"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 1, 2019

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் மார்க்கத்தின் தொடர்ந்து வரும் அனைவரும் சில ஸ்தலங்களுக்கு ஆரம்ப கால கட்டத்தில் செல்ல வேண்டும். குறிப்பாக சொல்வதானால் நம்பிமலை, பாபநாசம், திருச்செந்தூர், ஓதிமலை, கோடகநல்லூர், திருஅண்ணாமலை என கூறலாம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சித்தர்களின் அருளாசியுடன் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. நாமும் மேற்சொன்ன கோயில்களில் சில கோயில்கள் மட்டுமே சென்று வந்துள்ளோம். இவை அனைத்தும் அகத்தியரின் ஆசியும் மற்ற சித்தர் பெருமக்களின் அருளாசியும் நிரம்பி வழிவதை நாம் உணரலாம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தமிழகத்தை உருவாக்கியவர் நம்   குருநாதர் எனலாம். தமிழகத்தின் இரண்டு முக்கிய ஆறுகளான காவிரி, தாமிரபரணி இரண்டும் அகத்தியரின் அருளால் கிடைக்கப்பெற்றவை. இந்த ஆற்றின் நதிக்கரையில் வாழ்ந்துள்ளனர்  நம் முன்னோர்கள். இன்று நாம் நதிக்கரை விட்டு நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். இருந்தாலும் நம்மை நம் குருநாதர் பல்வேறு வழிகளில் வழிநடத்தி வருகின்றார். நம் குருவின் பாதம் பட்ட மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பதே பெரும் பேறு. அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரின் வாக்கை மீண்டும் மீண்டும் கேட்டு ,அதன் வழி நடந்திட வேண்டும். இன்றைய பதிவில் நாம் இந்திரகீழ ஷேத்திர இறைவனை காண இருக்கின்றோம். இந்திரகீழ ஷேத்திரம் எங்குள்ளது என்று கேட்கின்றீர்களா?

திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம். இந்த கோயில்  இந்திரகீழ ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாபநாசநாதர் கோயில் கோபுரம் பார்க்கும் போது தோன்றுகின்றது. இன்னும் சற்று தொலைவில் இருந்து தரிசிப்போமா?





அப்படியே தல வரலாறு பார்த்து விடுவோமா? 

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

அப்படியே கோயிலுக்கு வெளியே பாயும் தாமிரபரணி இருக்கின்ற அழகு நம்மை இன்னும் கட்டிபோடுகின்றது.






பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.





பங்குனி உத்திரம் அன்று நமக்கு இங்கே தரிசனம் செய்ய ஆசி கிடைத்தது. பங்குனி உத்திரம் பிரம்ம கால அகத்தியர் வாக்கு நமக்கு வழங்கப்பட்டது. அதன் சூட்சுமம் இதோ பின்வருமாறு;


நதி வழிபாடும்
நந்தி வழிபாடும்
ஆதி வழிபாடு ஆகும்

உலகம் உய்ய தேவை நதி , நந்தி
திமில் காளைக்கு மட்டுமே உண்டு, திமில் மூலம் விண்சக்தி பெற முடியும். கோ உலகின் சூட்சம்ம்
நந்தி. இறை வழிபாட்டிற்கு கோ ஆற்றல் தேவை

இதே போல் உயிர்கள் உய்ய தேவை நதி. இரண்டும் கெட்டால் உலகம் மலடாகும். இதனை சரிப்படுத்திக் கொள்ள அகத்தியர் இந்த வழிபாட்டை அறிவுறுத்தினார்

நதி வழிபாட்டில் ஆயிரம் பேர் கூடுவார்கள். கங்கா வழிபாடு. நந்தி வழிபாட்டிலும் ஆயிரம் பேர் கூடுவார்கள். பிரதோஷ வழிபாடு உதாரணமாக

நதி வழிபாடு தாய் வீட்டிற்கு செல்வது. இந்த உடல் நிலைக்க நீர் அவசியம். தாயின் ஸ்பரிசம் நீரில் உணரலாம்.ஆயிரமாயிரம் வேள்வி தரும் ஆத்மானுபவம் இந்த வழிபாட்டில் பெறலாம். நதி, நாதம், நந்தி உணர்த்தவே இந்த வழிபாடு. முருக வழிபாடு இதில் இலங்கும்

சித்த மரபில் நீர் முக்கியம். நகாரத் தொடர்பு இதில் அடங்கும். நகாரமே ஆதி..நமசிவாய, நாராயணாய , நதி , நந்தி

வேல் வழிபாடு சித்த மார்க்கத்தின் அடிநாதம். இன்று கலச நீர் (அருகில் உள்ள நீர் ) எடுத்து மாவிலை, மஞ்சள் வைத்து பூமியில் வேல் இட்டு வரிபடுக.நீர்,பால்,பஞ்ச திரவியமாக அபிஷேகம் செய்க

வேல் வழிபாடு தர்மம் நிறுத்தும். பூமி உய்விக்கவும் வழி செய்யும். முருக வழிபாட்டில் சிந்து கவி தேவை.நாதமாக உருகி பாடுக.





அடுத்த நாள் பங்குனி உத்திரம் அன்று பாபநாசம் ஆற்றில் நந்தி வழிபாடு பிரசாதத்தை நன்கு சங்கல்பம் செய்து ஆற்றில் சமர்பித்தோம். இதே முறையை கல்யாண தீர்த்தத்திலும் செய்தோம்.



அப்படியே கல்யாண தீர்த்தம் சென்று வேல் வழிபாடு செய்ய விருப்பினோம். அங்கே இருந்த ஒரு சுவாமிகள் நாம் வைத்திருந்த வேலிற்கு திருநீறு அபிஷேகம் செய்து கொடுத்தார்.




அபிஷேகம் செய்த வேலை கல்யாண தீர்த்த அகத்திய முனிவ தம்பதிகளிடம் வைத்து மஞ்சள் பூசி வழிபட்டோம்.




சித்தர்கள் போற்றி தொகுப்பு, முருக மந்திரங்கள் என சுமார் 1 மணி நேரம் வழிபாடு செய்து அங்கிருந்து புறப்பட்டோம்.


அதற்கு முன்னர் சிவபுராணம் பாடி பரவசப்பட்டோம். எப்படியோ கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகன் கோயிலில் ஆரம்பித்த பங்குனி உத்திரம் கொண்டாட்டம், கல்யாண தீர்த்த அகத்தியரிடம் வேண்டி முழுமை பெற்றது. இதில் நந்தி வழிபாடு, நதி வழிபாடு,வேல் வழிபாடு என அனைத்தும் ஒருங்கே பெற்றோம். இது அனைத்தும் முருகன் அருள் முன்னின்று நடத்தியது என்பதை நாம் உணர்ந்தோம்.

மீண்டும் ஒரு முறை

ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
"நீதி தழைக்கின்ற" போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!

இரண்டும் ஆண்டுகளுக்கு முன்னர் பக்தி என்றால் கிலோ என்ன விலை ? என்று இருந்தோம். சென்ற ஆண்டு இரண்டு கோயில், விநாயகர், பெருமாள், முருகன், சிவன்,சக்தி, பௌர்ணமி தரிசனம், திருக்கல்யாணம் என நமக்கு கிடைத்தது. இந்த ஆண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து கல்யாண தீர்த்தம் வரை யாத்திரை..சித்தர்கள் வழியில் வழிபாடு என்றால் பதிவின் தலைப்பை படியுங்கள். உண்மை உணர்த்தப்படும்.

சரி, மீண்டும் பாபநாசம் செல்வோம் வாருங்கள்.







அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.




அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.


இத்தலத்து லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.




கோயிலின் உள்ளே சென்று பாபாநாசநாதரையும், உலகம்மையையும் தரிசித்து அப்படியே முருகப்பெருமான்,அகத்தியர்,லோபாமுத்ரா தரிசித்து வெளியே வந்தோம். வெளியே இருக்கும் சுற்றுசுவரே பார்க்க அழகாக இருந்தது.கோயிலுக்கு அரணாக இருக்கின்றது.



அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்.















  சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், சித்திரைப் பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா, தைப்பூசம் என சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.

உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்.

மீண்டும் வெளியே வரும் போதும் நம்மை கோயிலின் கோபுரம் ஈர்த்தது. மீண்டும் மீண்டும் காட்சிகளாக மாற்றினோம். நம் குருவின் பாதம் பட்ட இடத்தில், நம் மனம் சந்தோசப்பட்டது.இறை,சித்தர்,தாமிரபரணி ஆசி பெற வேறெங்கும் செல்ல வேண்டாம். பாபநாசம் ஒன்றே போதும்.











மீண்டும் அதே கோபுர தரிசனத்தோடு பதிவை முழுமை செய்கின்றோம். ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி என்று மனதில் மீண்டும் மீண்டும் உரைப்போம்.

மீள்பதிவாக:-


 அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html


ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html


குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.htm

No comments:

Post a Comment