"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 9, 2019

குருவே சரணம் - அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாஸன் குருபூசை இன்று

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்பது வெறும் சொல் அல்ல. இது ஒரு பற்றற்ற நிலை. நம்மை வழிநடத்தும் இறை. ஒருவருக்கு ஒரு குரு என்பது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. இந்த காலம் என்றில்லாது எக்காலத்திலும் சாத்தியமில்லை. சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் தேடல் ஜீவ நாடி பக்கம் சென்றது. அப்போது நமக்கு சித்தன் அருள் வலைத்தளம் அறிமுகமானது.பின்னர் நாடி சொல்லும் கதைகள் என்ற நூலும் கிடைத்தது. அப்போது தான் நமக்கு பரிட்சயம் ஹனுமத்தாஸன் என்ற பெயர். நேரில் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றார்.

இன்றைய தினம் தெய்வத்திரு. ஹனுமத்தாஸன் குருபூசை தினம். அவரைப் பற்றி சிந்திப்பதும், அவர் வாய்மொழி சொன்ன அகத்தியரின் அருள்வாக்கை கேட்பதும், படிப்பதும் நமக்கு இன்னும் குருவிடம் சரணாகதி அடைய உதவும்.ஹனுமத்தாஸன் ஐயா பேசியதும்,கொடுத்ததும் சித்தன் அருளே. கல்யாண தீர்த்தம், பாபநாசம் தரிசனம், ஓதிமலை யாத்திரை என அனைத்தும் சித்தன் அருள் கொடுக்கின்ற ஜீவ அமிர்தமே.

அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இன்னும் ஓதிமலை அனுபவம் நம்மை இறையை ஓத வைக்கின்றது. உழவாரப் பணி செய்த அனுபவமும், பேசும் முருகன் தரிசனமும் ஓதியப்பர் நமக்கு அருளினார். இந்த ஆண்டு ஓதியப்பர் பிறந்த நாளை வள்ளிமலையில் கொண்டாடினோம். அடுத்த யாத்திரையாக பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம். நாங்கள் எல்லாம் செய்த பாவத்தை வருடம் ஒருமுறையேனும் போக்க தான் இந்த அருள்நிலையா என்று ஏங்க வைக்கும் பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம் வருடத்திற்கு ஒரு முறை வாய்க்கிறது.  பெயரளவில் கேட்ட தாமிரபரணியை ,எம் உள்ளத்தில் பாய செய்கின்றது பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம்.

அடுத்து கோடகநல்லூர் தரிசனம். இங்கும் நமக்கு சென்ற ஆண்டு உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அனைத்தும் குருவருளால் தான் என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது. இது போல் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நம்மை அகத்தியத்தில் மூழ்கி முத்தெடுக்க வைக்கின்றது. மாதா மாதம் நாம் யாத்திரை செல்வதில்லை. குறிப்பிட்ட சில நாட்களாக அந்த நாள் இந்த வருடம் மட்டும் தவறாது யாத்திரையில் சித்தன் அருளால் செய்து வருகின்றோம். அனைத்தும் ஹனுமத்தாஸன் அருளாலே என்று நமக்கு தோன்றுகின்றது. இந்த உயிர் உய்ய இன்றும் ஆசிகளும், வழிகாட்டலும் தருகின்ற தெய்வத்திரு.ஹனுமத்தாஸன் பாதம் சரணம் அடைகின்றோம். மேலும் அவரின் ஆசி  வேண்டி நிற்கின்றோம்.






அகத்தியப் பெருமானின் "ஜீவநாடி" என்னிடம் வந்து சேர்ந்தபின், என் வாழ்க்கையில் நிறைய ஆச்சரியப்படுகிற அளவுக்கு நல்லது நடந்தது என்பதே உண்மை. என் தாயார் கோடிக்கணக்கில் "ஸ்ரீராமஜெயம்" எழுதியதால் இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று பின்னர் அகத்தியரால் சொல்லப்பட்ட பொழுது, நான் மிகவும் அகமகிழ்ந்து போனேன். ஆம் அனைவருக்குமே எல்லாமும் கிடைக்க ஊன்றுகோலாய் இருப்பதே அவரவர் பெற்றோர்கள்தானே. ஜீவநாடியால், ராமர், சீதா, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர், நரசிம்ஹர், வேங்கடவர், சிவபெருமான், முருகர், பிரம்மா, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் காட்ச்சியும், அருளும் எனக்கு கிடைக்க காரணமாக அகத்தியர் இருந்தார். அந்த காட்சி கிடைத்த நிமிடங்கள் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

ஒரு நாள் ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு த்யானத்தில் அமர்ந்த பொழுது ஒரு வேண்டுகோளை அவர் முன்னே வைத்தேன்.

"எல்லோரும் சுந்தர காண்டம் எழுதியிருக்கிறார்கள். அதுபோல் நானும் உங்கள் புகழை எழுதவேண்டும். அதற்கு அருளவேண்டும்!" என்றேன்.
"தலையாய சித்தராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழி காட்டுவார்" என்று காட்சி தந்து அருளி மறைந்தார்.

ஒரு நாள், அகத்தியர் நாடியில் அனுமன் காட்சி தந்து அசரீரியாக சொன்னதை சொல்லி கேட்ட பொழுது,

"பொறுத்திரு தயரதன் மைந்தா - பூலோகப்புண்ணியன், சாரதா தேவியின் மைந்தன் அவன் தரிசனத்தால் - அஞ்சனை மைந்தனின் அவதாரம் நும்மால் எழுதவரும்.  யானும் துணை இருப்பேன். என அருளாசி" என்று அகத்திய மாமுனி வாழ்த்தினார்.
20 வருடங்கள் உருண்டோடியது. நானும் சாரதா தேவியின் மைந்தன் என்று யாராவது ஒருவர் பத்திரிகை ஆரம்பிப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.
ஆனால் மகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா சந்நிதானப் பெரியவர் சிருங்கேரி சுவாமிகள் அனுக்ரகத்துடன் "அம்மன் தரிசனம்" என்னும் பக்தி நூல் மாதா மாதம் வரும் என்பதும், இதைத்தான் புண்ணியன் சாரதா தேவியின் அம்மன் தரிசனம் என்று அகத்தியர் உரைத்தார் என்பதும் எனக்கு அப்போது தெரியவில்லை. அம்மன் தரிசனம் நூலில் பல கட்டுரைகள் எழுதி வந்தாலும், சுந்தரகாண்டம் பற்றிய நினைப்பு வரவே இல்லை. இடையில் ஏதோ ஒரு காரணத்தால், தொடர்ந்து எழுதுவது முடியாமல் போனது.

மறுபடியும் அந்த பத்திரிகையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் நாடியில் அதை பற்றி கேட்ட பொழுது,

"அன்றே சொன்னோம் அகத்தியன் யாமும், முற்றிலும் மறந்தனை. மூலத் திருமைந்தன் விந்தைமிகு அனுமன் காண்டம் வெளிவர, மூன்றாம் பிறவி எடுத்த மூதாதைக் கவிஞர் முருகன் பெயருடைய தாசனிவன் - சாரதா அன்னையவள் அரும் பெயரால் - ஆற்றிவரும் தரிசனத்தில் தொடரட்டும் அனுமன் வலம்" என்று உத்தரவு கொடுத்தார்.

அனுமன் அனுகிரகத்தோடு இருபது ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் வாழ்த்துக்களோடு வந்த சொல்படி பின்னர் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்னும் தலைப்பில் வால்மீகி ராமாயணத்தை, நம் தமிழ் பெரும் கவி சக்ரவத்தி கம்பன் பெருமானுடன் ஒப்பிட்டு அந்த தொகுப்பை வெளியிட்டேன். 
அதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்ன தசா புக்திக்கு இந்த சுலோகம் வாசிக்கவும் என்று அகத்தியர் இடையில் நுழைந்து வாக்கு தந்தார்.

உண்மையை சொல்வதானால், இதை நான் எழுதவில்லை. அனுமனும், அகத்தியரும் சேர்ந்து எழுத்து உருவில் கொண்டு வந்தார்கள் என்பதே உண்மை. ஆதலால், இந்த "சுகம் தரும் சுந்தர காண்டம்" எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தை தரும் என்றால், அந்த பெருமை அவர்கள் இருவரையுமே சாரும்.

இந்த தொகுப்பில், என்னென்ன தசைகள் நடந்தால் என்னென்ன பிரச்சினைகள் வந்தால் சுந்தர காண்டத்திலுள்ள எந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நற்பலன் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுள்ளது. இந்த சுந்தரகாண்டத்தை கையில் வைத்திருந்தாலே, "கெடுதல்" என்பது ஒரு போதும் ஏற்படாது என்பது திண்ணம், ஏன் என்றால் இதில் உள்ள வார்த்தைகள், அனுமன் ஆசிர்வாதத்துடன், அகத்தியர் உபதேசத்துடன் வெளிவந்தது.



ஏழரை சனியால் கஷ்டபடுகிறவர்கள் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டவர்கள் ,சனி மகாதிசையில் கேது புத்தியோ, கேது திசையில்  சனி புத்தியோ  நடப்பவர்களுக்கு இந்த ஸர்க்கத்தை  தினமும் பாராயணம் செய்தால்,அவர்கள் ஹனுமானின் அருளால் அச்சம் விலகி நலம் பெறுவார்கள்.இவை அகத்திய மகரிஷி ஜீவ அருள் வாக்கு.!!




இந்த தொகுப்பில் அகத்தியப் பெருமான் காட்டிக் கொடுத்த ஸ்லோகங்களை வாசித்து தம் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளை விலக்கிகொண்ட பலரும் எனக்கு நன்றி தெரிவித்த பொழுது, அனுமனுக்கும், அகத்தியருக்கும் நான் நன்றி சொன்னேன்.

அகத்தியர் அடியவர்களே!  


​மேற்சொன்ன விஷயங்களை அறிந்தவுடன், நான் யாரேனும் அந்த தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா என்று தேடினேன். என் நண்பரிடமும் கூறினேன். ஒரு நாள் செய்தி வந்தது. புத்தகம் வாங்கிவிட்டதாகவும் உடனேயே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அந்த புத்தகம் வந்து சேர்ந்து வாசித்த பொழுது, எத்தனையோ பிரச்சனைகள் என்னை விட்டு விலகியது. நினைத்தது நடந்தேறியது. எல்லாம் அகத்தியரின் கை வண்ணம்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கத்தில், அது எங்கு கிடைக்கும் என்கிற நோக்கில் விவரங்களை கீழே தருகிறேன். நம்பிக்கை உள்ளவர், விருப்பம் உள்ளவர் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தினமும் வாசித்து வாருங்கள். நல்ல பலனை அடைவீர்கள். புத்தக வெளியிட்டாளர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கில் இதை இங்கு தெரிவிக்கவில்லை. இதில் வியாபார உத்தியே கிடையாது. நீங்கள் எல்லோரும் நல்லபடியாக, அகத்தியர் அருளால் வாழவேண்டும் என்கிற நோக்கில் கூறுகிறேன். அத்தனை பெருமையும் அகத்தியர் பாதங்களுக்கே.

புத்தகத்தின் பெயர் : "சுகம் தரும் சுந்தரகாண்டம்"

கிடைக்கும் இடம்:-

அருள் மிகு அம்மன் பதிப்பகம்
16/116, T.P.கோயில் தெரு,
திருமலா ப்ளாட்ஸ்,
(ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
தொலைபேசி: 42663546, 42663545
ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

மீள்பதிவாக :-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment