"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 11, 2019

அன்னை லலிதாம்பிகையின் கருணை! - TUT அன்பரின் அனுபவம்

அன்னை லலிதாம்பிகையின் கருணை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். ஆண்டின் முழுமை பகுதியில் நிற்கின்றோம். வழக்கம் போல் நம் சேவைகள் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டில் சிறப்பாக மஹாளய பட்ச சேவை சிறப்பாக அமைந்தது. ஆப்பூர் பெருமாள் கோயில் உழவாரப்பணியும் சிறப்பாக அமைத்துள்ளது. அன்று நம் தளம் சார்பில் ஒரு நாள் யாத்திரையும் குருவருளால் சாத்தியமானது. இதோ தீபாவளி நோக்கி நெருங்கி கொண்டிருக்கின்றோம். சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் தீபாவளி சேவை சில இடங்களில் செய்தோம்.இந்த ஆண்டும் தொடர இறையிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம்.

இந்தப்பதிவிற்கு நாம் தலைப்பு வைக்கவில்லை. நம் குழுவின் அன்பர் தந்த செய்தியே தலைப்பாக வைத்துள்ளோம். நம்மை பொறுத்த வரை சில கோயில்களை நம்மை ஈர்க்கும், உருமாற்றும், அன்பாற்றும், வருடமொருமுறை ஓதிமலை, வள்ளிமலை, திருஅண்ணாமலை கிரிவலம், சதானந்த சுவாமிகள் தரிசனம், குன்றத்தூர் கோயில்கள் தரிசனம், கூடுவாஞ்சேரி கோயில் தரிசனம் ,தாமிரபரணி நீராடல் & பாபநாசம் கோயில் தரிசனம் என வகுத்துள்ளோம். கூடுவாஞ்சேரி என்று எடுத்து கொண்டால் நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த ஷஷ்டி என கூறலாம்.

நவராத்திரி விழா நாம் சிறு வயதில் சுண்டலுக்காக சென்று வந்த விழா தான். இப்போது தான்  விழாவின் நோக்கம் புரிந்தது. இந்த கூடுவாஞ்சேரி மண் தான் நமக்கு உரைக்கும்படி சொல்கின்றது. அந்த வகையில் நவராத்திரி கடைசி நாளான விஜய தசமி அன்று நவசண்டி மஹா யாகம் நடைபெறுவது வழக்கம். சண்டி யாகம் கோயில்களில் மட்டும் தான் செய்வார்கள். இந்த ஆண்டு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுத்து இருந்தோம்.

அன்றைய தினம் காலை சென்னை வந்தோம், அலுவலகம் கிளம்பி நேரே கோயிலுக்கு சென்றோம். அங்கே நம் அன்பர்கள் திரு.ஹேமந்த், திரு.குமார் மற்றும் திரு.சத்யராஜ் இருந்தார்கள், மூவரும் ஹோமத்திற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். நாம் அனைவருக்கும் சங்கல்பம் செய்து விட்டு அலுவலகம் சென்றோம். மாலை எம் துணைவியை கோயிலுக்கு வருமாறு கூறினோம். ஏனென்றால் அன்று மாலை அன்னையின் நெய்க்குள தரிசனம் காணலாம்.

இதோ சண்டி யாக காட்சிகள் உங்களுக்காக




















அலுவலகப் பணி முடித்து அன்று இரவு சுமார் 8 மணி அளவில் மீண்டும் கோயிலுக்கு சென்றோம். ஆச்சரியம் தாங்க  முடியவில்லை.நம் அன்பர்கள் மூவரும் அங்கே தான் இருந்தார்கள், நேரம் அதிகமாகிக் கொண்டிருந்தமையால் திரு,குமார் அவர்கள் நம்மிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். கூடவே திரு.ஹேமந்த் ஐயாவும் சென்றார்கள். திரு.சத்யராஜுடன் நாம் இணைந்து கொண்டோம். மனதில் சிறு சலசலப்பு. இருவரும் அன்னையின் நெய்க்குல தரிசனம் காணாது செல்கிறார்களே என்று.

அடுத்து நாம் அன்னையின் அலங்காரம் , நெய்க்குள தரிசனம் என அனைத்தும் கண்டோம். மணி 9 ஆகிவிட்டது. குருக்கள் வீட்டிற்கு செல்லும் போது அவரிடம் சொல்லிவிட்டு செல்லும்படி கூறினார்.மனதிற்குள் அம்மையின் அருள் பெற்ற பூ கிடைத்தால் போதும் என்று நினைத்து,குருக்களிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம்.  நாம் நினைத்தார் போல், பூ மாலை நமக்கு கிடைத்தது.

இனி, அன்னையின் தரிசனம் அலங்காரம், நெய்க்குள தரிசனம் என தரிசிப்போம்.























அன்று சேவையில் இருந்த மூவருக்கும் நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த நாள் திரு.குமார் ஐயாவிடம் இருந்து ஒரு செய்தி நமக்கு வந்தது. அதனை அப்படியே பகிர்கின்றோம். இதில் அன்னையின் அன்பும், கருணையும் தெளிவாக புரியும்.

என்னவென்று  சொல்வது, எப்படி சொல்வது! தன் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், எப்படி வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று அவளுக்கா தெரியாது.

நேற்றைய யாகத்தில் மதியம் வரை கலந்துகொண்டு பின்பு வீட்டிற்கு திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் தான் அடியேன் பூஜையில் கலந்து கொண்டேன்.

பூஜையின் முடிவில் அங்கிருந்த சிவாச்சாரியார் திருமீயச்சூர் கோவிலில் நடப்பது போன்று இங்கேயும் அன்னையின் திருமுகம் நெய்யில் காணும் காட்சி நடைபெற போவதாக அறிவித்தார்கள். இந்த அறிவிப்பை கேட்டவுடன் அடியேன் மெய்சிலிர்த்து போனேன். இப்படி ஒரு அரிய காட்சியினைப் பார்ப்பதற்கு மாபெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் என் மனதில் திருவாளர். ராகேஷ் அவர்களுக்கு என் நன்றியை மனதிற்குள் தெரிவித்துக்கொண்டேன். அவர் நமக்கு அனுப்பும் பதிவுகளால் தானே இந்த பாக்கியம் கிடைத்தது.

பின்பு இன்று முழுவதும் கோவிலில் இருந்து அன்னையை தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என்று எனது ஆசையை Hemant Kumar and Sathyaraj அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அதே மனநிலையில் தான் இருந்தார்கள்.

அடியேன் காலச்சூழ்நிலையால் சென்னையில் இருந்து தற்போது திருப்போரூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் குடியிருக்கிறேன். இங்கு செல்வதற்கு 8 மணிக்கு மேல் Share Auto கிடையாது. ஒரு அரசுப்பேருந்து இரவு 9:10 மணிக்கு செல்லும். அதன்பிறகு ஊருக்குள் செல்வது மிக கடினம். யாராவது வாகனத்தில் செல்பவர்கள் நம்மை அழைத்துச் சென்றால் அதிர்ஷ்டம்.

அப்போது மதியம் 3 மணி, அன்னதானம் முடிந்து சிறிது நேரம் ஒய்வாக பேசி நேரத்தைக் கடத்தினோம். சரியாக 4:30 மணிக்கு நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்கள் லலிதா சகஸ்ரநாமம் பாட ஆரம்பித்தார்கள். அப்பப்பா என்னவென்று சொல்வது அவர்களின் பக்தியை, இரவு பூஜை முடியும் வரை தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்கள்.

அடியேன் மனதில் பூஜை 7 மணியளவில் முடியும், பின்பு வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் தான்  ஆகிக்கொண்டே இருந்தது. அன்னைக்கு அலங்காரம் முடிப்பதற்கு இரவு 7:30 மணி ஆகிவிட்டது. Sathyaraj அவர்கள் 8:00 மணிக்கு மேல் ஆகும் என்று கூறினார். Hemant அவர்கள் நேரம் ஆகின்றது என்பதை நினைவு படுத்தினார். அடியேனுக்கோ அன்னையின் திருமுகத்தை பார்க்காமல் எப்படி செல்வது என்ற ஏக்கம் மனதை வாட்டியது. Hemant அவர்கள் தான் தரிசனம் பார்ப்பது பற்றி கூட கவலைப்படாமல் என்னை வழியனுப்பி வைக்க உடன் வருவதாக கூறினார்.

அந்த நேரத்தில் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. அந்தகூட்டத்தில் திருமதி. ராகேஷ் அவர்கள் நெரிசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து நாங்கள் இருந்த இடத்தில் அமர வைத்தோம். அதற்கு Hemant அவர்கள் உடனடியாக எழுந்து வழிவகை செய்தார்.

இப்போது அடியேன் மனதில் பயம் தொற்றிக்கொண்டது, வீட்டிற்கு போவதைப் பற்றித்தான். Hemant மற்றும் Sathyaraj என்னை சற்று வருத்தத்துடன் பார்ப்பது போல் தோன்றியது. அடியேன் அவர்களிடம் அன்னை தரிசனம் பார்த்துவிட்டுத்தான் செல்வேன், மற்றதை அவள் பார்த்துக்கொள்வாள் என்று கூறினேன். பின்பு 8 மணியளவில் தீபாராதனை முடிந்தது. இக்காட்சி அடியேன் மனதை பேரின்பத்தில் ஆழ்த்தியது. இதற்காகத் தானம்மா உன் வாசலில் காத்து கொண்டிருந்தேன் என்று மனம் துள்ளிக் குதித்தது. அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்படியொரு அழகு! எங்கள் TUT குழுவில் உள்ள அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள், அடுத்த முறை நீங்கள் அனைவரும் நேரில் வந்து அன்னையின் அருளைப் பெற வேண்டுகிறேன்.

இப்போது Sathyaraj அவர்கள் முன்னே சென்று நெய்யில் தெரியும் அன்னையின் திருமுகம் கண்டு உடனடியாக கிளம்ப சொன்னார். நானும் Hemant அவர்களும் உடனடியாக சென்று அன்னை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

இந்த நேரத்தில் திரு ராகேஷ் அவர்களை பற்றி சொல்ல வேண்டும். அவருக்கு Office duty இருந்தாலும் காலையில் யாகத்தில் கலந்துகொண்டு பின்பு Office சென்றுவிட்டு மீண்டும் இரவு கோவிலுக்கு சரியான நேரத்திற்கு வந்துவிட்டார். இதுவல்லவா சிறந்த பக்தி.

இப்போது Hemant அவர்கள் தனது வாகனத்தில் என்னை அழைத்து சென்று வழியனுப்பி வைத்தார். ஆனால் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. கடைசி பேருந்தும் சென்றுவிட்டது என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அடியேனுக்கு பயம் தொற்றிக் கொண்டாலும் அன்னை மீது நம்பிக்கை வைத்து வேண்டிக்கொண்டேன். என்ன ஆச்சர்யம் இரவு 10 மணிக்கு (இங்கு 8 மணிக்கு மேல் Share Auto கிடையாது) ஒரு Share Auto வந்தது, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றேன். அன்னைக்கு தெரியாதா தன் பிள்ளையை எப்படி வீட்டிற்கு அனுப்பி வைப்பதென்று!!!

நேற்றைய நாள் முழுவதும் ஆலயத்தில் இருந்தது மிகுந்த மனநிறைவைத் தந்தது. இதுதான் சொர்க்கமோ என்று எண்ணத் தோன்றியது.

நேரம் ஒதுக்கி தட்டச்சு செய்து இதய உணர்வை பகிர்ந்தமைக்கு நன்றி குமார்  ஐயா

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 08.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/08102019.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் நவ சண்டி மஹாயாகம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_5.html

 நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (5) - https://tut-temples.blogspot.com/2019/10/5_5.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-4.html

  TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

No comments:

Post a Comment