"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 18, 2019

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம் 

குன்றத்தூர். அண்மையில் நம்மை வெகுவாக ஈர்க்கும் ஊர் என்றே சொல்ல வேண்டும். குன்றத்தூர் கந்தலீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உழவாரப் பணி செய்தோம். பணியின் அளவு குறைவாய் இருந்தாலும், மனம் நிறைந்தது . கந்தலீஸ்வரர் தரிசனம், குன்றத்தூர் முருகப் பெருமான் தரிசனம், சேக்கிழார் கோயில் தரிசனம் என ஒரே நாளில் நாம் திக்குமுக்காடி விட்டோம். அதில் திருஊரகப் பெருமாள் தரிசனம் மட்டுமே பாக்கி இருந்தது.

நன்கு உற்று பார்க்கும்போது சைவம், வைணவம் என இணைக்கும் ஊராக குன்றத்தூர் விளங்கி வருகின்றது. சும்மா விடுவாரா? நம் குன்றத்தூர் கோவிந்தன். இதோ..கார்த்திகை தீபத்தன்று நம்மை மீண்டும் அழைத்து மீண்டும்,மீண்டும் பார்க்க தூண்டிய திவ்ய தரிசனம் வழங்கினார். தாயார் பெயர் திருவிருந்தவல்லி தாயார். (செல்வம் மிகுந்த என்று பொருள்!).





 நம்மை வரவேற்கும் ராஜ கோபுரம். ராஜ கோபுரம் தாண்டி உள்ளே சென்றால் , பிரகாரத்தில்  லக்ஷ்மணருடன் கூடிய கல்யாண ராமர் சன்னதி உள்ளது. தனித்தனியே ஆஞ்சநேயர் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் உள்ளது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.







 குலோத்துங்க சோழன் தம் தோஷம் நீங்க, காஞ்சி சென்று ஊரகப் பெருமாளை தரிசித்து, நீங்கப் பெற்றார், பின் குன்றத்தூர் வந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் இங்கே திருஊரகப் பெருமாள் கோயிலை காட்டினார். பெருமாள் இங்கே திருப்பதி வெங்கடாசலபதியாக இங்கே காட்சி தருகின்றார்.


வைகுண்ட ஏகாதசி இங்கே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதோ கோயில் குருக்களிடம் சென்ற ஆண்டு நடைபெற்ற காட்சிப்பதிவுகளை வாங்கி , இங்கே பதிவிடுகின்றோம்.



 இரவு நேர வெள்ளத்தில் குன்றத்தூர் கோவிந்தனின் தரிசனம் கீழே






கருடாழ்வார் சன்னதி












நாராயணா நாராயணா என்று நம் உதடுகள் துடிக்க கண்டோம்.





செல்வம் அள்ளித்தரும் நம் அன்னையாம்  திருவிருந்தவல்லி தாயார் சன்னதியில் நாம் சென்ற  வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உழவாரப் பணி செய்தோம்.அந்த அனுபவத்தை விரைவில் தருகின்றோம்.

பதிவின் ஆரம்பத்தில் ஒரு மங்களாசாசனப் பாடல் ஒன்றை கண்டீர்களா? மங்களாசாசனப் பாடல் பாடி மழை பெற்ற இடம் குன்றத்தூர்.அதனால் தான் சொல்கின்றோம். ஊர் ஊராக சுற்றாதே, குன்றத்தூரை சுற்று என்று. மீண்டும் ஒரு முறை பெருமாள் தரிசனம் காண்போமா!


மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment