அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அகத்தியம் என்ற ஒற்றை வார்த்தைக்கு தான் சக்தி அதிகம். அன்பின் ஆழம் உணர்த்தும் சொல், அகத்திய சொந்தங்களை சேர்க்கும் சொல். பக்தியை உயர்த்தும் சொல். தமிழை வளர்க்கும் சொல். அகத்தியம் என்ற வார்த்தை சொல்லாது ஒரு நாளும் நாம் கடத்துவது இல்லை. அனைத்தும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம். இந்த சித்தர் வழிபாடு என்பது சாதாரண வழிபாடு அன்று. பார்க்க எளிமையாய் தோன்றும். ஆனால் பின்பற்றுவது கடினம், பயமுறுத்துவது நம் நோக்கம் அல்ல. பயத்தை உங்களிடம் இருந்து விளக்குவதே நோக்கமாகும். இந்த வழிபாட்டில் நமக்கு பல அகத்திய குருமார்கள் கிடைத்து உள்ளார்கள். நமக்கும் நம் தளத்திற்கும் தற்போது வரை வழிகாட்டியும் வருகின்றார்கள். தஞ்சாவூர் சித்தர் அருட்குடில், பிருகு மகரிஷி அருள் நிலையம், சின்னாள பட்டி அகத்தியர் ஞானக் குடில், பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம், காரைக்குடி ஸ்ரீ அகத்தியர் அதிர்ஷ்ட தீபக்குழு, மதுரை இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் அன்பின் ஆழத்தை சித்தர் வழியில், நெறியில், மரபில் உணர்த்தி வருகின்றது. நம்மை வழி நடத்தும் அகத்திய குருமார்களின் சேவைகளை பற்றி ஒவ்வொரு பதிவாக அறிய தருகின்றோம்.
முதலில் நாம் இந்தப் பதிவை தர இருக்கின்றோம் என்று நினைக்கவில்லை. ஆனால் குருவின் அருள் நம்மை வழிநடத்தி இந்தப் பதிவை தருகின்றோம். நம் தலத்தில் பொதிகை வேந்தே ! வருக !! என்றும், பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க!
ஒவ்வொரு அபிஷேகம் கண்டு மனம் மகிழ்வு பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
என்னும் அகத்தியர் துதியுடன் அகத்தியர் ஆயில்ய ஆராதனையில் அலங்காரம் காண இருக்கின்றோம்.

என்றும் இரு பதிவுகள் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனம் பெற்ற நாம் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ளோம்.இதே போன்று நம் குழு அன்பர் வீட்டில் மகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதே அன்பர் இல்லத்தில் மகனிற்கு வரும் 2020 ம் ஆண்டு திருமணம் உறுதியாகி உள்ளது. இதெல்லாம் எப்படி? நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளால் தான் என்பதில் எள்ளளவும் நமக்கு ஐயமில்லை.
நேற்றே இந்தப் பதிவ சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் விரும்புகின்றோம்.
காணி நிலம் வேண்டும்
பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்...
எம் அய்யன் அம்மை அருளால் பாரதீயின் கனவு மெய் பட்ட நாள்
பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்...
எம் அய்யன் அம்மை அருளால் பாரதீயின் கனவு மெய் பட்ட நாள்
ஆம். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் தான் ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் உருவானது. இன்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தை வாழ்த்துவோம் .
இந்த 5 ஆண்டுகளில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அகத்தியதை அன்பெனும் தேனில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்து வருகின்றது. மாதந்தோறும் அகத்தியரின் ஆயில்ய பூசை சிறப்பாக நடைபெறுகின்றது.தற்போது மாதம்தோறும் ஸ்ரீ மஹா பெரியவா அனுஷ பூஜையும் நடைபெற்று வருகின்றது. இங்கே நடைபெறும் ஆயில்ய பூசையின் சிறப்பஜ் இவர்களின் பிரார்த்தனை தான். பிரார்த்தனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுத்ததும் இவர்கள் தான். இது மட்டுமின்றி வெளியே யாருக்கும் தெரியா வண்ணம் பல சேவைகளும் ரீ அகத்தியர் ஞானம் இல்லம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அபிஷேகம் கண்டு மனம் மகிழ்வு பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் அகத்தியர் உறையும் உன்னத இடம். நாம் இதனை இரண்டு மூன்று முறை உணர்ந்து இருக்கின்றோம். உணர்ந்ததை நம்மால் வார்த்தையில் சொல்ல இயலாது. அனுபவிக்க மட்டும் தான் முடியும். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று அகத்தியர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதோ.இனி அலங்காரம் நடைபெறுகின்றது.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்
நீங்காதார் குலம் தழைக்க நிதி யாவனை
செஞ்சாலி வயல் பொழி சூழ் தில்லை மூதூர்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமும் இல்லை ஓர் வினையும் இல்லை
வேலுண்டு துணை வருங்கால் வெற்றி யுண்டாம்
அஞ்சாதீர் என்று யுக யுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்
என்னும் அகத்தியர் துதியுடன் அகத்தியர் ஆயில்ய ஆராதனையில் அலங்காரம் காண இருக்கின்றோம்.
அகத்தியத்தை நமக்கு ஊட்டி வரும் அகத்திய தம்பதிகளின் பாதம் பணிகின்றோம். ஒவ்வொரு மாத பூசையிலும் பொறுமையாக பூசித்து, அபிஷேக அலங்காரம் செய்து, யாரெல்லாம் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்து, பிரார்த்தனை பூர்த்தியாயின் நன்றி சொல்ல வராதவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லியும் வரும் இவர்களின் பரிவும் பாசமும் போதும்.
மீண்டும் ஒருமுறை பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தை வாழ்த்துவோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html
பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html
No comments:
Post a Comment