"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 15, 2019

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை

ஆசிரமம் என்றாலே குருகுல கல்வி தரும் குடில், ஆன்மிகத் தேடலை நாடும் குடில் என்றும் சொல்லலாம். ஆனால் இன்று ஆசிரமம் என்று சொல்லவே பயமாக இருக்கின்றது.எல்லாம் கலி காலம். அனைத்து யுகங்களிலும் கலி இருந்திருக்கின்றது. ஆனால் நாம் வாழும் இந்த யுகத்தில் அதிகமாய் கலி முற்றி போய் இருக்கின்றது. அதனால் தான் என்னவே திரும்பிய பக்கமெல்லாம் சொல்ல முடியா துயரங்கள்.

இன்று குருகுல கல்வி முறை இல்லை, ஆசிரமங்கள்  இன்று வியாபார கூடங்களாக பல்கி வருகின்றது. இவற்றிலும் சில முத்துக்கள் கிடைக்கத் தான் செய்கின்றன. அந்த வகையில் நாம் தற்போது பயணித்து வரும் இடங்களை பட்டியல் இடுகின்றோம்.

1. சதானந்த சுவாமிகள் ஆசிரமம்  - உயிர்நிலைக் கோயிலோடு இயற்கை சூழலில்
2. ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் - சித்தர்களின் உயிர்ப்போடு மருந்து நீர் ஆரண்யம்
3. ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,திருஅண்ணாமலை - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை
4. ஸ்ரீ ரமணாஸ்ரமம் - சும்மா இரு என உபதேசிக்கும் குடில்
5. ஸ்ரீ ஷேசாத்திரி ஆஸ்ரமம் - தங்கக்  கை மகானின் இருப்பு
6. ஆழியாறு அறிவுத் திருக்கோயில் - அறிவுக்கான திருக்கோயில் & ஞான மார்க்கப் பாதையில் 

இவற்றுள் இன்றைய பதிவில் ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் செய்யும்  அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை பற்றி காண உள்ளோம்.

அன்னதானம்  - எத்துணை முறை பேசினாலும் திகட்டாத ஒரு சேவை. அன்னதானம் செய்வது சிவனுக்கு ரொம்பவும் பொருந்தும். அதிலும் ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் நடைபெறும் மகேஸ்வர பூசை இருக்கின்றதே ..அது இன்னும் ஒரு படி மேலே என்று தான் சொல்ல வேண்டும். சிவ பெருமான் யாரை விரும்பினார்? அடியார்களைத் தானே. அவர்களிடம் என்ன இருந்தது? கல்வி,செல்வம்,வீரம் என பட்டியல் இட முடியுமா? ஹ்ம்ம்..ஒன்றுமே இல்லை. பூரண சரணாகதி அடைந்தவர்கள் அடியார் பெருமக்கள். சிவனை சிக்கென பிடித்தார்கள். அவர்களிடம் அறிவு இல்லை. நாமும் சிவனை பிடிக்கின்றோம். ஆனால் இன்னும் சிக்கென பிடிக்க வில்லை. தினமும் வழிபாடு செய்கின்றோம். சிவன் நமக்கு கடவுளாய்த் தெரிகிறார். இல்லை கல்லாய்த் தெரிகிறார். ஆனால் கண்ணப்பருக்கு நம்மைப் போல் உயிராய் தெரிந்தார். அதனால் தான் பசிக்கும் என்று நினைத்து அசைவம் படைத்தார். நாம் அறிவு கொண்டு பிடிக்கின்றோம். ஆனால் அடியார் பெருமக்கள் அன்பு கொண்டு பிடிக்கிறார்கள். இந்த அன்பைத் தானே நம் தலைவன் விரும்புகின்றார். இது போல் அடியார் பெருமக்களை அழைத்து, உபசரித்து, மலர் சூட்டி, தட்சிணை கொடுத்து, ஒவ்வொரு அடியாரையும் சாட்சாத் அந்த சிவனாக்கி, சிவனாக பூசிப்பதே மகேஸ்வர பூசை ஆகும். பூசித்து, அன்னமிடுவதே இந்த பூசையின்  தனிச் சிறப்புமாகும்.






ஒவ்வொரு மகேஸ்வர பூசையிலும் சாப்பாடு. சாம்பார்,ரசம் காரக் குழம்பு,மோர்,கேரட் பொரியல்
வென்டைகாய் பொரியல்,கீரை கூட்டு,அப்பளம்,வடை,கேசரி, இனிப்பு,தட்சனையாக வெற்றிலை  பாக்கு,பழம்,ரு    21.00 வைத்து அடியார்களுக்கு தருகின்றார்கள். சரி. சென்ற மாதம் பூசையில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் இங்கே நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

















2.03.2018 அன்றைய  மஹேஷ்வர பூஜையானது  பெங்களூர் வெங்கடேஷ் ரெட்டி சாயா அவர்களின் கைங்கர்யத்தால் நடைபெற்றது. கீழே நிகழ்வுகளை காணலாம். ஆற, அமர பூசித்து, உணவு பரிமாறுவது சிறப்பாகும்.















ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தின் மற்றுமொரு சேவை தினசரி காலை மற்றும் மாலை அன்னதானம் செய்வதும் ஆகும். வள்ளலாரின் வழியில், நெறியில் இங்கு பசித்திருப்போருக்கு உணவிடுவது ஆன்மிகத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

மாலை இட்லி,பொங்கல்,சாம்பார் செய்து சுமார் 74 சாதுக்களுக்கு பரிமாறும் காட்சிகள் கீழே இணைப்பாக....





















மீண்டும் ஒரு மகேஸ்வர பூசையின் காட்சிகள் ...








































22.3.18  அன்று மஹேஷ்வர பூஜை  பெங்களுரை சேர்ந்த  கீர்த்தீ ஸ்ரீ ஜெயந்குமார் அவர்களால் நடந்தது. அவர்களுக்கு ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் சார்பில் இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அவர்களின்  சேவை,தொண்டு வளர "வாழ்க வளமுடன் " என வாழ்த்தி மகிழ்வோம்.








சென்னையைச் சார்ந்த  S அனுராதா முரளி அவர்களால் 23.3.18 அன்று மஹேஸ்வர பூஜை நடந்தது. அன்றைய பூசையில் சுமார் 86 சாதுக்கள் கலந்து கொண்டார்கள் என்பது சிறப்பு. அவர்களுக்கு நம் தளம் சார்பாகவும்  மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.






24.3.18 மஹேஸ்வர பூஜையானது   பாண்டிச்சேரியை சேர்ந்த திரு.சிவக்குமார் அவர்களின் மூலம் நடைபெற்றது.சுமார் 96 சாதுக்கள் கலந்து கொண்டு, அருள் கொடுத்தார்கள்.









இந்த மகேஸ்வர பூசை மட்டுமின்றி, காலையும், மாலையும் ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் செய்கின்ற அன்னசேவை சொல்லில் அடங்காதது. காலையில் சுமார் 7 மணி அளவில் உணவும், சாம்பார் போட்டு திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரு தள்ளுவண்டி மூலம் கொண்டு சென்று, அங்கிருக்கும் சாதுக்களை அழைத்து உணவு தருகின்றார்கள். இவ்வளவு தான் என்று அளவு உணவில் இல்லை, அவர்களின் உணர்விலும் இல்லை.
மாலையும் ஆசிரமத்தில் சுமார் 70 சாதுக்கள் வரை வந்து உணவு சாப்பிட்டு விட்டு செல்கின்றார்கள். இதனுடன் சுமார் 100 உணவு பொட்டலங்கள் தயார் செய்து, திருஅண்ணாமலை ராஜ கோபுரம் அருகில் உள்ள சாதுக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்குகின்றார்கள். உணவாக தினமும் இட்லி கொடுத்து வருகிறார்கள். யார் கேட்க போகின்றார்கள்? என்று நினையாது, இட்லி மட்டுமின்றி அவர்கள் கொடுக்கும் உணவு வகை கீழே பட்டியல் போட்டுள்ளோம்.
இட்லி, பொங்கல், சாம்பார்
இட்லி, சாம்பார், கிச்சடி
இட்லி ,சாம்பார், தோசை, தக்காளிசட்னி
இட்லி, சாம்பார், தோசை, தக்காளி சட்னி, சக்கரை பொங்கல்
கேசரி, பாயசம், இட்லி, உப்புமா, சாம்பார், சட்னி
இட்லி, தோசை, சாம்பார், கார சட்னி
அட...நமக்கே.உணவு பட்டியல்  பார்த்தால் நாக்கில் நீர் ஊறுகின்றது அல்லவா? இதோ அடுத்து சப்பாத்தியும் சேர்த்துக் கொள்ள இருக்கின்றார்கள்.







10/03/2018 அன்று ரைட்மந்த்ரா சுந்தர் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் இணைந்த அன்ன  சேவையின் காணொளி காட்சிகள் மேலே இணைத்துள்ளோம். அன்றைய நாள் நாம் இங்கு காலை மற்றும் மாலை அன்னசேவை செய்வதற்கு நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழுவின் மூலம் முயற்சித்தோம். முயற்சி திருவினையானது. அன்று மதியம் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் அன்னசேவை செய்தோம். ஏதோ ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்தோம். இன்று ஒரு நாள் முழுதும் மூன்று வேளை அன்னசேவை செய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்தது. பணம் இருக்கும் அனைவராலும் இது போன்ற சேவைகளில்நிச்சயமாக ஈடுபட முடியாது. நல்ல மனிதம் பூத்திருக்கும் மனம் இருக்கும் உங்கள் மூலமே இது நிறைவேறியது. இன்னும் ..இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இந்த சேவையில் ஈடுபட்ட நம் குழுவின் உறவினர்களுக்கு இந்த பதிவின் மூலம் நம் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


- சேவைகள் என்றும் தொடரும்.

மீள் பதிவாக :-

No comments:

Post a Comment