"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 9, 2019

நலமெல்லாம் சேர்க்குமே கூடுவாஞ்சேரிக் குமிழி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு ஆலய தரிசனமும் நமக்கு ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைகின்றது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பூர் பெருமாள் கோயில் பற்றி நமக்கு உரைக்கப்பட்டது. ஆனால் பெருமாள் என்று அழைப்பாரோ? என்று தான் நமக்கு தோன்றியது. ஏன்? எதற்கு என்று ஆராய்ந்து பார்த்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது போன்று தான் ஆப்பூர் பெருமாள் நம்மை வெறும் தரிசனத்திற்காக அழைக்காது, நம் குழுவை அப்படியே அழைத்து உழவாரப் பணி தந்து அன்று ஒரு நாள் ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள அருளினார். இது தான் காரணமின்றி காரியமில்லை என்பது. அது போல் தான் இந்த தரிசனப் பதிவும் அமைய இருக்கின்றது.

அன்றும் அப்படியே வீட்டிலிருந்து சில கோயில்களுக்கு செல்ல தீர்மானித்து , கூடுவாஞ்சேரியில் உள்ள மற்றொரு அகத்தீஸ்வரர் தரிசனம் பெற்று, அடுத்து சுந்தரர் குருபூசை பற்றி பேச, திருக்கச்சூர் செல்லலாமா? என்று யோசித்து இல்லை ..நெடுங்காலமாக நம் மனதில் உள்ள குமிழி கோயிலுக்கு செல்ல உள்ளுணர்வு உந்தியது. உடனே கூடுவாஞ்சேரியில் இருந்து குமிழி நோக்கி புறப்பட்டோம்.



செல்லும் பாதை கரடு முரடாக இருந்தது. நமக்கு ஒரு நொடி தூக்கி வாரிப்போட்டது. சரியாக தான் குமிழி கோயில் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றோமா என்று?



இப்படி ஒரு பாதையில் தான் சென்றோம். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஆலயம் பற்றி நாம் அறிந்தோம்.


ஆலயத்தை அடைந்ததும் ஆன்ம விரிவு அடைந்தோம். நீங்களே பாருங்களேன்.


கோயில் மிக மிக புதுமையாக இருந்தது.

பிறவிப் பெருங்கடலில் நிலைத்து உழலும் ஆன்ம கோடிகள் உய்யும் பொருட்டு தம் இயல்பான
கருணையினால் திரு உருவத் திருமேனி தாங்கி அருள் விளக்கம் செய்யும் ஆலயங்கள் பல.

அவைகளுள் ஒன்றாக மூலிகை மலைகளால் சூழப்பட்ட (முக்கண் போல மலைகள்) இத்திருக் கோயிலின்மத்தியில் உள்ள குளத்தில் நீராடுவதாலும் குளத்து மண்ணினை பூசுவதாலும் சர்வ ரோக நிவாரணராக,வேண்டிய பக்தர்களுக்கு வேண்டியதை 1200 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வரும் இந்தசிவாலயத்தில் மிகவும் விசேஷமாக வேறெங்கும் காண முடியாத அற்புத திருக்காட்சியாக விஸ்வவிருட்சமே லிங்கத் திருமேனிக் குடையாக சூழ்ந்துள்ளதாகும்
 ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயில், குமிழி.

ஸ்தல புராணம்

கூடுவாஞ்சேரியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 9 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். அடர்ந்த வனத்தின் இடையே அமைதி சூழ்ந்த அழகுடன் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ வேதகிரிஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.

"மூன்று கிரி சூழவே மூண்ட வனத்திடை
தோன்றிய வேதகிரிஸ்வரரை - வேண்டியே
நாடுவோர் வாழ்வில் நலமெல்லாம் சேர்க்குமே
கூடுவாஞ்சேரிக் குமிழி!"

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட சிவலிங்கத்துடன் அமைந்த இக்கோயில் நாளடைவில் காட்டுச்செடிகளாலும் கொடிகளாலும் சூழப்பட்டு சிதிலமடைந்திருந்தது. இவ்வூரில் வாழ்ந்த அந்தணர் ஒருவர் பெருநோயால் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அல்லலுற்று வந்தார். தனது மூன்று கன்னிப் பெண்களை கல்யாணக் கரையேற்ற முடியாமல் திருமணத் தடையால் செய்வதறியாது வாழ்ந்திருந்த வேளையில் வழிபோக்கராக வந்த ஒரு சிவனடியார்... அவரைக் கண்டு, வனத்தில் மறைந்துள்ள வேதகிரிஸ்வரரை வணங்கி அங்குள்ள சரோணி குளத்தில் குளித்தெழுந்து, அதன் சேற்றை பூசுமாறு நல்வாக்கு சொல்ல, அதன்படியே புதர் மண்டிய வனத்தில் அந்தணரும் சென்று சரோணி தடாகத்தில் குளித்தெழுந்து ஸ்ரீ வேதகிரிஸ்வரரை வணங்கி வேண்டி வந்தார். ஒரு திந்களுக்குள் நிகழ்ந்தது அதிசயம். அந்தணரின் பெருநோய் ரணங்கள் முற்றிலும் குணமாகி புதிய பொலிவுடன் முன்போல் தோற்றம் கொண்டு தனது மூன்று மகள்களுக்கும் திருமணத்தடை நீங்கி நல்ல இடங்களில் சம்பந்தம் அமைய, தனது கடமையை நிறைவேற்றி பேரானந்தம் கொண்டார். வேதகிரிஸ்வரரின் மகிமைகளை ஊரெங்கும் போற்றிப் புகழ்ந்தார். கேள்விப்பட்ட மக்கள் திரள்திரளாக சரோணி தடாகத்தின் சேற்றை பூசி ஸ்ரீ வேதகிரிஸ்வரரை உருகி வணங்கி நலமடைந்தனர்.

"சேறும் மருந்தாகும், தண்ணீரும் விருந்தாகும்
ஊறும் நோய்நொடிகள் ஓடிப்போகும் -
வேதகிரிஸ்வரரை வணங்கினால்"

காட்டுத் தாவரங்களால் காலம் மறைந்திருந்த இத்திருக்கோயில் காக்கும் ஈசனின் அருளால், வாசு அவர்களின் கனவில் கண்டெடுக்கப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டு, மிக அழகான தோற்றப் பொலிவுடன் மக்கள் வணங்கி பயன்பெறும் வண்ணம் தனது சொந்த செலவில் வடிவமைத்துள்ளார். "சரோணி தடாகம்" எனும் இத்திருக்குளம் கோடையிலும் வற்றாது குளிர்நீர் நிறைந்தது. சுனைகளில் வடியும் சுவையான நீர்சுரப்பும், இயற்கை வனப்பும் சிவனருளால் காண்போர் மனங்களில் தெய்வீகம் கமழச்செய்யும், மூன்றுபக்க மும்மலைசூழ், மருதத்தென்றல் குளிர்வீச, வற்றாக்கிணறு ஒன்று வருவோரின் தாகம் தீர்க்கின்றது. கருவறையில் லிங்கவடிவில் ஸ்ரீ வேதகிரிஸ்வரரும் அதனருகில் சாந்த சொரூபமாக ஸ்ரீ திரிபுரசுந்தரியும் காட்சிதர, வில்வமரமும் வன்னிமரமும் தலவிருட்சங்களாய் நிழல்விரிக்கின்றன. செவ்வாய் கிழமை - வெள்ளி கிழமைகளில் விசேஷ பூஜையும் ஒவ்வொரு பௌர்ணமி நாளில் கிரிவலமும் நடைபெறுகிறது. திருக்கோயிலின் முகப்பில் நுழைந்த உடன் வலம்புரி விநாயகர் 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.

அவரைச் சுற்றி நான்கு பக்கமும் வலம்புரி இடம்புரி நர்த்தன பஞ்சமுக கணபதியும் உள்ளனர். பொன் நிறத்து ஆஞ்சநேயர் புன்னகைத்து வணங்கி நிற்க ஸ்ரீதேவி, பூதேவி உடனுரை ஸ்ரீநிவாசப் பெருமாளும், கருட ஆழ்வார், தத்தாத்ரேயர், காலபைரவர், நவக்கிரகங்கள் மற்றும் சந்திரன், குரு, சூரியன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளுடன் விளங்குகின்றனர். ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி சந்நிதிகளுடன் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மகாகாளி, ஆகியோருடன் இத்திருக்கோயிலில் காட்சி தருகின்றனர்.

அத்தி மற்றும் வேப்ப மரத்தடியில் நாகப்புற்றுடன் பாளையத்தம்மன் கொலுவீற்றிருக்க, அஷ்டபுஜ துர்கையும், லக்ஷ்மி கணபதியும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யரும், சபரிமலை சாஸ்தாவும் கோயில் கொண்டுள்ளார். தெய்வங்கள் மட்டுமல்லாது தேவாரம் பாடிய நால்வருக்கும், 18 சித்தர்களுக்கும், ஏழு சப்த கன்னிகளுக்கும், தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அத்திமரம், அரசமரம், வேப்பமரம், வில்வமரம், வன்னிமரம் என்று வெயில் தரை விழாத வண்ணம் நிழல் கம்பளம் விரித்திருக்கிறது இயற்கை. கும்பிடும் குலதெய்வங்கள் எல்லாம் ஒரே கோயிலில் அருள் புரிவது தெய்வீக அற்புதம். மூலிகை வாசமும் குளிர் தென்றல் தாண்டவமாடும் மான்களும், மயில்களும், மைனாக்களும், குயில்களும், கொக்குகளும், நாரைகளும் நம் பார்வையில் அடிக்கடி தோன்றும் இந்த ஸ்ரீ வேதகிரிஸ்வரர் ஆலயத்தில் சித்தர்களின் வருகையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.





கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இது போன்ற தரிசனம் நாம் வேறெங்கும் கண்டதில்லை. பொன்னிறம் கொண்ட இறையாற்றல் நம்மை வெகுவாக கவர்ந்தார்கள்.








திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியமும் பெற, நிம்மதி பெற, செயல்கள் வெற்றி பெற, நோய் நொடிகள் தீர, இந்தக் கோயில் ஒரு வரப்பிரசாதம். பசும் போர்வையில் நாம் இறை தரிசனம் பெற்ற அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் நம்மிடம் இல்லை.














அன்று நாம் மேலும் ஒரு மலை யாத்திரையில் நல்லம்பாக்கம் சிவனார் கண்டோம். மீண்டும் அடுத்த பதிவில் தரிசனம் பெறுவோம்.


முந்தைய பதிவுகளுக்கு:-

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html
  மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html


 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html













No comments:

Post a Comment