"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 22, 2019

அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் தரிசனம் பெறலாமே! - ஸம்வத்ஸாரபிஷேகம் அழைப்பிதழ்


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆயில்ய நட்சத்திர தினத்தில் நம் குருநாதரை நினையாது இருக்க முடியுமா என்ன? உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம். ஓராண்டுக்கு மேலாக நம் குருநாதரை ஆயில்ய வழிபாட்டில் பூசித்து வருகின்றோம். புற வழிபாடு நாம் செய்வதன் நோக்கமே நாம் இன்னும் அக வழிபாடு நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்கு தான்.

நெஞ்சார நினைப்பவர்களுக்கு நிழல் போன்று தொடர்ந்து வருபவர் நம் அகத்தியர். குலம் தழைக்க உதவுபவர். இதற்கு தேவையான அருட்செல்வத்தை அள்ளித்தருபவர் இவர்.

  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!


நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.

காரணமின்றி காரியமில்லை என்பது இந்தப் பதிவில் மீண்டும் உணர்த்தப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் நம் அன்பர் ஒருவர் கிளார் ஊரில் உள்ள அகத்திய தம்பதியரை நமக்கு அனுப்பி இருந்தார். நாம் நேரம் கிடைக்கும் போது வருவதாகவும், குருவருள் முன்னின்று வழி நடத்த விண்ணப்பம் செய்தோம்.

நாட்கள் கடந்தன. அப்போது தான் நமக்கு அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் ஸம்வத்ஸாரபிஷேகம் வருகின்ற வெள்ளிக்கிழமை நடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் இந்த கோயிலில் ஆயில்ய பூசை நடப்பதில்லை, நம் தளம் சார்பில் உபயம் செய்க என்று நம் குருவும் கூறினார். இது ஒரு புறம் இருக்க நாம் சென்ற ஆயில்யம் முதல் நம் குருநாதர் பாதம் பட்ட கோயிலில் நம்மால் இயன்ற பூசை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சென்ற மாதம் திருத்துறையூர் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை செய்தோம். இம்மாதம் எங்கு செய்யலாம் என்றுபலவாறாக மனதை குரங்கு கையில் தேங்காய் கிடைத்தால் உருட்டுவதை போல் உருட்டிக் கொண்டிருந்தோம்.

கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆயில்ய பூசை செய்யலாமா இல்லை திருஇலஞ்சி முருகன் கோயிலில் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கிளார் அகத்தியர் நம்மை உடனே அழைத்து, தரிசனம் கொடுத்து விட்டார் என்பதே உண்மை.

சரி..இணையத்தில் தேடிய போது சில செய்திகள் நமக்கு கிடைத்தது.

 சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் தாமல் அருகில் இடதுபுறம் திரும்பி ஒரு ஆறு கி.மி செல்லவேண்டும். வழியெங்கும் பசுமையான வயல்வெளிகள். பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். காஞ்சியில் இருந்து சுமார் 15 km தொலைவில் அமைந்துள்ளது.இருபுறமும் நெற்பயிர்களுக்கு நடுவே ஒத்தையடிப்பாதையில் 300 மீட்டர் நடந்து சென்றால், மரங்கள் அடர்ந்த ஒரு சிறிய தோப்புக்குள் சுமார் 70% வரை புதியதாக கட்டப்பட்டிருந்த கோயில்.

அடர்ந்த தோப்புக்குள் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட மிக அருமையான கண்கவர் ஷோடசலிங்கத் திருமேனி. சென்னையைச் சேர்ந்த ஓர் அம்மையாரின் அறிவுரையின்படி வெளியில் எடுக்கப்பட்டு மேற் கூரை அமைத்து பிரதோஷ வழிபாடுகள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. பிறகு சில வருடங்களுக்கு முன்னால் திருக்கழுக்குன்றத்தில் நாடி சுவடி மூலம் அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட இறைவன் என்று அறியப்பட்டது.
மேலும், காஞ்சி புராணத்தில் வேகவதி ஆற்றுப்படுகையில் அறம்வளர்நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நியர் படையெடுப்பினால் ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளது. வேகவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் ஊர் முழுமையாக அழிந்தபோதும், அகத்தீஸ்வரர் மட்டும் நிலைத்துள்ளார். அம்மன், நந்தியெம்பெருமான், கோஷ்ட தேவதை மூர்த்தங்கள் புதியதாக செய்யப்பட்டு தற்போது ஜலவாசத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஓலைச்சுவடி மூலம் இத் தலம் ஒரு பரிகாரத் தலமாக அறியப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், ஊனமுற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கும் இது ஒரு பரிகாரத்தலம் என்று அகத்தியர் நாடியில் அருளியுள்ளார்.

சில வருடங்ளுக்கு முன் பூமியிலிருந்து கிடைக்கபெற்ற ஷோடசலிங்கம் இங்கே  பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு 11.11.2018 கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.




சரி. குருநாதரின் உத்திரவை நம்மால் மறுக்க முடியுமா என்ன? தேவைப்படும் அளவில் தற்காலிகமாக பூசைப் பொருட்கள் வாங்கி விட்டோம். தமிழகம் முழுதும் ரெட் அலெர்ட் என்று வேறு அறிக்கை செய்து இருந்தார்கள். நமக்கு நம் குருநாதர் பச்சைக் கொடி (கிரீன் அலெர்ட்) காட்டிவிட்டார் ..வேறென்ன? காலை 7 மணி அளவில் காஞ்சிபுரம் சென்றோம்.

அங்கிருந்து நண்பரை அலைபேசியில் அழைத்தோம்.  பின்னர் வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி பாலுச்செட்டி சத்திரம் இறங்கினோம். அங்கிருந்து மற்றொரு நண்பரின் உதவியால் கிளார் கோயிலுக்கு சென்றோம்.





பசுமை சோலையில் பச்சை வண்ண நாயகனாக அகத்தியரை தரிசித்தோம். மூலிகை நந்தியிடம் வேண்டினோம்.


அங்கணன் கயிலைகாக்கும்
அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதனாகி
பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும்
பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி


அடுத்து ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதியரை தரிசித்தோம்.






எத்துணை முறை பார்த்தாலும் நம் கண்களுக்கு போதவில்லை.



அடுத்து பேராற்றலை பரப்பிக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வரர் தரிசனமும், அறம் வளர் நாயகி அருளும் பெற்றோம். எப்படி நம்மை இன்று அழைத்து, நமக்கு குருவருளும்,திருவருளும் நம் குருநாதர் கொடுத்துள்ளார் என்று பார்க்கும் போது காரணமின்றி காரியமில்லை என்பது புரிந்தது.
அந்த வகையில் இந்த நாள் இனிய நாள் ஆகும்.






நம் தளம் சார்பில் ஆயில்ய பூசைக்கு சில பூசை பொருட்கள் வழங்கியுள்ளோம். அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை நடக்க உள்ள ஸம்வத்ஸாரபிஷேகம் அழைப்பிதழ் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு திருவருள் பெறும்படி வேண்டுகின்றோம்.





வாய்ப்பு கிடைத்தால் நம் குழு அன்பர்கள் அனைவரும் நேரில் சென்று கிளார் கோயில் தரிசனம் பெற வேண்டும் என்று விண்ணப்பம் வைத்து விட்டோம். மேலும் பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உள்ள ஸ்ரீ அகத்தியர் முனிவ தம்பதி தரிசனம் பெறவும் வேண்டுகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

 மீள்பதிவாக:-

 ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html


மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

 குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment