அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நமக்கு கிடைத்த வைகாசி விசாக பெருந்திருவிழா அழைப்பிதழ்களை ஒரு சேர இந்தப் பதிவில் தர முருகனருள் நம்மை வழிநடத்தட்டும்.
முருகா!
மு’ என்றால் ” முகுந்தன்
‘ரு’ என்றால் ” ருத்ரன் ”
‘கா’ என்றால் ” பிரம்மா ”
இதனால் “முருகா ” என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.
இது மட்டுமல்ல.
” முகுந்தன் ” தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.
” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.
” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.
இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.
இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.
முருகா!முருகா!முருகா!முருகா!முருகா
முருகா!முருகா!முருகா!முருகா!முருகா
நாளெல்லாம் நின் புகழை பாட போதுமா?
அது போல், ஒரு பதிவில் அழகனைப் பற்றிட முடியுமா என்ன?
அது சரி..வைகாசி விசாகம் அன்று என்ன செய்ய வேண்டும்? வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முதல் அழைப்பு சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் எறும்பீசுவரர் கோயிலில் இருந்து நமக்கு கிடைத்தது.

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவில் இன்னும் ஆழமாக இந்த தலம் பற்றி காண்போம். இப்பொது சுருக்கமாக, திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ்
நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை
செல்லும் பாதையில் 13 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும்.
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற
சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு
குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு
வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி
தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.
அடுத்து, நால்வரின் பாதையில் நடத்தும் வைகாசி பெருவிழா அழைப்பிதழ் தங்களின் பார்வைக்கு தருகின்றோம்.
வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறும் படி வேண்டுகின்றோம்.
அடுத்து மிக மிக முக்கியமான நிகழ்வு பற்றிய செய்தி இதோ.
ஐயனின் ஆணைப்படி வரும் மே மாதம் 18ம் தேதி (18/05/2019) சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நமது பஞ்சேஷ்டி ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஈசனுக்கும் அன்னைக்கும் திருக்கல்யாண மகோத்ஸவம் நடைபெற இருக்கிறது. அனைவரும் பங்கு பெற்று ஈசன் அன்னை மற்றும் நம் ஐயனின் அருள் பெற வேண்டுகிறோம்.
இத்தலம் "பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி" என்றும் இன்றளவில் அழைக்கப் பட்டு வருகின்றது.
பஞ்சேஷ்டி ( பஞ்ச - ஐந்து இஷ்டி -யாகம் )
அதாவது அகத்தியர் பெருமானால் இங்கே ஐந்து யாகம் நடந்தமையால் இத்தலம்
பஞ்சேஷ்டி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
அடுத்து, ஓம்காரம் இறை பணிக்குழு நடத்தும் வைகாசி விசாக பெருந்திருவிழா அழைப்பிதழ் கீழே
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக :-
வைகாசி விசாகத்தை வரவேற்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_51.html
No comments:
Post a Comment