"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 14, 2019

குருவைக் கொண்டாடுவோம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவைப் பற்றி  உணர்ந்த செய்திகளை இங்கே பதிவாக அளிக்க வேண்டும் என்று  நீண்ட நாட்களாக விரும்பினோம். இறையருள் இன்று தர நம்மை கருவியாக்கி உள்ளது. இன்றைய தினம் அவரைப் பற்றி சிந்திக்க முனைவோம்.

குரு என்பவர் நம்மை ஈர்ப்பவர். சீடன் தயார் என்றதும் தாமாக வருபவர். சீடனும் குருவும் பூனைப் பிடியும், குரங்குப் பிடியுமாக இருப்பார்கள். அப்படித்  தான் வேதாத்திரி மகரிஷியை பள்ளிப்பருவத்தில் பிடித்தோம். இன்னும் என்னை உயிர்ப்பித்து கொண்டிருப்பவர் எம் குரு வேதாத்திரி மகரிஷி.

கூடுவாஞ்சேரியிலே பிறந்து, ஆன்மிகம் என்றால் என்ன என்று ஆராய்ந்து, உணர்ந்து, உணர்ந்ததை மற்றவர்களுக்கும் உணர்த்தி வருகின்றனர். பாமர மக்களும் உணரும் வண்ணம் தத்துவங்களை கூறுவது எம் குருவின் சிறப்பு. எனவே தான் இவர் பாமர  மக்களின் தத்துவ ஞானி என்று அழைக்கப்பட்டு வருகின்றார்.



குரு என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு உணர்வு, பல பிறவிகள் தாண்டிய பந்தம். குருவை வணங்க இன்று  பலர் கூசி நிற்கின்றார்கள்.வேறு சிலர் ஆராய்ச்சி என்று இறங்கி விடுகின்றார்கள். ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு நமக்கு தகுதி இருக்கின்றதா? என்று யோசிப்பதில்லை. இந்த மானிடப் பிறவியின் நோக்கம் குருவை அடைவதே..அப்படி தான் எமக்கு எம் குரு கிடைத்தார்.  சூழலில் எத்துணையோ மாற்றங்கள்.



அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை சீர்குலைக்க முதலில் ஆங்கிலேயர் கை வைத்தது குருகுலவாசம் என்ற கல்வி முறையில். ஆனால் இன்னும் நம்மால் அதில் மீண்டு எழ முடியவில்லை. இணையக் கல்வி தொழில்நுட்பம் என்று என்ன தான் நாம் சொன்னாலும் குருகுலத்திற்கு ஈடாகாது.



சீடனின் தகுதி குருகுல கல்வியில் தான் தெரியும். சரி...நம் விசயத்திற்கு வருவோம். வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரியில் உதித்த மகான். வாழ்வியலை போதித்த ஞானி. இறையுணர்வையும் அறநெறியையும் தெளிவாக்கிய சித்தர். பெண்களுக்கும் ஞானம் உண்டு என்று அவர்களுக்கும் ஆன்மிகம் போதித்த மகான்.



வள்ளலாரின் வாரிசு எம் குருநாதர். சித்தர்களின் சித்துக்கவிகளை எம்மைப் போன்ற எளியோர் அறிய தம் தமிழ் நடையில் ஞானம் போதித்து வரும் மகான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.



வேதாத்திரியம் தந்த விஞ்ஞானி. பிரம்ம ஞானம் தந்த மெய்ஞ்ஞானி. சுவாமிஜியின் கருத்துக்கள் மிக மிக எளிதாக இருக்கும். ரமணரை உணர்த்தும் நான் யார் என்பது போன்ற ஆழந்த விளக்கங்கள் எளிமையாக தருவது இவரின் சிறப்பு.நீங்கள் எத்துணையோ ஆன்மிக புத்தகங்கள் படித்தாலும் சுவாமிஜியின் கருத்துக்களும், பயிற்சி முறைகளும் போதுமானது.



நமக்கு கிடைத்த சுவாமியின் தத்துவங்களை இங்கே தொடுத்து தந்திருக்கின்றோம். மீண்டும் மீண்டும் படித்து உணருங்கள்.



குரு காணிக்கையை பொருளாக பெரும் குருமார்கள் காலத்தில் நாம் செய்த பாவங்களை என்னிடம் குரு காணிக்கையாக தாருங்கள் என்று கூறியவர்.





























































யோகிராஜ் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள்!


ஆண் பெண் உறவுகளின் ஒழுக்கத்தின் மூலமே உயர்ந்த நாகரீகம் உண்டாகும். இந்த ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் கவசமே திருமணம் ஆகும்.
வாழ்க்கையின் மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை மனைவியும் மனைவியைக் கணவனுமே. எனவே ஒவ்வொருவரும் கணவன், மனைவி உறவை உயிர்க்கு மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்.
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினர்களும் விருந்தினர்களாக வர வாய்ப்புகள் உண்டு. அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில் இன்முகம் காட்டுங்கள்.
கணவன் மனைவி உறவிலே பகைமை அல்லது பிணக்கு இருக்குமேயானால் ஒருவர் மற்றவர் மீது கோபம் கொள்வார்கள். அவற்றை உடனே சமாதானமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்தக் கோபமே இருவருக்குமான சாபம் போல் அமைந்து விடும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது. அவை குழந்தைகளின் ஒழுக்கப் பண்பாட்டின் உயர்வுக்கு தடையாக இருக்கும்.
உடல் பொருள் ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனமுவந்து அர்ப்பணித்து வாழ்க்கைத் துணைவராகி இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு வாழும் பெருமை கணவன் , மனைவி உறவில்தான் அதிகமாக அடங்கியுள்ளது.
கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் உயிரைவிட மேலாகப் போற்றக்கூடிய ஒழுக்கம். உடல் உரம், மனநலம், பொருள் வளம் மூன்றையும் காக்க வல்லது கற்பு.
ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து உதவி செய்து, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை கணவன்-மனைவி இருவருமே உயிர் போல காக்க வேண்டும். துணையின் தேவையறிந்து உதவி செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவாகவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.

அன்பு, அருள், இன்முகம், களை போன்ற அம்சங்களுடன் கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும், நல்லவர்களாக, அழகு மிக்கோராகப் பிறப்பார்கள், வளர்வார்கள்.


15.8.2019 அன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை 


'மகரிஷி பிறந்த நாள் விழா',
           
            மற்றும்

 'ஞானாசிரியர் தின விழாவும்', SKY பேரா. நக்கீரன் அவர்கள்  தலைமையில நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
                   
நிர்வாக அறங்காவலர் 
ரா.பிரமுக்குட்டி அம்மா அவர்கள் மற்றும் அறங்காவலர் குழு
கூடுவாஞ்சேரி


2 comments:

  1. அருமை அருமை, மகரிஷி அவர்களது படங்களை நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது. 🙏🙏🙏🙏🙏

    அவரிடம் 30 வருடம் முன்பு பல வித்தைகளை பயின்ற சீடர் ஒருவர் எனது பக்கத்து வீட்டுக்காரர். அவருக்கு இப்போது 82 வயது. இளமையுடன் உள்ளார். 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா..

      குருவின் சீடரை நாம் பார்க்க விரும்புகின்றோம். இன்று மேலும் ஒரு பதிவு தந்துள்ளோம். குருவைப் பற்றி பேச,படிக்க
      நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகான். குருவின் பதம் போற்றுவோம்.

      வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!!

      Delete