"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 16, 2019

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே

 அன்பின் அடியார்களே..

நம்மை பொறுத்த வரை நாம் சித்தர்களின் மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ..வாழ வழிகாட்டும் குருவாய் விளங்கும் அகத்தியர் பெருமான் தான். அவரைப் பற்றி பேசாது, காணாது இந்த நன்னாளை நாம் கடத்திட விரும்பவில்லை.

சித்தர்களில் முதன்மையான சித்தர் அகத்தியர் தான் இங்கே சிறப்பாக தரிசனம் தர உள்ளார். அவர் மட்டுமா? அடுத்து நம் தளத்திலே ஏகப்பட்ட குருமார்கள், சித்தர்கள் என தொட்டுக் காட்டியுள்ளோம். பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள், மருதேரி பிருகு மகரிஷி அருள் குடிலம், மயிலை குழந்தைவேல் சுவாமிகள்,கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், தீர்த்தமலை ஜடை சாமியார், ஸ்ரீ சற்குரு சுவாமிகள், பட்டினத்தார், வீர ராகவ சுவாமிகள், ரோம மகரிஷி என்று சித்தர்கள் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கின்றது.  இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் பொற்பாதம் அடைகின்றோம்.



சரி..இனி தரிசனம் காண செல்வோமா?
நம் அலுவலக நண்பர் திரு.பத்ம குமார் அவர்களிடம் நாம் பலமுறை பஞ்செட்டி அகத்தியர் கோயில் பற்றியும் அங்கு  நடைபெறும் சதய பூசை பற்றியும் கூறி உள்ளோம்.ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீடீரென நண்பர் பஞ்செட்டி செல்லலாமா? என்று கேட்டார். நாமும் சரி என்று கூறிவிட்டு மற்ற வேலைகளில் இருந்தோம். பின்னர் அகத்தியர் வனம் மலேசியா குழுவின் நண்பர் திரு. பாலச்சந்திரன் சென்னை வந்து இருந்தார்.அவரை அழைத்துக் கொண்டு திருஒற்றியூர் சென்றோம்.மறுநாள் காலை பஞ்செட்டி செல்ல வேண்டும். பயணத்தின் போதே குருக்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தரிசனம் பற்றி கூறினோம். 
அன்றிரவு நாம் வீட்டிற்கு வந்த போது இரவு மணி 11 நெருங்கி விட்டது. தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு, வீட்டில் இருந்த வில்வம்,நெல்லி,அருகு, மஞ்சள்,பசுஞ்சாண விபூதி,சந்தனம்  என எடுத்துக் கொண்டு கிளம்பினோம். காலையில் பஞ்செட்டி அகத்தியர் தரிசனம் பெறப் போவது கண்டு மனம் மகிழ்ந்தோம். நீங்களும் இந்த தரிசனத்தில் மகிழ இருக்கின்றீர்கள்.


தரிசனப் படங்கள் கொஞ்சமே. அதனை மேலே கண்டு தரிசிக்கவும். ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒவ்வொரு விதமாக தரிசனம் கண்டோம். அபிஷேகம் முடித்து அலங்காரத்தில் கண்ணில் ஒற்றும் தரிசனம் பெற்றோம்.




மிக மிக எளிய பூசை தான். கண்ணுக்கு இனிமையாய் இருந்தது. காதுக்கு இனிமையாய் அகத்தியரின் நாமம் போற்றினோம்.இது போதும் தானே? இன்றைய குருபூர்ணிமா நன்னாளில் நம் குருவின் தரிசனம் நமக்கு கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அன்றோ?
நீர் தான் கதி என்பதை " மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே " என்று கூறி கூறி களிப்பு உற்றோம். மீண்டும் ஆலயம் முழுதும் ஒருமுறை வலம் வந்தோம். எத்தனை முறை தரிசித்தாலும் இன்னும் இன்னும் என மனம் ஏங்குகின்றது.








அனைத்தும் ஒருங்காய் மேலே இணைத்துள்ளோம். கண்டு கண் குளிரவும். திடீரென இந்த தரிசனம் அமைந்ததால் யாரையும் உடன் அழைக்க முடியவில்லை. அருமையான தரிசனம் வழங்க நமக்கு வாய்ப்பளித்த நண்பர் திரு.பத்மகுமார் அவர்களுக்கு நம் சார்பாகவும், நம் தளம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



                 குரு உயர்வு மதிப்பவர் தம்மை தரத்தினை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.




- அடுத்த பதிவில் இணைவோம்.

2 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வர லோப முத்ரா போற்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி 🙏 🙏 🙏
      ஓம் ஸ்ரீ குருவே சரணம்

      Delete