தர்கள் தினம் மலரின் அமைப்பிற்கு இந்த பதிவின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதோ. இனிதான் சிறப்பான செய்தி தர இருக்கின்றோம். இதோ. 10 ஆம் ஆண்டில்...உலக பக்தர்கள் தினம்!
இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது. துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.
இது மட்டுமா? நம்மிடம் இந்த மலர்த்தோட்டத்தை தந்த போது கார்த்திகை தீபத்தை கொண்டாடும் விதமாக அகல் விளக்குகள் கொடுத்தார்கள். அதனை அவர்கள் வடிவமைத்த விதம் இருக்கின்றதே..அப்பப்பா. நம்மை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது.
என்ன ..ஒரு அற்புதமான வடிவமைப்பு.. வாசகங்களும் அருமை. நம் தளத்திற்கும் தீபத்திற்கு தொடர்பு உண்டு என்பது மீண்டும் உலக பக்தர்கள் தினம்! மூலம் கிடைத்துள்ளது. உலக பக்தர்கள் தினம் கார்த்திகை மாதம் முக்கியத்துவம் தருகின்றார்கள். கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான். தேடல் உள்ள தேனீக்களாய் குழுவும் மோட்ச தீபம் குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் வழிகாட்டலில் செய்து வருகின்றோம். அனைத்தையும் ஒரு நேர்கோட்டில் பார்க்கும் போது காரியமின்றி காரியமில்லை.
உலக பக்தர்கள் தினம் மலர் பற்றிய விபரங்களுக்கு:- திரு. கண்ணன் - +91 86089 40699 தொடர்பு கொள்ளவும்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
வருடமொருமுறை பூக்கும் பூந்தோட்டம் - உலக பக்தர்கள் தினம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_17.html
அருமை நண்பரே
ReplyDeleteஆன்மீக கண்ணன் ஐயா அவர்களையும் வணங்குகின்றேன்..
தங்களின் கருத்திற்கு நன்றி. வழக்கம் போல் இந்த தளத்தை பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவிடவும் ஐயா
Deleteகுருவின் தாள் பணிந்து,
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி