"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, May 6, 2019

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ்

 அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவருக்கும் வணக்கம். அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...

அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தொண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.


-கொங்கணார் கடைக்காண்டம்.

ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது  என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில் ஆயில்ய வழிபாடு நிகழ்வுகளை காண உள்ளோம். 



 நமது குருவின் மகா ஆயில்ய கொண்டாட்டத்தில் அனைவரும் அருள் பெற இருக்கின்றீர்கள். இந்த பதிவின் மூலம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய அகத்தியரின் மகா ஆயில்ய கொண்டாட்டதிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இந்த நிலையில் சித்தன் அருள் வலைப்பதிவில் ஒரு கேள்வியும் அதற்கான பதிலையும் தந்து இந்தப் பதிவை தொடர விரும்புகின்றோம்.

அகத்தியருக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பது இல்லை எனபதே கேள்வியின் நோக்கம். சிவன் செய்த யாகத்தால் அகத்தியர் தோன்றினார்  என்பதே சொல்லப்பட்டது. இந்தக்கேள்விக்கு நம் குழுவின் சிலர் இவ்வாறு  பதில் கூறி இருந்தனர்.




 நட்சத்திரங்களுக்கு அப்பாற்பட்டவர் அகத்தியப் பெருமான். இந்த மானுடங்களை கடைத்தேற்ற அவரால் வகுக்கப்பட்டது ஆயில்ய பூசை. இந்த பூசையால் பயன்பெற்றோர் ஏராளம்.இது மிக மிக உண்மை..சித்தர்களுக்கு நாளென்பது கிடையாது. நட்சத்திரம் என்பதும் கிடையாது. இவை எல்லம்மா நம் வழிபாட்டிற்காக/ மன மகிழ்ச்சிக்காகவே உள்ளது.அன்றைய தினம் குருவினை சரணடைய ஒரு வாய்ப்பு என்றும் கூட சொல்லலாம். இன்னும் ஆழமாக மனதை உழுதால்,சித்தன் அருள் இவ்வாறு பேசுகின்றது.






 உங்கள் எண்ணப்படி, அகத்தியருக்கும், நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். சிவன் அருளினால் அவர் தோன்றினாலும், காலத்துக்குள், ஒரு திதி நடக்கும் பொழுது, ஒரு நட்சத்திரம் ஆளுமையில் உள்ள பொழுது தான் ஒரு ஆத்மா உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது இறைவனிடமிருந்து பிரித்து விடப்பட்டிருக்கும். ஒரு புல்லை கூட முளைக்க வைக்கும் தகுதி இல்லாத மனிதனுக்கு, நாள், தேதி, கிழமை, ஊர், காலம் என வரிசையாக அனைத்தும் இருக்கும் பொழுது, மிக உயர்ந்த நிலையில், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்கு, நட்சத்திரம் கூடவா இருக்காது? இன்னொரு விஷயம் தெரியுமா? பூமியில், இறைவனே அவதாரம் எடுத்தாலும், பூமியின் சட்ட திட்டங்களுக்கு, அவனும் அடிமையாக இருந்துதான் ஆகவேண்டும். உதாரணமாக, கிருஷ்ணர், ராமர் அவதாரங்களை கூறலாம்.

 உண்மையாக புரிந்து கொள்பவர்கள், அமைதியாக இருப்பார்கள். வார்த்தைகள் சிதறாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாளில், சேய்கள் நல்லதை செய்திட, அது உலகத்தின் நன்மைக்கு பலம் கூட்டும். அப்படியாக ஒன்று நடந்து விட்டு போகட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இதனை பூஜைகள், த்யானம் எல்லாம் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

சரி ..நாம் விசயத்திற்கு வருவோம்.


 சரி..நாம் இது நாள் வரை அகத்தியரை எப்படி எல்லாம் வழிபட்டு வருகின்றோம். பக்தி மார்க்கம் , தான தர்ம மார்க்கம், கர்மயோக மார்க்கம், ஞானயோக மார்க்கம்  என்று வழிபடலாம். ஆனால் நாம் செய்து வரும் ஆயில்ய பூசையின் என்ன செய்து வருகின்றோம்.  அகத்தியரை உருவமாக பாவித்து மலர்கள் மூலிகைகள் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவதுநமக்கு  மிகவும் பிடித்தமானது. இது அகத்தியரை விரும்பும் யாவருக்கும் எளிதில் சாத்தியமானது. பாசமுள்ள அகத்தியமாஹாமுனி இந்த மார்க்ககத்தில் யாவரும் வழிபடுவதை அவர் மிகவும் விரும்புவதை நாம்  உணரலாம்.  நாம் கடந்த பள்ளிப்பருவத்தில் இருக்கும் போது பக்தி மார்க்கத்தை அடிக்கடி ஏளனம் செய்ததுண்டு. அதற்கு  நாம்  கடும் தண்டனை வாங்கியதுண்டு. இந்த கலியுகத்தில் பக்திமார்க்கம் மிகவும் எளிதானது. ஆற்றல் வாய்ந்தது. முதலில் ஆரம்பித்த போது பக்தி மார்க்கத்தில் மட்டும் தான் இருந்தோம்.பின்னர் அப்படியே அது தான/தர்ம மார்க்கம், கர்மயோக  மார்க்கம் நோக்கி நம்மை செம்மைப்படுத்தும்.

இதோ..இந்த முறை







நம் தலத்தில் ஆயில்ய அறிவிப்புகள் மட்டும் தான் தரவில்லை.  ஆனால் ஆயில்ய வழிபாடு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. ஆயில்யம் அன்று தான் அகத்தியர் வழிபாடு செய்ய  என்றும் எண்ணம் வேண்டாம். நம் அப்பனை வேண்டாத நாள் தான் உண்டோ. சென்ற முறை நாம் கூடுவாஞ்சேரி ஆலயம் சென்ற போது அகத்தியர் சந்நதி முன் அபிஷேக பொருட்கள் இருந்தது. மனதுள் நிறைவாய் இருந்தது. சித்த அடியார் யாரோ ஒருவர் பூசைக்கு ஏற்பாடுசெய்துள்ளார் என்று மனதுள் நினைத்து , அவரை எண்ணி நன்றி கூறினோம். பின்னர் குருக்கள் அவரை அறிமுகப்படுத்தினார். நாமும் பரஸ்பரம் பேசிவிட்டு கிளம்பி விட்டோம். அன்றைய பூசை படங்களை பார்த்த போது நமக்கு ஏன் இந்த எண்ணம் வரவில்லை என்று தோன்றியது.

சந்தன காப்பில் அகத்தியர் தரிசனம்...முதல் முறையாக..கண்டு இன்புற்றோம். அதனை தொடர்ந்து இம்மாத ஆயில்ய ஆராதனையில் சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட குருவின் உத்தரவு நமக்கு கிடைத்துள்ளது. மேலும் ஐம்பொன்னாலான அகத்தியர் உருவம் பொறித்த டாலர் கொடுக்க உள்ளோம்.( ஏற்கனவே நம்மிடம் கூறியவர்களுக்கு மட்டும்). இதோ..இம்மாத ஆயில்ய ஆராதனை அறிவிப்பு தருகின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற அன்போடு அழைக்கின்றோம்.

சித்திரை மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு :

மெய் அன்பர்களே

நிகழும் மங்களகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 29 ஆம் நாள் 12/05/2019  ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயில்ய நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 8 மணி முதல் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு அபிஷேகம் ; அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அகத்திய பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்ய உள்ளோம். அய்யனின் ஐம்பொன்னாலான திருஉருவம் பதித்த டாலர் பூசித்து அகத்திய அடியார்களுக்கு வழங்க உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

  - அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment