"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 29, 2019

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நமது புண்ணிய பாரத தேசத்தில் - எண்ணற்ற தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளது. பல ஆலயங்கள் வனங்களில், நதியோரம், கடலோரம், ஏரிக்கரை மீது, மலைகள், குன்றுகள் மீதும், மலை அடிவாரம் என்று பல இடங்களிலும், புராதன சிறப்புகளுடன் அமைந்துள்ளன.

அப்படி அமைந்துள்ள ஆலயங்களில் நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழும், மகிமையும் பெற்று அருள்கின்றன. இவற்றில் பாடல் பெற்றதும், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என அக்னி தலமாக போற்றப்படுவதும் திருஅண்ணாமலை ஆகும். நம் தளத்தில் சிறிய அளவில் திருஅண்ணாமலை பற்றி தொட்டுக் காட்டியுள்ளோம். கிரிவலம் பற்றியும் சிறிய அளவிலே பதிவுகள் உள்ளது. இந்த தலம் மூர்த்தி,தலம் ,தீர்த்தம் என்றளவில் பெருமை உடையது. ஏன் இங்கு கிரிவலம் பிரசித்தம்..அந்த அண்ணாமலையார் இங்கே மலை ரூபத்தில் அல்லவா காட்சி தருகின்றார். சிவனாகநினைத்தால் அவர் சிவனாக இருப்பார். மலையாக நினைத்தால் அவர் அங்கே மலையாக இருப்பார். பார்ப்பவரின் கண்களுக்குத் தான் இவை புலப்படும். கிரிவலம் முடித்து கண்ணார் அமுதக் கடலை அன்னையுடன் காண ஒன்பது ராஜ கோபுரங்களுடன், ஆறு பிரகாரங்கள் அங்கே உள.

திருவாரூரில் பிறந்தால் முக்தி 
காசியில் இறந்தால் முக்தி 
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி 
திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி 

என்று நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை நாம் கண்ணால் கண்டு, மனத்தால் நடந்து, கிடந்து அருள் பெற வேண்டும். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

இனி. நாம் கிரிவலம் சென்ற அனுபவத்தை இங்கே தருகின்றோம். அதற்கு முன்பாக ஒரு அறிவிப்பு இதோ.

நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் அருளால், மலேஷியா அகத்திய அடியார்கள் சார்பில் வருகின்ற சனிக்கிழமை 30.11.2019 அன்று மதியம் திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் மகேஸ்வர பூசை நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொள்ளவும்.

சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220






அக்னி தலத்தில் அக்னியின் சொரூபத்தை இங்கே உணர முடிகின்றது. பசி எனும் அக்னியை அக்னி தலத்தில் ஆற்றுவது எத்தனை பேருக்கு கிடைக்கும். இதோ நம் தளத்திற்கு மலேசியா அகத்திய அன்பர்கள் சார்பில் கிடைத்துள்ளது.




எப்போது கிரிவலம் சென்றாலும் நாம் தீபமேற்ற நெய், அகல் போன்றவை கொண்டு சென்றுவிடுவோம். அங்கே விற்கும் கற்பூர கட்டிகளை தயை கூர்ந்து பயன்படுத்த வேண்டாம். அது கற்பூரம் போன்ற ஒரு பொருளே..அதிலே நீங்கள் ஒளியேற்றி வளி மண்டலத்தை வலிக்க செய்வது ஏற்புடையதன்று.


முதல் தரிசனமாக  இந்திர லிங்கம் தரிசனம் பெற்று, நடந்தால் நாம் அக்னிலிங்கம் தரிசனம் பெறலாம். கால்கள் மட்டும் கிரிவலம் வருவது என்பது முதல் படியே...கால்களோடு சேர்த்து மனமும் கிரிவலம் வர வேண்டும். அப்போது தான் நீங்கள் கிரிவலத்தின் பயனை அடைய முடியும். பௌர்ணமி போன்ற நாட்களை விட ஏனைய நாட்களில் ஆரவாரமின்றி கிரிவலம் சென்று பாருங்கள்.







                                அக்னி லிங்கத்தில் விளக்கேற்றி வழிபட்ட காட்சி மேலே


அக்னி லிங்கம் தாண்டி நாம் சென்றால் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் காணலாம். இங்கே நாம் சென்று சுவாமிகளின் அருள் அலைகளை பெறலாம். மூக்கு பொடி சித்தரின் தரிசனம் நமக்கு இங்கே தான் கிடைத்தது.









 அடுத்து ரமணரின் கருணையைப் பெறலாம். சும்மா இரு என்று சொன்ன அருணகிரியும் இங்கே தான். நான் யார் என்று கேட்ட ராமணரும் இங்கே தான். ரமணாஸ்ரமம் மற்றும் சேஷாத்திரி ஆசிரமம் அருள் பெற ஒரு நாள் போதவே போதாது. இவை அனைத்தும் ஆற்றல் மையங்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் இங்கே சென்று நாம் சக்தியை பெற வேண்டும். அப்போது தான் நம் புத்தி சிறக்கும்.



அடுத்து அதிக தொலைவில் எம லிங்க தரிசனம் பெறலாம். இங்கேயும் நாம் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.




அடுத்து நாம் தரிசிக்க இருப்பது நிருதி லிங்கம்.





இங்கும் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்தோம்.








தீபங்கள் இங்கே பேசுகின்றது அல்லவா? 











இது போல் அடுத்தடுத்து வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் தரிசனத்தில்  விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றோம்.







இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
இதோ..நமசிவாயத்தை ஒவ்வொரு லிங்கத்திலும் தரிசித்து, மீண்டும் கோபுர தரிசனம் காண இருக்கின்றோம்.











 கோடி புண்ணியம் தருகின்ற கோபுர தரிசனத்தை காண, விளக்கேற்றி கிரிவலம் வருகின்றோம்.பதிவின் தலைப்பை மீண்டும் படித்து,கோபுரத்தை தரிசனம் செய்யுங்கள்.

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

-  மீண்டும் சிந்திப்போம்

மீளபதிவாக:-

தமிழ்நாட்டு திருவிழாக்கள் தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_48.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_98.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html


அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html




No comments:

Post a Comment