"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 11, 2019

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் - அன்னாபிசேகம் தரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் ஐப்பசி பௌர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிசேகம் தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். சில கோயில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இன்றும் சில கோயில்களில் நடைபெற உள்ளது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழியின் தாத்பர்யமே அன்னாபிஷேக தரிசனம் ஆகும். இன்றைய அன்னாபிஷேக தரிசனத்தோடு அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பதிகமும் தர விரும்புகின்றோம்.


ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது.
நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது.
அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது.
எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகிறது.
இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.

இறைவனுக்கு செய்யும அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம்  செய்தால்  ராஜபோக வாழ்வு கிட்டும் .

அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னாபிஷேகத்தின் போது, வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்.

சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது காலம், காலமாக நடந்து வருகிறது.ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா 12.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.

தானத்தில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்னதானம் மட்டுமே.

உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து,
உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை. நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது.சிவலிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது.

பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது.உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன.ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன.

சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவவடிவம் தான். அண்டம் முழுக்க சிவவடிவம் தான். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.

சிவ பெருமானை அபிஷேகபிரியர் என்றும்,மகா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும். பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது. அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது.ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்க நாதர் என்றும் குறிப்பிடுவர்.

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்ச நிலை சிறப்புடையதாகும். சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம்.எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.1 கோயில் ( தில்லை / சிதம்பரம்)
பாடல் எண் : 1
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

பாடல் எண் : 2
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

பாடல் எண் : 3
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

பாடல் எண் : 4
அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

பாடல் எண் : 5
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.

பாடல் எண் : 6
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.

பாடல் எண் : 7
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே.

பாடல் எண் : 8
விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி லம்பலத்
துள்நி றைந்துநின் றாடு மொருவனே.

பாடல் எண் : 9
வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.

பாடல் எண் : 10
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

பாடல் எண் : 11
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற

மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.

இன்று இந்த பதிகம் படிப்பது / பாடுவது மிக சிறப்பு. இதோ..இன்று நம் தளத்தின் சார்பில் சில பிரதிகள் எடுத்து இரண்டு கோயில்களில் கொடுத்துள்ளோம்.





நம் தளம் சார்பில் சுமார் 10 கிலோ பச்சரிசி 3 கோயில்களில் கொடுத்துள்ளோம். நாம் கொடுத்த நினைத்த கோயில்கள் வேறு. நாம் கொடுத்த கோயில்கள் வேறு.எல்லாம் அவன் செயல் அன்றோ!

இனி. சோற்றுக்குள் சொக்கனின் தரிசனம் காணலாம்.



நீங்கள் மேலே காண்பது அன்னாபிஷேகம் அலங்காரம் @ஸ்ரீ துளசீஸ்வரர் கோயில் 11.11.2019

அடுத்து கிளார் கிராமத்தில் அருள்புரியும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் தரிசனம்.




சொக்கனின் அழகில் சொக்கி போகின்றோம் 

அடுத்து ஊரப்பாக்கம் ஊரணீஸ்வரர் தரிசனம் காணலாம்.


நெடுங்குன்றம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனம் பெறலாம்.




அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் 


திருப்பெருந்துறை 


திருவட்டத்துறை 


                                           சென்னிமலை கைலசாநாதர் திருக்கோயில்



திருவெண்ணைநல்லூர் 


திருத்துருத்தி 


அனந்த பத்மநாபேஸ்வரர் , காஞ்சி 



அம்பீசர் , காஞ்சி 





நூம்பல் ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனம்.


அட..ஒவ்வொரு தரிசனமும் நம்மை இறையருள் பெற வைக்கின்றது. 

இது மட்டுமா? இன்றும் சில கோயில்களில் அன்னாபிசேகம் வழிபாடு இருக்கின்றது. நம்மை வழிநடத்தும் ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் இம்முறை விரிவாக சேவை செய்துள்ளோம். திருச்சி பெருகமணி அகத்தியர் கோயில், பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் கோயில், கூடுவாஞ்சேரி மாமரத்து ஈஸ்வரர் கோயில்களில் நம்மாளான பொருளுதவி செய்துள்ளோம். திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில், திருக்கச்சூர்  மருந்தீஸ்வரர் கோயில், ஆதனூர் கைலாசநாதர் கோயில்களில் நம்மால் இயன்ற அளவில் பச்சரிசி வாங்கி கொடுத்துள்ளோம். ஏன் நாம் திருக்கச்சூர் சென்றோம் என்று தனிப்பதிவில் தருகின்றோம். ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆயத்தப்பணிகள் கீழே தருகின்றோம்.








12/11/19 செவ்வாய்க்கிழமை கூடுவாஞ்சேரி மாமரத்து ஈஸ்வரர் ஆலயத்தில்  அன்னாபிஷேகம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது  அனைவரும்! வருக!! ஈசன் அருள் பெறுக!! 

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சோற்றுக்குள் சொக்கன் - அன்னாபிசேகம் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_7.html

ஐப்பசி அன்னாபிஷேகம் தரிசனம் - 2018 - https://tut-temples.blogspot.com/2019/10/2018.html



No comments:

Post a Comment