"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, July 25, 2019

தேனி சண்முகநாத மலை தரிசனம் (2)

முருகா...


அழகென்ற சொல்லுக்கு முருகா...

முருகன்..அழகு என்ற சொல்லுக்கு மட்டும் அல்ல..அன்பு என்ற சொல்லுக்கும் உருவானவர். அன்பில் தோய்ந்தால் தானே அருள் கிடைக்கும், இதனைத் தான் நேராகவே பாடலில்

 உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

என்று பாடுகின்றோம். வேலையும், மயிலையும் சேவலையும் கொண்ட கந்தன்..இல்லை..அவன்  காந்தன் அவன். நம்மை அழகால்,அன்பால்,அருளால் ஈர்ப்பவன் அவன். எத்துணையோ பெயர்கள் உண்டு நம் கந்தனுக்கு.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகாய்,அழகுக்கு அழகு சேர்க்கும். இன்றைய பதிவில் தேனி சண்முகநாத மலை தரிசனம் தொடர இருக்கின்றோம்.


நாம் ஏற்கனவே சொன்னது போல் சண்முகநாதன் தரிசனம். சுமார் இராண்டாண்டிற்கு முன்னதாகவே தேனியில் சண்முகநாத மலை இருப்பதாகவும் அங்கே குழந்தை முருகன் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். எங்கே? எப்படி செல்வது என்று கேட்டால், என்னப்பா? தேனியில் இருக்கின்றாய்? இது தெரியாதா? என்பார்கள். அந்த முருகப் பெருமானை இணையத்தில் கண்ட போது, எப்போ அழைப்பாரோ? என்று தான் நமக்குத் தோன்றியது. அந்த அழைப்பின் அருளை இங்கே பதிக்கின்றோம் 


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் ஊரில் உள்ள கமயக்கவுண்டன் பட்டி அருகில் இருந்து குழந்தைவேலர் தரிசிக்க மலை என்ற வேண்டும். மலையேற்றம் என்றவுடன் மிகப் பெரிய மலை என்று நினையாதீர். தூரம் மிக மிக அதிகம். மலை ஏற்றம் குறைவே. ஆனால் நிறைவாய் தரிசனம். சென்ற பதிவில் மலை யாத்திரை மேற்கொண்டு, மலை ஏறி நாம் பார்த்தது அந்த வெற்றிவேலைத் தான். வெற்றிவேல் தரிசனம் கண்டு, அப்படியே நேரே சென்றால் திருக்கோயிலை அடையலாம்.



கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பதற்கேற்ப. சிறிய கோயிலை இருந்தாலும், அங்கே வெளிப்படும் முருகன் அருள் மூவுலகும் பெறும் என்பதே உண்மை. பார்க்கும் இடமெல்லாம் பசுமை. பசுமை முருகனுக்கு மிகவும் பிடிக்கும் அன்றோ? பசுமை நம் எண்ணத்திலும் நிறைந்தது.





கோயிலை சுற்றிலும் முற்றிலும் பார்த்தோம். அருகிலே ஒரு சிறிய வீட்டில் கோயிலை பராமரிக்கும் அம்மையார் இருந்தார்கள். கோயிலின் பின்புறம் பாதை சென்றது. மெல்லிய பூங்காற்று வீசியது. தனியாக இருந்தால் அங்கே சற்று பயமாக இருக்கும். மீண்டும் கோயிலுக்கு வந்தோம்.


நவகிரக நாயகர்கள் மேற்கூரையின்றி இருந்தார்கள். எப்போது கோயில் செப்பனிடும் பணி தொடக்கம் என்று தெரியவில்லை. அங்கு உத்தரவு கேட்டு, தீப வழிபாடு தொடங்கினோம்.

அட..இந்த மலைக்கு பசுமலை என்றும் பெயரும் உண்டு. 



                                                       தீபமேற்றி வழிபாடு நடந்தது.








பின்னர் கோயில் குருக்கள் நம்மை பின்புறம் உள்ள இடத்திற்கு வாருங்கள் என்று கூட்டி சென்றார்.அங்கு சென்று தீர்த்தம் எடுத்து வர வேண்டும் என்றும் கூறினார். நாமும் அவரை பின்தொடர்ந்து சென்றோம்.








அருமையான இடம். தனிமையின் பிடியில் நம்மை உணர்த்தும் இடம் என்றே சொல்ல வேண்டும்.









கற்கள்,பாறைகள் என தாண்டி தாண்டி சென்றோம். தீர்த்தம் வந்து கொண்டிருந்தது. எப்போதும் இந்த தீர்த்தத்தில் நீர் இருக்கும். கண்ணகித் தாய் மதுரையை எரித்து இங்கே வந்த போது, குழந்தை முருகன் இங்கிருந்து அவளை மகிழ்வித்தாராம். குழந்தையைக் கண்டால் கோபம் தணியும் அல்லவா ? மேலும் கண்ணகித் தாயின் தாகம் தீர்க்க, முருகன் அம்பு விட்டு,இங்கு தீர்த்தம் உருவாக்கினார் என்பதும் தொன் நம்ம்பிக்கையாக உள்ளது.





அங்கிருந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு சிறிய குகை இருந்தது. இங்கு சித்தர்கள் வாசம் எப்போதும் உண்டு என்று கூறினார்கள்.இவர்களை இங்கு வழிபட்ட பின் தான் நாம் கோயிலில் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறினார்கள். நம்மால் உள்ளே செல்ல முடியவில்லை. தீபம் இட்டு வழிபாடு செய்த காட்சி மேலே உங்களுக்காக இணைத்துள்ளோம்.









மீண்டும் அங்கிருந்து கோயில் நோக்கி சென்றோம்.









கோயிலுக்கு திரும்பிய பின்னர், மீண்டும் ஒருமுறை தீர்த்தம் சென்ற போது, முருகன் அடியார் ஒருவர் தீர்த்தமாடிக் கொண்டிருந்தார். இதோ. கோயிலையும், அங்கிருந்த தீர்த்தம் பற்றியும் தெரிந்து கொண்டோம். அடுத்த பதிவில் தரிசனம் பற்றி பாப்போம். அதுவரை பொறுமை காக்கவும்.
அடுத்த பதிவில் அழகனின் தரிசனம்.

மீள்பதிவாக:-


 ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html


 கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html


 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5

2 comments:

  1. Replies

    1. குருவருளால் குருவின் தாள் பணிந்து
      நன்றி ஐயா

      Delete