அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய பதிவில் கந்த சஷ்டி வழிபாடு தரிசனமும், ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் தர விரும்புகின்றோம். இந்தப் பதிவை நாம் கொடுக்க உள்ளோம் என்று நாம் நினைக்கவில்லை ஆனால் நம்மை வழிநடத்தும் குருவருளால் இது சாத்தியமாகின்றது.நம் தளத்தில் கந்த சஷ்டி பதிவுகள் தினமும் தரப்பட்டு வருகின்றது. இந்த கந்த சஷ்டி விழா காலத்தில் இவற்றை படித்து கருணைக்கடலாம் கந்த கடவுளின் பதம் பற்றுங்கள்.
வழக்கம் போல் இன்று காலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் சென்று சஷ்டி விரத காப்பு கட்ட விரும்பினோம். வருண பகவான் வளங்களை வாரித் தந்து கொண்டு இருக்கின்றார். காப்பு கட்டி முடித்ததும் கடைக்கு சென்று சில பொருட்களை வாங்க வேண்டி இருந்ததால், கடைக்கு செல்லலாமா அல்லது வேலி அம்மன் கோயில் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டே வேலி அம்மன் கோயில் சென்று முருகப் பெருமான் தரிசிக்க காத்திருந்தோம். நம்மை ஏன் குருவருள் இங்கே பணித்தார்கள் என்று மனதுள் ஓடிக் கொண்டே இருந்தது.
அப்போது தான் அங்கே ஆதி நடராசர் திருச்சபை சார்ந்த திரு.ராஜ்குமார் ஐயா இருந்தார்கள். அப்படியே ஐயாவிடம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர்கள் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் இந்த மரமண்டைக்கு உரைத்தது. நம் தளம் சார்பில் ஒன்றும் செய்யவில்லை என்று? பணப்பையில் இருந்த ரூ.500 அவர்களிடம் கொடுத்தோம். அடுத்து ஐயா அவர்கள் நவம்பர் மாத முற்றோதல் நிகழ்வுகளை பற்றி கூறினார். அட..இதற்குத் தான் நம்மை குருவருள் அழைத்துள்ளது என்பதும் நமக்கு புரிந்தது. பதிவின் இறுதியில் இணைத்துள்ளோம்.
சரி. முற்றோதல் பற்றி சிறிது காண்போமா?
பொதுவாக முற்றோதல் என்று சொன்னாலே அது திருவாசக முற்றோதல் என்று தான் பொருள் கொள்ளும்படி கூறப்பட்டு வருகின்றது. முற்றோதல் என்று சொல்லும்போது நமக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது. முற்றோதல் என்பது சரியா? இல்லை முற்றோதுதல் என்பது சரியா? என்று. சரி. நாம் விசயத்திற்கு வருவோம்.
முற்றோதல் என்பது குழுக்களாக தமிழ் மொழியில் உள்ள பக்தி நூலை ஒருவரே படிக்காமல், குழுவில் உள்ள அனைவரும் படிக்கும் படி செய்வது ஆகும். பொதுவாக சைவ ஆதீனத் திருமடங்கள், கோயில்களில் இந்த முற்றோதல் நடைபெறுவதுண்டு. சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம் இது. திருவாசக முற்றோதல்; திருமந்திர முற்றோதல் வழக்கத்தில் உள்ளவை. நாலாயிரப் பிரபந்த
இதிலே..ஒரு செய்தி தவறாக உள்ளது. அது என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

முற்றோதலும் உண்டு. ஆனால் நாம் திருவாசக முற்றோதல் என்று நிறைய
கேட்டிருப்போம். இந்த முற்றோதல் நிகழ்வில் கண்டிப்பாக குழந்தைகள் பங்கு பெற
வேண்டும். அப்போது தான் பக்தி வளரும். புத்தி தெளியும். ஐந்தில் வளைத்தால்
தான் ஐம்பதில் வளைக்க முடியும்.
முற்றோதல் என்ற நிகழ்வு பற்றி நாம் அறிந்து ஒரு சில முற்றோதல்களிலும்
கலந்து கொண்டது இன்னும் நமக்கு இறை பற்றி சிந்திக்க வைக்கின்றது. rightmantra.com
நிகழ்த்திய அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் நம்மை வலுப்படுத்தியது.
அடுத்து தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் கண்டுள்ளோம்.கேட்டுள்ளோம்.
முற்றோதலில் நாம் திளைக்க திளைக்க நாம் சிவ புண்ணியம் சேர்ப்பது உறுதி, சிவ
புண்ணியம் கொஞ்சமாவது இருந்தால் தான் இது போன்ற முற்றோதல் நிகழ்வுகளில்
பங்குபெற முடியும்.
திருவாசகம் மட்டும் முற்றோதல் செய்தல் என்ற நிலையில் இருந்து நாம் வெளியே
வர வேண்டும். தமிழில் இல்லாத பக்தி நூல்களா? சென்ற நூற்றாண்டில்
ஒலிநாடாக்கள் சில தொடங்கின: அபிராமி அந்தாதி - சீர்காழி, டிஎம்எஸ்
பாடியுள்ளனர் முற்றோதலாய். பாம்பே சகோதரிகளின் திருமுருகாற்றுப்படை
முற்றோதல் ஒலிநாடா கிடைக்கும். திருப்பாவை அரியக்குடி, எம்எல்வி, பாலக்காடு
கேவிஎன், வடமொழியில் சுப்ரபாதங்கள் (எம் எஸ்), கீதை முற்றோதல்
ஒலிநாடாக்கள் உண்டு, யுட்யூபில் இருக்கலாம்.
இன்று கேட்பொலி (ஆடியோ), காணொளி (யுட்யூப்) போன்றன இருப்பதால் தமிழில்
உள்ள ஏராளமான புராணங்களையும், இலக்கியங்களையும் முற்றோதுவித்து ஏற்றலாம்.
ஓய்வு நேரத்தில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் கேட்டுப்
பயன்பெறுவர்.சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முற்றோதலாமே.
முற்றோதல் செயலை பெரியவர்கள் மட்டுமின்றி யாவரும் செய்யலாம்.ஆர்வம், தணியாத வேகம், காதல், தான் ஓதிக்கொண்டுள்ள நூலின் மீது உண்மையான பக்தி--அல்லது பற்று--இவையும் இவற்றுக்கு மேலும் உள்ளவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் பெரியவர்களே என்கிற காரணத்தினால்,வயது,கல்வி தடையின்றி,ஈடுபாட்டின் அடிப்படையில் நடைபெறுவது முற்றோதலாகும்.
முருகனருள் பெற்று இன்று காப்பு கட்டிக்கொண்டோம்.
இதிலே..ஒரு செய்தி தவறாக உள்ளது. அது என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
மொத்தம் 11 முற்றோதல் நிகழ்வுகள் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
அடுத்து வேலி அம்மன் கோயிலில் உள்ள முருகன் அருள் பெற்றோம்.
இந்தப்பதிவை அளிக்க தான் குருவருள் நம்மை வேலி அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளது என்று நினைக்கும் போது, நம்மை வழி நடத்தும் குருமார்களின் பாதத்தை என்றும் பிடிக்க விரும்புகின்றோம். மேலும் இங்கு நாம் முற்றோதல் பற்றி அறிந்தமையால் நம் மனதில் புது எண்ணம் பிறந்தது. அதனை பற்றி பிறகு செயல்படுத்தி விட்டு பேசுவோம். வழி நடத்தும் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு ஓதிமலையும்,வள்ளிமலையும் என்ற தொகுப்பை மீள்பதிவாக கீழே தருகின்றோம்.
மீள்பதிவாக:-
ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
No comments:
Post a Comment