"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, June 27, 2019

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1)

 அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

நாம் ஏற்கனவே கூறியது போல், வள்ளிமலை தரிசனம் நம்மை இன்னும் பக்தியில் ஆழ்த்துகின்றது. பக்தி மட்டுமா என்றால் இல்லவே இல்லை. பக்தியின் உச்சம் காட்டுவதோடு ஞானத்தின் ஆழத்தையும் காட்டுகின்றது. வள்ளிமலை கிரிவலம், மலையேற்றம், தரிசனம், வள்ளிமலை தவப்பீடம், வள்ளிமலை சுவாமிகள் ஆசிரமம் என ஒவ்வொன்றாக வள்ளிமலை அற்புதங்கள் என தொடர்பதிவாக தர நாம் விரும்புகின்றோம். ஆனால் இந்த அழைப்பிதழை கொண்டு சேர்க்கும் வண்ணம் முதல் பதிவாக இங்கே தொடர்கின்றோம்.  அகத்தியர் ஜெயந்தி விழாவினை நம் தலத்தில்  ஒரு வாரப் பதிவுகளால் நிறைத்தோம். அதே போல் வள்ளிமலை பற்றியும் வாரம் முழுதும் நாம் பேசலாம். குருவருள் நம்மை உணர்த்த வேண்டி நிற்கின்றோம்.

ஆறுமுகனே தெய்வம்
அன்னோன் குருசாமி
வேறு தெய்வம் சொல்லில் விருதாவே
நூறு தரம் மெய் சொன்னேன்
மெய் சொன்னேன் வேத முடிவிதுவே
பொய் சொன்னால் வாய் புழுத்துப் போம்

என்று தண்டபாணி சுவாமிகள் பாடி இருக்கின்றார். நாம் இப்போது தான் முருகனின் அருட்கடலை சிறு துளியாக பருகி வருகின்றோம். முருகன் அருளை வள்ளிமலையில் நாம் பெற்ற போது, இனி வருடத்திற்கு ஒரு முறை நாம் வள்ளிமலை கட்டாயம் செல்ல வேண்டும் என்று மனதுள் இறுத்தினோம்.




அப்படி என்ன தான் இருக்கின்றது வள்ளிமலையில் என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது.குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். இந்த குன்றில் குமாரனோடு வள்ளியும் இருப்பதால் வள்ளிமலை மிக மிக பிரசித்தி பெற்றது. மலை என்றால் வலம் செல்வது நன்றாம். இங்கு கிரிவலம் செல்வது நம் வளங்களை தரும் என்பது திண்ணம். திருஅண்ணாமலை போன்று வணிக கடைகள் கிரிவலப் பாதையில் இல்லை. எனவே நாம் நம் விருப்பப்படி கிரிவலம் செல்லலாம். சுமார் 1 மணி நேரம் போதுமானது. இயற்கை காற்று, பசுமை காட்சிகள், வள்ளி பிறந்த இடம் என அனைத்தும் ஒருங்கே சேரும் போது வள்ளிமலை ...வளங்களை அள்ளித்தரும் மலை தான்.




அடுத்து இங்கே மலையேற்றம் மிக சிறப்பு பெற்றது. மலையேற்றத்திற்கு இங்கே படிகள் அமைத்து உள்ளார்கள். இடையில் ஓரிடத்தில் ஓய்வு மண்டபம் வரும். இங்கே சித்தர்களின் அருளாசி பெறலாம். இவையெல்லாம் அடுத்து தொடர்பதிவாக வர காத்திருக்கின்றது. நாம் மலை ஏறும் படிகளில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அல்லது அதனை ஒட்டிய நாட்களில் படி உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்த படி பூசைக்கு பின்னர் ஒரு பெரிய கதையே உண்டு. தொடர்பதிவில் ஒவ்வொன்றாக காணலாம். அதுவரை பொறுத்திருங்கள். நம் குழுவிற்கும் படி பூசை செய்ய அருள் கிடைத்திருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.




நாம் இங்கே அளிக்கும் ஒவ்வொரு பதிவும் நம் திட்டத்தின் படி நடப்பதில்லை. பரம்பொருளின் ஆணைப்படிதான் நடக்கின்றது. 2019 ம் ஆண்டை வள்ளிமலையில் ஆரம்பித்தோம்.

 முருகன் அருள் முன்னிற்க இந்தாண்டில் படி பூசை செய்ய வேண்டுகின்றோம்.

அதிசயம் அநேகம் உற்ற மலை வள்ளிமலை.இங்கே ஆண்டு தோறும் தந்தை திருப்புகழ் சிவம் நடமாடும் தெய்வமாய் விளங்கிய வாரியார் சுவாமிகளுடன் இணைந்து வள்ளிமலையில் 60 ஆண்டுகளாக மலைவலம் - படி உற்சவம் நடத்தி வருகின்றனர்.உண்மை தமிழ்ப் புத்தாண்டு இதுவே என பறைசாற்றுவதும் இவ்விழாவின் நோக்கமாகும்.



எப்படிச்  செல்வது ?

வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து
நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

மீள்பதிவாக:-

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள்  - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html



 வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment