மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா நம் தலத்தில் பகிர்வு செய்து
இருந்தோம். ஹோமத் திருவிழா மிக மிக கொண்டாட்டமாக இருந்தது. பொதிகை
வாசத்தில், நம் அரசனின் தரிசனம் சொல்வதிலே இனிமை என்றால், நேரில்
பங்கேற்றால் ..அருள் என்றால் அகத்தியர் தான் என்று சொல்லும் அளவிற்கு
சீரோடும், மிக மிகச் சிறப்போடும் நடைபெற்றது. அந்த ஹோமத் திருவிழாவின்
நிகழ்வின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம். நம்மால் நேரில் தான் சென்று
கலந்து கொள்ளவில்லை என்று கவலை வேண்டாம். இதோ இந்தப் பதிவின் மூலம் அருள்
பெற்றுக் கொள்ளுங்கள்.
சென்ற ஆண்டு நாம் இந்த யாகத்திற்கு செல்லவில்லை. இந்த ஆண்டும் நாம் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தோம். இந்த ஆண்டும் செல்ல இயலாத சூழலே. ஆனால் இந்த ஆண்டு யாகத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று குருவின் ஆணை நமக்கு கிடைத்தது. பின்னர் செல்வதற்கான பயண ஏற்பாடுகள் செய்தோம். குருவின் ஆணைப்படி இந்த யாகம் எம் வாழ்வின் திருப்புனையாகவே அமைந்தது.
சுமார் காலை 10 மணி அளவில் யாகம் நடக்கும் இடத்திற்கு சென்றோம்.
செல்லும் வழி எங்கும் பசுமை போர்த்தி இருந்தது.
நாம் சென்ற நேரம் அங்கே யாகம் செய்து கொண்டிருந்தார்கள். ஹோமத்தின் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம். ஒரு ஹோமம் செய்வதாயின் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யலாகா. ஹோமத்திற்கான பொருட்களை தயார் செய்வது முதல் குருவருள் வேண்டும், ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கடைபிடிக்க வேண்டும். ஹோமம் செய்பவர்கள் தங்களுக்கான நித்திய பூசை போன்றவற்றையும் தவறாது கடைபிடிக்க வேண்டும். அப்படிஇருந்தால் தான் யாகத்தின் பலன் உடனே கிடைக்கும். யாகத்திலேயே நாம் சில உணர்தல்களை பெற முடியும். இந்த ஹோமமும் அப்படியே. குருவருள் பற்றிட இந்த யாகம் காட்டியது.
அந்த இடம் முழுதும் யாகத்தீயின் அருளில் மிளிர்ந்து கொண்டிருந்தது. காணவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. பூக்களின் வாசத்தில், யாகத்தீயின் வெம்மையில் ஐந்து புலன்களும் ஒடுங்கியது. உடலுக்கு மட்டுமே தினமும் உணவை கொண்டிருக்கின்றோம். நம்மையும் அறியாமல் உயிருக்கான உணவு இந்த யாகத்தில் கிடைத்து. உயிர் உணர்வு பெற, மனோ லயம் பெற்றதை உணர்ந்தார்கள்.
நம் வழிகாட்டும் தெய்வங்களை அங்கே தரிசித்தோம். மேலே உள்ள கோயிலுக்கு சென்றோம்.
ஆதி வழிபாடு எப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்று அங்கே நாம் பார்த்த போது நம்மை வியப்பில் ஆழ்த்தினார்கள்.
மாசி மக சிறப்பு நாளில், தீர்த்தமாடி, ஹோமம் பார்ப்பது என்றால் சும்மாவா? குருவருளோடு இறையருளும் கிடைத்தால் தான் இது போன்ற நிகழ்வில் நாம் கண்டு கேட்டு உணர முடியும். அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழு அன்பர்களுக்காகவே இந்த சிறப்பு பதிவு என்ற யாம் எண்ணுகின்றோம். மீண்டும் மீண்டும் நம்மை அந்த பசுமை இடமும்,ஹோம இடமும் ஈர்த்தது.
இன்னும் மாசி மக அனுபவம் தொடரும்.

அங்கே ஒரு ஓரமாக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் நம் தல அன்பர்களுக்காக சங்கல்பம் செய்தோம்.
நம் வழிகாட்டும் தெய்வங்களை அங்கே தரிசித்தோம். மேலே உள்ள கோயிலுக்கு சென்றோம்.
ஆதி வழிபாடு எப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்று அங்கே நாம் பார்த்த போது நம்மை வியப்பில் ஆழ்த்தினார்கள்.
மாசி மக சிறப்பு நாளில், தீர்த்தமாடி, ஹோமம் பார்ப்பது என்றால் சும்மாவா? குருவருளோடு இறையருளும் கிடைத்தால் தான் இது போன்ற நிகழ்வில் நாம் கண்டு கேட்டு உணர முடியும். அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழு அன்பர்களுக்காகவே இந்த சிறப்பு பதிவு என்ற யாம் எண்ணுகின்றோம். மீண்டும் மீண்டும் நம்மை அந்த பசுமை இடமும்,ஹோம இடமும் ஈர்த்தது.
இன்னும் மாசி மக அனுபவம் தொடரும்.
மீள்பதிவாக :-
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
No comments:
Post a Comment