"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, July 19, 2019

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. சுமார் 1 வார இடைவெளிக்கு பின்னர் இன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் சென்றோம். கோயில் முகப்பில் முற்றோதல் பற்றிய அறிவிப்பு இருந்தது. நம் மனம் ஆனந்த கூத்தாடியது.

சமய நூல்களின் மூல வடிவத்தை முற்றிலும் ஓதுதல் என்பதே முற்றோதல்.இங்கே நாம் பக்தி நூட்களையும் எடுத்துக் கொள்ளலாம். சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம். வைணவ சமயத்திலும் முற்றோதல் உண்டு.ஆனால் மிகுதியாக பழக்கத்தில் காணப்படுவதில்லை.

நமது முன்னோர்கள், நடைமுறையில்,சமய நூல்கள் பலரையும் சென்று சேர்ந்து பலனடையும் பொருட்டு, இதை எளிமைப்படுத்துவதற்காக (முற்றிலுமாக ஓதுவதற்காக) அடியார்கள் குழுவாகவும் கூட்டாகவும் சேர்ந்து, அமர்ந்து, ஓதுவதாக நடைமுறைப்படுத்திய ஒரு பாங்கிற்கே முற்றோதல் என்ற முறையாகும்.பொதுவாக முற்றோதல் என்று சொன்னாலே அது திருவாசக முற்றோதல் என்று தான் பொருள் கொள்ளும்படி கூறப்பட்டு வருகின்றது. முற்றோதல் என்று சொல்லும்போது நமக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது. முற்றோதல் என்பது சரியா? இல்லை முற்றோதுதல் என்பது சரியா? என்று. சரி. நாம் விசயத்திற்கு வருவோம்.

முற்றோதல் என்பது குழுக்களாக தமிழ் மொழியில் உள்ள பக்தி  நூலை ஒருவரே படிக்காமல், குழுவில் உள்ள அனைவரும் படிக்கும் படி செய்வது ஆகும். பொதுவாக சைவ ஆதீனத் திருமடங்கள், கோயில்களில் இந்த முற்றோதல் நடைபெறுவதுண்டு. சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம் இது. திருவாசக முற்றோதல்; திருமந்திர முற்றோதல் வழக்கத்தில் உள்ளவை. நாலாயிரப் பிரபந்த
முற்றோதலும் உண்டு. ஆனால் நாம் திருவாசக முற்றோதல் என்று நிறைய கேட்டிருப்போம். இந்த முற்றோதல் நிகழ்வில் கண்டிப்பாக குழந்தைகள் பங்கு பெற வேண்டும். அப்போது தான் பக்தி வளரும். புத்தி தெளியும். ஐந்தில் வளைத்தால் தான் ஐம்பதில் வளைக்க முடியும். 
முற்றோதல் என்ற நிகழ்வு பற்றி நாம் அறிந்து ஒரு சில முற்றோதல்களிலும் கலந்து கொண்டது இன்னும் நமக்கு இறை பற்றி சிந்திக்க வைக்கின்றது. rightmantra.com நிகழ்த்திய அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் நம்மை வலுப்படுத்தியது. அடுத்து தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் கண்டுள்ளோம்.கேட்டுள்ளோம். முற்றோதலில் நாம் திளைக்க திளைக்க நாம் சிவ புண்ணியம் சேர்ப்பது உறுதி, சிவ புண்ணியம் கொஞ்சமாவது இருந்தால் தான் இது போன்ற  முற்றோதல் நிகழ்வுகளில் பங்குபெற முடியும்.
திருவாசகம் மட்டும் முற்றோதல் செய்தல் என்ற நிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். தமிழில் இல்லாத பக்தி நூல்களா? சென்ற நூற்றாண்டில் ஒலிநாடாக்கள் சில தொடங்கின: அபிராமி அந்தாதி - சீர்காழி, டிஎம்எஸ் பாடியுள்ளனர் முற்றோதலாய். பாம்பே சகோதரிகளின் திருமுருகாற்றுப்படை முற்றோதல் ஒலிநாடா கிடைக்கும். திருப்பாவை அரியக்குடி, எம்எல்வி, பாலக்காடு கேவிஎன், வடமொழியில் சுப்ரபாதங்கள் (எம் எஸ்), கீதை முற்றோதல் ஒலிநாடாக்கள் உண்டு, யுட்யூபில் இருக்கலாம். 
இன்று கேட்பொலி (ஆடியோ), காணொளி (யுட்யூப்) போன்றன இருப்பதால் தமிழில்
உள்ள ஏராளமான புராணங்களையும், இலக்கியங்களையும் முற்றோதுவித்து ஏற்றலாம். ஓய்வு நேரத்தில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் கேட்டுப் பயன்பெறுவர்.சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முற்றோதலாமே.
முற்றோதல் செயலை பெரியவர்கள் மட்டுமின்றி யாவரும் செய்யலாம்.ஆர்வம், தணியாத வேகம், காதல், தான் ஓதிக்கொண்டுள்ள நூலின் மீது உண்மையான பக்தி--அல்லது பற்று--இவையும் இவற்றுக்கு மேலும் உள்ளவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் பெரியவர்களே என்கிற காரணத்தினால்,வயது,கல்வி தடையின்றி,ஈடுபாட்டின் அடிப்படையில் நடைபெறுவது முற்றோதலாகும்.







அடுத்து நாம் மூத்தோனை தரிசித்தோம். அப்படியே முருகப் பெருமான், அகத்தியர் என தொடர்ந்தோம்.




அடுத்து ஆடி வெள்ளி சிறப்பு தரிசனம் பெற்றோம்.இதோ..நம் தல அன்பர்களுக்காக பகிர்கின்றோம்.








ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே




அடுத்து குருக்களிடம் நன்றி கூறி விடை பெற்றோம். அப்போது அடுத்து சுந்தரர் குரு பூஜை விழா கொண்டாட கேட்டோம். அவரும் நமக்கு சில செய்திகள் சொல்லியுள்ளார். நிகழ்வை உறுதி செய்ய குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

எப்படியோ ஆடி வெள்ளி தரிசனம் நம் மனதை இன்னும் செம்மைப்படுத்தியது என்பது உண்மை.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_17.html



No comments:

Post a Comment