"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 27, 2019

குருநாதரின் அருளில் - தல யாத்திரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் சில ஆலயங்களின் தரிசனம் பெற இருக்கின்றோம். எத்தனை  முறை  கூறினாலும் இது இனிக்கத் தான் செய்யும். உலகில் நாம் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு இறைக்கு நன்றி சொல்ல வேண்டும். எத்தனை மகான்களின் கால் பதித்த பூமி. மனிதராய் பிறத்தல் அரிது. அரிதினும் அரிது நம் தமிழ்நாட்டில் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் சென்னையில் எத்துணையோ கோயில்கள், திருச்சியிலும் அப்படித் தான். இதே போன்று தஞ்சாவூர்,கும்பகோணம், மதுரை என பட்டியல் நீளும். இதில் நாம் திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால்  பாபநாசம், கல்யாண  தீர்த்தம், அத்ரி மலை , தற்போது புதிதாக கோடகநல்லூர் என சென்று வந்தோம்.



இவை அனைத்தும் சித்தன் அருள் மூலமும், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் மூலமும் தான் கிடைத்து வருகின்றது.மேற்காணும் அகத்தியர் தரிசனமும் சித்தன் அருளில் அருளப்பட்டது. தாமிரபரணி பக்கம் சென்று கால் வைத்தாலே போதும். மனம் லேசாகும். சுவாசம் சீராகும், உடல் உறுதியாகும், சித்தர்களின் மொழி புரியும். இந்த பயணத்தில் நமக்கு பல அகத்தியர் அடியார்கள் வழி காட்டி வருகின்றார்கள். அப்படி ஒருவர் தான் விக்ரமசிங்கபுரத்தை சேர்ந்து திரு.செல்லப்பா ஐயா அவர்கள். ஐயா அவர்களின் விருந்தோம்பலுக்கு ஈடு இணை கிடையாது. சென்ற ஆண்டில் திடீரென ஒரு யாத்திரை சென்றோம்.

அந்த யாத்திரையை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.


முதலில் நாம் பாபநாசம் சென்று தீர்த்தமாடி , பாபநாச ஆலய தரிசனம் பெற்றோம்.
மேலே காணும் படத்தை கண்டீர்களா? நம் குருநாதருக்கு இறையின் மணக்காட்சி தரிசனம்.
இது ஒன்றே போதும் பொதிகையில் அருளைப்பெறுவதற்கு. இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி என்ற தலைப்பில் தனிப்பதிவில் நாம் இந்த கோயிலைப் பற்றி காணலாம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழகத்தை உருவாக்கியவர் நம்   குருநாதர் எனலாம். தமிழகத்தின் இரண்டு முக்கிய ஆறுகளான காவிரி, தாமிரபரணி இரண்டும் அகத்தியரின் அருளால் கிடைக்கப்பெற்றவை. இந்த ஆற்றின் நதிக்கரையில் வாழ்ந்துள்ளனர்  நம் முன்னோர்கள். இன்று நாம் நதிக்கரை விட்டு நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். இருந்தாலும் நம்மை நம் குருநாதர் பல்வேறு வழிகளில் வழிநடத்தி வருகின்றார். நம் குருவின் பாதம் பட்ட மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பதே பெரும் பேறு. அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரின் வாக்கை மீண்டும் மீண்டும் கேட்டு ,அதன் வழி நடந்திட வேண்டும். இன்றைய பதிவில் நாம் இந்திரகீழ ஷேத்திர இறைவனை காண இருக்கின்றோம். இந்திரகீழ ஷேத்திரம் எங்குள்ளது என்று கேட்கின்றீர்களா?

திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம். இந்த கோயில்  இந்திரகீழ ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாபநாசநாதர் கோயில் கோபுரம் பார்க்கும் போது தோன்றுகின்றது. இன்னும் சற்று தொலைவில் இருந்து தரிசிப்போமா?





அப்படியே தல வரலாறு பார்த்து விடுவோமா? 

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

அப்படியே கோயிலுக்கு வெளியே பாயும் தாமிரபரணி இருக்கின்ற அழகு நம்மை இன்னும் கட்டிபோடுகின்றது.






பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.






அடுத்து திரு செல்லப்பன் ஐயாவின் வீட்டிற்கு செல்லும் போது கோபுர தரிசனம் கண்டோம்.



பின்னர் செல்லப்பன் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து வாகனத்தில் மூன்று கோயில்களுக்கு சென்றோம். மூன்று கோயில்களும் நடை சாத்தி இருந்தது. நமக்கு மனதில் ஒரு உறுத்தல் இருந்தது. ஏனெனில் நாங்கள் சுமார் 10:30 மணிக்கு மேலே சென்றோம். அப்போது காரணம் புரியவில்லை. ஆனால் இப்போது காரணம் புரிந்தது.

மன்னார் கோவில் பெருமாள் தரிசிக்க சென்றோம். இதோ..கோயில் பிரகாரம் வெளியே வண்ணங்களில் ஆழ்வார்கள் தரிசனம். நம்மையும் ஆள்கிறார்கள் அன்றோ!
















அடுத்து நாம் பிரம்ம தேசம் சென்றோம். கோயிலின் கோபுரம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. எத்தனை யுகங்களாக இந்த கோயில் இருக்கின்றது என்று கோபுர தரிசனம் காணும் போது உணர்ந்தோம். இங்கும் நமக்கு தரிசனம் கிட்டவில்லை.




அடுத்து நாம் சென்றது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயில். வாலீசுவரர் கோயில் தான் இது. இங்கேயும் நமக்ள்க்கு ஏமாற்றமே.











வெளியே பிரகாரம் சுற்றி விட்டு மீண்டும் மற்றொரு தலம் சென்றோம். செல்லும் வழியில் மயில் தரிசனம் பெற்றோம். குமாரர் தரிசனம் ..குறையில்லை என்று உணர்ந்தோம்.



அடுத்து நான்காவதாக சென்ற கோயிலில் நமக்கு நம் குருநாதரின் அருள் கிடைத்தது. இந்த கோயிலைப் பற்றி தனிப்பதிவில் தருகின்றோம்.


அட. நீங்களும் இந்தப்பதிவில் தரிசிக்க வில்லை என கவலை கொள்ளாது இருங்கள். மேற்சொன்ன அனைத்து கோயில்களிலும் நாம் தனியே தரிசிக்க இறை விரும்பவில்லை போலும். தற்போது சென்று வந்த கோடகநல்லூர் யாத்திரையில் நம் குழு நண்பர்களோடு சுமார் 20 நபர்களோடு கூட்டமாக தரிசித்தோம். இப்போது தான் நமக்கு காரணம் புரிந்தது.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சௌதட்கா ஸ்ரீ மஹாகணபதி கோயில் (மணிப் பிள்ளையார்) - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_89.html

No comments:

Post a Comment